Search This Blog

Saturday 16 April 2016

லேவியராகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1.  கொண்டுவந்த இரண்டில், கொல்லப்பட்டது ஒன்று, உயிருடன் திரும்பினது மற்றொன்று - அவை என்ன? 
      இரண்டு குருவிகள் (14:4-7,49-53)
2. எவ்வீட்டிற்குள் போகிறவன், சாயங்காலம் வரை தீட்டுள்ளவன்? 
    அடைக்கப்பட்டிருக்கிற நாட்களில் குஷ்டமுள்ள வீட்டில் (14:44-46)
3.  சத்தமான குஷ்டரோகி போஜனபலிக்காக, கொண்டு வர வேண்டிய எண்ணெய் எது?  
       ஆழாக்கு (14:10)
4.  தோஷமுள்ள வீட்டை எத்தனை நாள் அடைத்து வைக்க வேண்டும்?
      ஏழு நாள் (14:36-38)
5. குருவியை எதின்மேல் கொல்ல வேண்டும்? 
      மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் (14:5,50)
6.  ஒழித்துவைக்க சொல்ல வேண்டியது என்ன?
      குஷ்டதோஷமுள்ள வீடு (14:36)
 7.  குஷ்டவீட்டை இடித்து, அவற்றை எங்கே கொண்டுபோக வேண்டும்? 
      பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான இடத்தில் (14:45) 

No comments:

Post a Comment