Search This Blog

Thursday 14 July 2011

மோசேயின் கற்பலகை

யாத்திராகமம் 31:18ம் வசனத்தில் சீனாய் மலையில் அவர் மோசேயோடே பேசி முடித்த பின் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை கொடுத்தார் என்று வாசிக்கிறோம். அந்த கற்பலகை இப்போது இருக்கிறதா?



தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகள் இப்போது இல்லை. ஏனென்றால் மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வரும் போது இஸ்ரேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக செய்து கொண்டிருந்த அக்கிரம செயல்களை பார்த்து கோபமூண்டவராகி தன் கையில் இருந்த பலகைகளை உடைத்துப் போட்டுவிட்டார். யாத்திராகமம் 32:19. பின்பு தேவனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு இரண்டு கற்பலகைகளை எடுத்துக் கொண்டு சீனாய் மலையின் மேல் ஏறி தேவன் தன்னிடம் சொன்ன கட்டளைகளை கற்பலகைகளில் எழுதினான்.

இந்த வார்த்தைகளை நீ எழுது. யாத்திராகமம் 34:27.

அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான். - யாத்திராகமம் 34:28.

இஸ்ரவேல் ஜனங்களின் அக்கிரம செய்கையால் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகையை நாம் இழந்து போனோம்.

No comments:

Post a Comment