Search This Blog

Saturday 20 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. தண்ணீர் கிடைத்த இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
      எந்நக்கோரி (15:19) 
 2.  கணவனின் தோழனுக்கு கொடுக்கப்பட்ட பெண் எவ்வூராள்?
      திம்னாத் (14:1,20,15:2-6)
3. யூதர்களில், கன்மலைக்கு சிம்சோனிடத்தில் போனவர்கள் எத்தனை பேர்?
      மூவாயிரம் (15:11)
4. 1000 பேரை கொன்ற இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
      ராமாத் லேகி (15:16,17)
5. தான் ஆசைப்பட்ட பெண் தனக்கு கிடைக்காத கோபத்தில் 300 நரியை பிடித்து வாலில் தீ வைத்து கட்டி திராட்சத்தோட்டத்தையும் ஒலிவத்தோப்பையும் எரித்துப் போட்டவன் யார்?
 சிம்சோன் 15:4,5
6. தாகத்திற்கு தண்ணீர் இல்லையே இறைவா என்று கர்த்தரிடம் கேட்டபோது என்ன நடந்தது?
ஒரு பள்ளத்தைப் பிளக்கபண்ணி தண்ணீர் வரபண்ணி கொடுத்தார் 15:18,19
7. கழுதையின் தாடை எலும்பை வைத்து சிம்சோன் எத்தனை பேரை அடித்துக் கொன்றான்?
 1000 பேரை 15:15

No comments:

Post a Comment