Search This Blog

Wednesday 20 July 2011

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமம் என்றால் என்ன?

இந்த உலகத்தில் உள்ள கணக்கிலடங்காத புத்தகங்களில், ஒரு புத்தகத்தை மட்டும் ஈடு இணையற்ற புத்தகம் என்று சொல்ல முடியும் என்றால் அந்தப் புத்தகம் பரிசுத்த வேதாகமம் ஆகும். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் புனிதமாய் போற்றும் வேதம் உண்டு. பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களின் வேதம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே படித்துப் பின்பற்ற வேண்டிய புனித நூல் பைபிள்.

பைபிள் என்ற வார்த்தை Bibilia (பிபிலியா) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாகும். இதன் பொருள் "புத்தகங்கள்" என்பதாகும். தலைசிறந்த புத்தகமாகிய பைபிள் 66 புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் இன்றைக்கு பேசப்படும் ஏறத்தாழ 5000 மொழிகளில் 2009 மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு புத்தகமாவது மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ஆதாரப்பூர்வமான ஒர் அறிக்கையின்படி 2 வாரங்களுக்கு ஒரு முறை மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய ஒரு குழு புதியதொரு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கிறார்கள். இயந்தரம் கொண்டு அச்சிடப்பட்ட முதல் புத்தகம் வேதாகமம்.


பரிசுத்த வேதாகமம் கடவுளைப் பற்றியும், மனிதனைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் பாவத்தின் பயங்கரமும் பரிசுத்தத்தின் மேன்மையும் விளக்கப் பட்டிருக்கிறது. பாவத்திலிருந்து மனிதனை மீட்க தேவன் வகுத்த திட்டத்தை பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது.

No comments:

Post a Comment