Search This Blog

Monday 16 May 2016

எண்ணாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. மோசேக்கு விரோதமாய் எழும்பியவனின் தாத்தா யார்?
      கோகாத் (16:1-3)
2. பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிக்கப்பட்டவை எவை?
      சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கல தூபகலசங்கள் (16:39,40)
3. கர்த்தரின் அக்கினி எத்தனை பேரை பட்சித்தது?
      இருநூற்று ஐம்பது பேர் (16:35)
4. ஜனங்களுக்காக பாவநிவிர்த்தி செய்தவன் யார்?
      ஆரோன் (16:47) 
5. வாதையினால் செத்தவர்கள் எத்தனை பேர்? 
      பதினாலாயிரத்து எழுநூறு பேர் (16:49)
6. மோசேக்கு கடுங்கோபம் மூள காரணமாயிருந்தவர்கள் எந்த வம்சத்தார்? 
      ரூபன் (16:1,12-15)
7. மோசேயின் அழைப்பை மறுத்தவர்கள் யார்?
      தாத்தான், அபிராம் (16:12)

No comments:

Post a Comment