Search This Blog

Thursday 31 March 2011

விடுகதை 90

விடுகதை:
குருவி போல கூவி
புரவைப் போல புலம்பி
உயர உயரத் தேடி
கண்கள் பூத்து போயி
உயிரைத் திரும்ப பெற்றான் -அவன் யார்?

விடை:
எசேக்கியா ராஜா – ஏசா 38:9-16.



Wednesday 30 March 2011

விடுகதை 89

விடுகதை:
தண்ணீருக்குள் ஏழு
தலை நிமிர்ந்தது வாழ்வு -அது யாருக்கு?

விடை:
நாகமான் – 2இரா 5:1-14.



Tuesday 29 March 2011

விடுகதை 88

விடுகதை:
எட்டி எட்டிப் பார்த்து
பெட்டியைக் கட்டிப் பிடித்து
எட்டா இடம் சென்றனர்
ஐம்பதினாயிரத்து எழுபது பேர் -அவர்கள் யார்?

விடை:
பெத்சிமேஸின் மனுசர் – 1 சாமு 6:19.



Monday 28 March 2011

விடுகதை 87

விடுகதை:
மழையோ மழை
கொட்டோ கொட்டென கொட்டும் மழை
முடையில்லாத காரணத்தால்
அரையைக் கட்டிக் கொண்டு ஓடினான் -அவன் யார்?


விடை:
எலியா – 1 இரா 18:45,46.


Sunday 27 March 2011

விடுகதை 86

விடுகதை:
உண்ணா சொத்து மண்ணாய் போச்சு
பிறர் சொத்தை கவர்ந்ததால்
உயிரேப் போச்சு -அவன் யார்?


விடை:
ஆகாப் – 1 இரா 21:1-39.


Saturday 26 March 2011

விடுகதை 85

விடுகதை:
கடன் அன்பை முறிக்கும் என்று
கடன் கொடுக்க தயங்கும் போது
கர்த்தருக்கே கடன் கொடுப்பான்
கனிவு நிறைந்த மனிதன் இவன் -அவன் யார்?


விடை:
ஏழைக்கு இரங்குகிறவன் – நீதி 19:17.


Friday 25 March 2011

விடுகதை 84

விடுகதை:
பழுத்த ஓலையைப் பார்த்து
குருத்து ஓலை சிரித்ததாம்
பழுத்த இவர் தலையைப் பார்த்து
குருத்துக்கள் சிலர் கிண்டல் செய்தனர் -அவர் யார்?


விடை:
எலிசா – 2 இரா 2:23.


Thursday 24 March 2011

விடுகதை 83

விடுகதை:
ஒன்றே ஒன்றை வாங்கி
உருட்டிப் புரட்டிப் பார்த்து
குழியைத் தோண்டி புதைத்து
வெளியே எடுத்துக் கொடுத்து
இருட்டு அறையில் விழுந்தான் -அவன் யார்?


விடை:
ஒரு தாலந்து வாங்கியவன் – மத் 25:24-30.


Wednesday 23 March 2011

விடுகதை 82

விடுகதை:
ஏ.கே 47 கையிலே
ஐந்து குண்டுகள் பையிலே
எதிரி வந்தான் எதிரிலே
எடுத்து அடித்தான் நெற்றியிலே -அவன் யார்?


விடை:
தாவீது – 1 சாமு 17:40-49.


Tuesday 22 March 2011

விடுகதை 81

விடுகதை:
ஆவின் பால் குடித்தாலும்
ஆரோக்கியா பால் குடித்தாலும்
கிடைக்காத சக்தி தரும்
களங்கமில்லாத ஞானப் பால் -அது எந்தப் பால்?


விடை:
திருவசனம் – 1 பேதுரு 2:3.


Monday 21 March 2011

விடுகதை 80

விடுகதை:
வாலை ஒட்ட வெட்டினாலும்
வாலாகவே மீண்டும் இருப்பான் -அவன் யார்?


விடை:
பொய்தீர்க்கதரிசி – ஏசா 9:14,15.


Sunday 20 March 2011

விடுகதை 79

விடுகதை:
அப்பா அம்மா என்று
குழந்தை கூப்பிடும் முன்பே
அசீர்ரியா ராஜாவின் முன்னால்
ஆஸ்திகள் எல்லாம் சேரும் -அக்குழந்தையின் பெயர் என்ன?


விடை:
மகேர் – சாலால் – அஷ் – பாஸ் – ஏசா 8:3,4.


Saturday 19 March 2011

விடுகதை 78

விடுகதை:
உல்லாசமான பெண்ணவள்
உதாசீனமாக வாழ்ந்தவள்
உடலிலே மட்டும் நடந்தவள்
உயிரிலேயோ செத்தவள் -அவள் யார்?


விடை:
சுகபோகமாய் வாழ்கிறவள் – மத் 25:24-30.


Friday 18 March 2011

விடுகதை 77

விடுகதை:
தேர்தல் பிரச்சாரம்
வேட்பாளர்கள் இரண்டு
வாக்குச் சீட்டும் இரண்டு
வெற்றியோ ஒன்று -அது யாருக்கு?


விடை:
மத்தியா – அப் 1:23-26.


Thursday 17 March 2011

விடுகதை 76

விடுகதை:
சிக்குன் குன்யா வந்தது
சிலரைத் தாக்கிச் சென்றது
எகிப்தில் வாதை வந்தது
இவர்களைத் தூக்கிச் சென்ரது -அவர்கள் யார்?


விடை:
தலைச்சன் பிள்ளைகள் சங்காரம் – யாத் 12:29,30.


Wednesday 16 March 2011

விடுகதை 75

விடுகதை:
வானத்திலே கைப்பிடி
பூமியிலே குடைபிடி -அது எதினால்?


விடை:
எலியாவின் கருத்தான ஜெபம் – யாக் 5:17.


Tuesday 15 March 2011

விடுகதை 74

விடுகதை:
பிள்ளை பெற்றால் போதுமா?
பிறந்து வளர்ந்த பிள்ளையை
அங்கே தானே விட்டு விட்டு
அலறியடித்தல் தேவையா? -அவர்கள் யார்?


விடை:
யோசேப்பு, மரியாள் – லூக் 2:40-51.


Monday 14 March 2011

விடுகதை 73

விடுகதை:
குடு குடு தாத்தா
கூன் விழுந்த தாத்தா
பழசையெல்லாம் விட்டு விட்டு
குழந்தையாக துள்ளித் திரிந்தார் - அது என்ன?


விடை:
புது சிருஷ்டி - 2கொரி 5:17.


Sunday 13 March 2011

விடுகதை 72

விடுகதை:
கோக் வேண்டாம், பெப்சி வேண்டாம்
பூஸ்ட்வேண்டாம் காம்ப்ளான் வேண்டாம்
ஓட ஓட களைப்பு இல்லை
நடக்க நடக்க சோர்வு இல்லை -அது யாருக்கு?


விடை:
கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் – ஏசா 40:31.

Saturday 12 March 2011

விடுகதை 71

விடுகதை:
ஆகாயம் முழுவதும் சுற்றினாலும்
ஆராய்ந்து முடியாது
எதைக் கொண்டு கூட்டினாலும்
எண்ண முடியாது – ஆனால்
அனு தினமும் ஆண்டவர்
நம் வாழ்வில் செய்வது -அது என்ன?


விடை:
பெரிய காரியங்கள், அதிசயங்கள் – யோபு 5:9.


Friday 11 March 2011

விடுகதை 70

விடுகதை:
பூமியெல்லாம் காய
தோல்மட்டுமே நனைய
தோல் மட்டும் காய
பூமியெல்லாம் நனைய
வேண்டிக் கொண்டான் ஒருவன் -அவன் யார்?


விடை:
கிதியோன் – நியா 6:36-40.


Thursday 10 March 2011

விடுகதை 69

விடுகதை:
உத்தமமான செயலம்மா
நியாயமான செயலம்மா
இயேசு செய்த செயலம்மா
இன்றே செய்ய வேணுமம்மா -அது என்ன?


விடை:
கீழ்ப்படிதல் – லூக் 2:51, எபே 6:1.


Wednesday 9 March 2011

விடுகதை 68

விடுகதை:
பல நாள் கள்வன்
ஒரு நாள் பிடிபடுவான்
கள்வன் இல்லாத இவன்
கல்வனாக பிடிப்பட்டான் -அவன் யார்?


விடை:
பென்யமீன் – ஆதி 44:1-17.


Tuesday 8 March 2011

விடுகதை 67

விடுகதை:
மோசே பார்த்தது – கானான் அல்ல
தேவன் இறங்கியது – தேவாலயம் அல்ல
எரிந்து பிரகாசித்தது – பலிபீடம் அல்ல
அற்புத காட்சியது – செங்கடல் அல்ல -அது என்ன?


விடை:
எரியும் முட்செடி – யாத் 3:1-5.


Monday 7 March 2011

விடுகதை 66

விடுகதை:
ஈரேமு வருஷமாய்
இளைத்து களைத்து உழைத்தான்
இதயத்திற்கு ஏற்றவளை
இணையாகக் கொண்டான் -அவன் யார்?


விடை:
யாக்கோபு – ஆதி 29:18-30.


Sunday 6 March 2011

விடுகதை 65

விடுகதை:
மொழிகளில் செம்மொழி
வழிகளில் நேர்வழி
நீதியில் உயர்ந்தது
நீங்கள் படிக்க வேண்டியது -அது என்ன?


விடை:
நீதிமொழிகள் புத்தகம் – நீதி 1:31 அதி


Saturday 5 March 2011

விடுகதை 64

விடுகதை:
சூது வாது அற்றவன்
சூப்பராக வாழ்ந்தவன்
இயேசுவைத் தேடி வந்தவன்
இயேசுவால் சாட்சி பெற்றவன் -அவன் யார்?


விடை:
நாத்தான்வேல் – யோவா 1:45-50.


Friday 4 March 2011

விடுகதை 63

விடுகதை:
அம்மா உண்டு, அப்பா இல்லை
அண்ணன் தம்பி யாரும் இல்லை
அன்றொரு நாள் மரித்த அவன்
ஆண்டவர் இயேசுவால் உயிர் பெற்றான் -அவன் யார்?


விடை:
நாயினூர் விதவையின் மகன் – லூக் 7:11-15.


Thursday 3 March 2011

விடுகதை 62

விடுகதை:
நானா நீயா போட்டி
நாசமான புத்தி – அது
அண்ணன் முதுகில் ஏற
தம்பி தலை கீழே -அவன் யார்?


விடை:
ஆபேல் – ஆதி 4:3-8.

Wednesday 2 March 2011

விடுகதை 61

விடுகதை:
பள்ளியில் எழுதினாலும்
பட்டங்களில் எழுதினாலும்
கட் அவுட்டில் எழுதினாலும்
கண்ட இடத்தில் எழுதினாலும்
இதில் எழுதவில்லையானால்
வாழ்ந்தும் பயனில்லை -அது எங்கே?


விடை:
ஜீவ புஸ்தகம் – வெளி 20:15.

Tuesday 1 March 2011

விடுகதை 60

ஒன்றை ஏழால் பெருக்கி
மூன்றை அதில் சேர்த்து
நான்காய் அது மாற
ஒன்று பார்த்து திகைத்தது - அது யார்?


விடை:
நேபுகாத்நேச்சார் – தானி 3:1-24.