Search This Blog

Thursday 20 February 2014

கேனான்(Canon)

பைபிளை படியெடுத்து எழுதப் பயன்படுத்தப்பட்ட நாணல் குச்சிகளுக்கு கேனான் (Canon) என்று பெயர். கேனான் என்றால் நானற்குச்சி என்று பொருள். இதைப் பின்பற்றியே நம்மைப் படயெடுக்கும் புகைப்படக்கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு கேனான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ரோம நாணையம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் எருசலேம் தேவாலயத்தில் ரோம நாணையங்களைக் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை காரணம் அதில் ரோம அரசனின் பெயரும், அவனுடைய உருவமும்,
பெயரோடு கூட கடவுளுடைய குமாரன் என்ற வாக்கியமும் இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது, ஆகவே ஆலய
வளாகத்தில் பிரதான ஆசாரியர்களே காசுக்கடை நடத்தி எட்டு ரோம
நாணையங்களுக்கு ஒரு சேக்கல் என்ற விதத்தில் காசுகளை மாற்றி கொள்ளை இலாபம் அடித்தார்கள...

சமாரியர்கள்

சமாரியர்கள் எனப்படுகிறவர்கள், யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்ட போது, பாலஸ்தீனாவில் மீந்திருந்த யூதர்கள், இவர்கள்பாபிலோனிய
போர்வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கும், கட்டாய திருமணத்திற்கும் ஆளாக்கப்பட்டு இணக்கலப்பு அடைந்தார்கள்.
சிறையிருப்பிலிருந்து திரும்பிய
இணக்கலப்பு ஆகாத யூதர்கள்
சமாரியர்களை இணக்கலப்பின் நிமித்தம் தாழ்ந்த குடிகளாக கருதினார்கள்.

செலோத்தே (Zelotes)

இயேசு கிறிஸ்துவின் சீடர்களில்
செலோத்தே எனப்பட்ட சீமோனும் ஒருவர்; யூதர்களில் செலோத்தே (Zelotes) எனப்பட்ட ஒரு குழுவினர் இருந்தார்கள், அவர்கள் ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகக் கலகம் செய்த புரட்சியாளர்கள் ஆவர் இவர்கள் ரோமர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கம் நடத்தியவர்கள்
ஆவர்.

Wednesday 19 February 2014

INRI

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்கட்டிருக்கும் படங்களில் INRI என்று எழுதப்பட்டிருப்பதற்கான அர்த்தம் இதுதான் Iesus Nazarenus Rex Iudaeorum இது வேதத்தில் யோவான் 19:19-20 ஆகிய  வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது,

இறைமகன் இயேசுவைக் குறித்து ரோம ஆளுநர் பிலாத்து எழுதி வைத்த வராற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகள்தான் இவைகள் 'நசரேயனாகிய இயேசு யூதர்களின் அரசர் ' இதுவே அதன் பொருள் இது எபிரேயம் , இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்ததாக சத்திய வேதம் சான்று பகர்கின்றது...