Search This Blog

Tuesday 15 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரின் தீர்க்கத்தரிசிகளை கொன்றது யார்? பாகாலின் தீர்க்கத்தரிசிகளை கொன்றது யார்?
      யேசபேல், எலியா (18:13,40)
2. தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை - யாரை?
     எலியா (18:10)
3. தெய்வம் யார் - போட்டி எங்கு நடைபெற்றது? போட்டியாளர்கள் யார்?
      கர்மேல் பர்வதம், எலியா - பாகால் தீர்க்கத்தரிசிகள் (18:20-39)
4. பலிபீடத்தில் எத்தனை குடங்கள் தண்ணீர் ஊற்றப்பட்டது?
      பன்னிரெண்டு (18:34)
5. ஆகாப் தேடிப்போனது என்ன?
      புல் (18:5,6)
6. ஊழியக்காரன் சமுத்திரமுகமாய் போய் பார்த்தது எத்தனை முறை?  
      8 (18:43,44)
7. தண்ணீர் வற்றியது எங்கே? தண்ணீரை நக்கியது எது? 
      கேரீத் ஆறு (17:7), கர்த்தரின் அக்கினி (18:38)
8. இஸ்ரவேலில் அந்நிய தெய்வத்தை வழிபடாமல் - கர்த்தரால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஒபதியாவால் காக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
     ஏழாயிரம் பேர், நூறு (19:18, 18:4)

No comments:

Post a Comment