Search This Blog

Sunday 31 July 2011

மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலையும்

மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலையும் பற்றி கூறுக.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தேவன் மோசேக்கு காண்பித்து அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தில் பிரகாரம், வாசஸ்தலம், மகாபரிசுத்த ஸ்தலம் என்ற மூன்று முக்கியமான பகுதிகள் இருந்தன.மகாபரிசுத்த ஸ்தலம் என்கின்ற பகுதி, கூடாரத்தின் மேற்குப் பகுதியில் 15 அடி X 15 அடி X 15 அடி அளவில் திரைச் சீலைக்குப் பின்னாக அமைந்திருந்த பகுதி. இது தேவன் வாசம் செய்யும் இடத்திற்கு அடையாளமாக விளங்கியது. வருடத்திற்கு ஒரு முறைமட்டும் இதன் உள்ளே பிரதான ஆசாரியன் செல்லுவான். இதில் தான் உடன்படிகை பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. சித்திர வேலைகளான திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையிலே இருந்தது. கிறிஸ்து சிலுவையில் மரித்த போது தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. தேவனிடத்தில் சேர நமக்கு வழி ஏற்பட்டது. எபிரெயர் 9ம் அதிகாரத்தைப் படித்துப்பாருங்கள்

No comments:

Post a Comment