Search This Blog

Friday 15 July 2011

செங்கடலை கடந்தது எப்படி?

இஸ்ரேல் ஜனங்களை தேவன் செங்கடல் வழியாக வழி நடத்தினார். செங்கடலின் தண்ணீர் பிரிந்து இரண்டு பக்கமும் மதில் சுவராக நின்றது. கடலின் ஆழம் சுமார் நூறு அடி என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நூறு அடி தண்ணீர் வற்றியவுடன் இஸ்ரவேல் ஜனங்கள் நூறு அடி ஆழத்தில் இறங்கி பின் மேலே ஏறி வந்தார்களா? அப்படியானால் பிள்ளைகள் மிருக கீவங்கள் சகலவற்றையும் வைத்துக் கொண்டு அவ்வளவு பள்ளத்தில் இறங்கி பின் ஏறி வந்தது எப்படி?

யாத்திராகமம் 15:8 - உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்து போயிற்று.

நம் தேவன் எவ்வளவு ஆச்சரியமானவரும் நல்லவருமாய் இருக்கிறார் பாருங்கள் . கடலின் ஆழத்தில் உள்ள தண்ணீர் அப்படி பாறைக் கல்லைப் பூல உறைந்து போக செய்து விட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையில் நடப்பது போல் நடந்து சென்றார்கள்.

No comments:

Post a Comment