Search This Blog

Friday, 30 September 2011

விடுகதை 226

பரிந்து பேசும்
    பரிகாரி;நமக்காய்
    பலியானவர்...
                       - யார்?
                இயேசுகிறிஸ்து (1 யோ 2:1,2)

Thursday, 29 September 2011

சிலுவையில் அறையப்பட்டவர்கள்

வேத பண்டிதர்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்..

1. திஸ்மாஸ்
2. கெஸ்டாஸ் என்று கண்டு பிடித்துள்ளனர்.

Wednesday, 28 September 2011

மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்

இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டு வந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்.

1. மெல்கொயர் – பரிசு பொன்.
2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

Tuesday, 27 September 2011

பரிசுத்த வேதம்

a) கையில் இருக்கவேண்டும் – 2 நாளா 17:9, ஏசா 34:16, யோவா 5:39, அப் 17:11,12, உபா 17:19,20.
 
b) வாயில் இருக்கவேண்டும் – மல் 2:7,6, 2 சாமு 23:2.
 
c) இருதயத்தில் இருக்க வேண்டும் – சங் 37:31, எஸ்றா 7:10, எரே 15:16, 31:33, சங் 119:165, 19:10, நெகே 8:8, லூக் 8:14.

Monday, 26 September 2011

அதிசயமான மூன்று

அதிசயமான மூன்று!
 
a) கர்த்தருடைய வேதம் அதிசயம் – சங் 119:18.
b) கர்த்தருடைய நாமம் அதிசயம் – நியா 13:8, ஏசா 9:6.
c) கர்த்தருடைய கிரியைகள் அதிசயம் – சங் 139:14, வெளி 15:3.

Sunday, 25 September 2011

நல்லது

தேவன்
 
a) வெளிச்சத்தை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:4.
b) பூமி, சமுத்திரத்தை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:10.
c) புல், பூண்டு, விருட்சங்களை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:12.
d) சுடர்கள், நட்சத்திரங்களை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:18.
e) ஜீவ ஜந்துக்கள், பறவைகளை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:21.
f) காட்டு, நாட்டு மிருகங்களை, ஊரும் பிரானிகளை சிருஷ்டித்து நல்லது என்று கண்டார் – ஆதி 1:25.
g) மனிதன் சிருஷ்டித்து அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கண்டார் – ஆதி 2:18.

Saturday, 24 September 2011

இதெக்கேல் நதி

ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.

Friday, 23 September 2011

விடுகதை 225

நடந்தனர்
      நடந்தனர்
      நல்ல
      நம் பிள்ளைகள்
      நடந்தனர்..
      நடந்த
      நற்செய்தியை
      நன்றாய் அறிந்ததும்
      நல்ல மகிழ்ச்சியே....
                     - எதிலே?
           சத்தியத்திலே (3 யோ 4)

Thursday, 22 September 2011

விடுகதை 224

இருக்கிறார்
    இருக்கிறார்...ஒளியிலே
    இருக்கிறார்..
    இயேசுவோடு ஐக்கியமாய்
    இருக்கிறார்..
    இருப்பவர்
    இவரிலே
    இருளுக்கு
    இடமில்லை...
                    -அவர் யார்?
               தேவன் (1 யோ 1:5)

Wednesday, 21 September 2011

விடுகதை 223

அல்லல் படும்படி
     அல்ல....
     அக் கண்ணில்
     அதிகக் கண்ணீர்
     அலைபோலே பெருகிட
      அடியேனின்
      அக்குணத்தை
      அறிந்திட
      அழகாக
      அனைவர்க்கும் எழுதினேன்.......
                  "அக்குணம்" எது?
விடை:
மிகுதியான அன்பு (2கொ 2:4)

Tuesday, 20 September 2011

இயேசு

வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.
 
1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.

Monday, 19 September 2011

முகம் பிரகாசித்த 3 பேர்கள்

தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்
 
1. மோசே – யாத் 35:28-30
2. இயேசு – மத் 17:2
3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56

Sunday, 18 September 2011

யோர்தான் நதி

யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19
2. 2 இரா 2:8
3. 2 இரா 2:13,14.

யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.

Saturday, 17 September 2011

ஜீவ விருட்சம்

“ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.

Friday, 16 September 2011

ஜெபம்

ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
 
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.

Thursday, 15 September 2011

எலியா


‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
 
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.

Wednesday, 14 September 2011

பாட்டு பாடின பெண்கள்

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
 
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.

Tuesday, 13 September 2011

விடுகதை 222

      இருந்தவர்
      இருக்கிறவர்
      இனி வருகிறவர்
      இவர்
      இருக்கை சிங்காசனம்...
      இறந்தோரிலிருந்து முதற்பிறந்தவர்..
      இவ்வுலகின் அதிபதி..
                     - அவர் யார்?
              இயேசுகிறிஸ்து ( வெளி 1:4,5)

தந்தி முறை


தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
 
What hath God wrought ? – Num 23:23.
தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.

Monday, 12 September 2011

கிறிஸ்துக்கள்

3 விதமான கிறிஸ்துக்கள்
 
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.

Sunday, 11 September 2011

கிதியோன்

கிதியோன் மீதியானியரை ஜெபிக்க சதாரணமான பொருள்களை பயன்படுத்தினார் – நியா 7:16-22.
 
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி

Saturday, 10 September 2011

தாவீது

தாவீது 3 முறை ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார்
 
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.

Friday, 9 September 2011

விடுகதை 221

விடுகதை:
      சாதிப்போம்...
      சாதிப்போம்...
      சாவாமையுள்ளவர்
      சாதனையாகவே
      சாவினின்றுயிரோடே
      சாட்சியாய் எழுந்ததை இல்லையென
       சாதிப்போம்..
            -நாங்கள் யார்?     

விடை:
சதுசேயர் (யோவான் 20:27)

Thursday, 8 September 2011

சேலா

“சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

Wednesday, 7 September 2011

அப்பா பிதாவே

“அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.

Tuesday, 6 September 2011

விடுகதை 220

அன்பினில் கறைகளாய்..
அடியுண்டோடும் மேகங்களாய்...
அசைவில்லா மரங்களும்...
அமளியான கடலலைகளும்...
அறநெறி தப்பி
அலைந்திடும் நட்சத்திரங்களாயிருக்கும்
அவர்களுக்காக வைக்கப்பட்டது......
                      - அது என்ன?
                 காரிருள் (யூதா 13)

Monday, 5 September 2011

நைல் நதி

மோசே குழந்தையாக எஇடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.

Sunday, 4 September 2011

வேதாகம பயணம்

நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் ,   எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த நேரத்தில் யோசுவா , நியாயாதிபதிகளின்  அழகிய கதவில் நின்றபடி ரூத் என்பவள்"சாமுவேல் , சாமுவேல் " என்று சத்தமாக அழைத்துக் கொண்டிருந்த போது அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். 
      

ஒரு கட்டத்தில், முதலாம் ராஜாக்களும் , இரண்டாம் ராஜாக்களுமாய் இருந்த , நாளாகமங்களின் ராஜாக்கள், எஸ்றாவையும் , நெகேமியாவையும் , எஸ்தரையும், அவர்களது சகோதரன் யோபு அடைந்திருந்த துரதிருஷ்டமான நிலைமையின் நிமித்தமாக சந்திக்க வந்து கொண்டிருந்தனர். 
          

அவர்கள் சங்கீதம் பாடத்தொடங்கியபடிக் குழந்தைகளுக்கு நீதிமொழிகளைப் பிரசங்கித்து சாலமோனின் உன்னதப்பாட்டைக் கற்பித்தனர்.
        

இதே கால கட்டத்தில் சக நிகழ்வாக,  ஏசாயா, எரேமியாவின் புலம்பலை, 
எசேக்கியேல், தானியேல், ஓசியா , யோவேல் என்ற நண்பர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஆமோஸும் , ஒபதியாவும் அருகில் இல்லை. 


        மூன்று நாட்களுக்குப் பிறகு யோனா , மீகாவும், நாகூமும் எருசலேமுக்குப் பயணம் செய்த கப்பலிலேயே பயணித்தார். ஆபகூக் , அதன் பிறகு செப்பனியாவை சந்திக்க, அவர் ஆகாய் எனப்பட்ட சகரியாவின் நண்பரும் , மல்கியாவின் ஒன்று விட்ட சகோதரரும் ஆனவரை அறிமுகப் படுத்தினார். 


            உடனடியாக சம்பிரதாயப்படி, மத்தேயு , மாற்கு , லூக்கா, யோவான் என்பவர்கள், அப்போஸ்தலருடைய நடபடிகளின்படி , ரோமர், Iகொரிந்தியர் போல நடந்து கொள்ளுவதில் கவனம் செலுத்தினர். ஏனென்றால் IIகொரிந்தியர் கூட்டத்தினர் எப்பொழுதும் கலாத்தியரிடம் சண்டையிடுபவர்களாக இருந்தனர். 


           அந்த நேரத்தில் அவர்கள் உணர்ந்து கொண்டதாவது, எபேசியரும் , பிலிப்பியரும் கொலோசேயருக்கு நெருக்கமானவர்கள் என்பதும் , முதலாம் தெசொலேனிக்கேயர் சந்திப்புக்குப் பிறகு இரண்டாம் தெசொலேனிக்கேயர் சந்திப்பு வருவதற்குள் அவர்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு சகோதரர்களை சந்திக்கும்படி அறிவுறுத்தப் பட்டார்கள். அவர்களோ தீத்துவின் வீட்டிற்கு , அவர்களின் தம்பி பிலமோனுக்கு எபிரேயர் மொழியை எழுதவும் , படிக்கவும் கற்பிக்கப் போயிருந்தனர். 


           இதனைக் கேள்விப்பட்ட யாக்கோபு , இரண்டுமுறை பேதுருவிடம் விளக்கும்படி கேட்டுக் கொண்ட காரியம் , மூன்று யோவான்களும் யூதாவிடம் தங்கள் பயணத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தைப் பகிர்ந்து கொண்டார் என்பதுவே.


Saturday, 3 September 2011

விடுகதை 219

அணிவோம்
       அணிவோம்
       அனைவரும்
       அணிவோம்...
       அழிந்திடும் சாயல்
       அறவே
       அகற்றி
       அக்களிப்போடு
       அதனையும்_
       அணிவோம்.... 
                     - எதனை?
           வானவருடைய சாயலை (1கொ 15:49)

Friday, 2 September 2011

விடுகதை 218

பெருகுது...
     பெருகுது...
     பெரும் பாடுகள்
     பெருகுது..
     பெரியவர் (இயேசு) கிறிஸ்துவால்,
     பெருகுது மற்றொன்றும்....
                 - அது  என்ன?
          ஆறுதல் (2கொ 1:5)

Thursday, 1 September 2011

விடுகதை 217

    சத்தியம் பேசுபவனின்
    சரீரம் குறித்து
     சர்ப்பத்திடம்(பிசாசு)
     சம்பாஷித்தார் தர்க்கமாய்..
                      - அவர் யார்?
            பிரதான தூதன் மிகாவேல் (யூதா 9)