Search This Blog

Thursday 11 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. கிதியோனின் வேறுபெயர்கள் எவை?
      யெருபாகால், இஸ்ரவேலனுடைய பட்டயம் (6:32,7:14)
2. கிதியோனின் கோத்திரம் எது?
       மனாசே (6:15)
3. பகலிலோ பயம், இரவிலோ கர்த்தர் சொன்ன காரியத்தை துணிந்து செய்தேன் - நான் யார்?
      கிதியோன் (6:27)
4. கற்பாறை மேல் ஊற்ற சொன்னது என்ன?
      ஆணம் (6:20)
5. கிதியோன் கட்டிய பலிபீடப் பெயர் என்ன?
      யெகோவா ஷாலோம் (6:24)
6. *🦗🦗🦗* - இவைகளுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டவர்கள் யார்?
      மீதியானியர், அமலேக்கியர், கிழக்கத்திப் புத்திரர் (6:4,5, 7:12)
7.  வந்தது தேவதூதர் என்று அறிந்துக் கொள்ளாமல் அவர் சொற்படி சிறப்பான உணவு செய்து கொடுத்தவன் யார்?
 கிதியோன் நியா 6:21,22
8. கர்த்தருக்கும் மனிதனுக்கும் பயந்து மிக தந்திரமாய் செயல்பட்டது யார்?
 கிதியோன் நியா 6:27 

No comments:

Post a Comment