Search This Blog

Sunday 21 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. சிம்சோனால் 3முறை ஏமாற்றப்பட்டவள் எங்கு குடியிருந்தாள்? 
       சோரேக் ஆற்றங்கரையில் (16:4,15) 
2. இறக்கும் போது, தன்னோடு பல உயிர்களை⚰ பலி வாங்கியது யார்? 
      சிம்சோன் (16:30)
3.பணத்திற்காக, தன்னோடு அன்பாயிருந்தவனுக்கு துரோகம் பண்ணியது யார்? 
      தெலீலாள் (16:4-19)
4.சிம்சோன் கதவுகளை சுமந்து கொண்டு போன இடம் எது?     
      எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்கு (16:3)
5. பெலிஸ்தியரின் தெய்வம் யார்? 
      தாகோன் (16:23)
6.  சிம்சோனை தெலீலாள் பெலிஸ்தரிடம் பலமுறை காட்டிகொடுத்த போது கூட தன் புத்தியீனத்தை அனைத்தையும் மாற்றிக் கொள்ளாமல் இருந்தான் ஏன்?
 அனுதினமும் ஆசைக்காட்டி அன்போடு பேசி மயக்கினால் 16:16
7. சிம்சோனை தெலீலாள் எத்தனை விதமான கயிறால் கட்டினாள்?
 (மூன்றுவிதமான கயிறுகளினால்)

  •  உலராத பச்கையான கயிறு 16:7
  •  புதுக் கயிறு 16:11
  •  நெசவு நூல் (கயிறு) 16:13,14
8. ஒரு கிறிஸ்தவன் (சிம்சோன்) அந்நிய பெண்ணிடன் தொடர்பு வைத்துக் கொண்டப்படியால் அவன் முடிவு எப்படி இருந்தது?

  •  கர்த்தர் அவனுடன் இருந்து விலகினார் 16:20
  •  புறஜாதிகளுக்குள்ளே பரியாசம் பண்ணப்பட்டான் 16:27
  •  தப்பி ஓடாதப்படி இரு கண்களும் பிடுங்கப்பட்டது 16:21
  •  அவன் மரணம் அவர்களுக்கு இன்பமாய் இருந்தது 16:23
  •  இரு கை காலூம் தூணில் கட்டப்பட்டது 16:26

No comments:

Post a Comment