Search This Blog

Thursday 31 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேல் குமாரரின் நாமங்கள் எங்கே பதிக்கப்பட வேண்டும்?
      பொன் குவளைகளில் (39:6)
2. பரிசுத்த கிரீடத்தில் எழுதப்பட்டது என்ன?
      கர்த்தருக்குப் பரிசுத்தம் (39:30) 

Wednesday 30 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. வாசஸ்தலத்துப் பொருட்கள் எண்ணிக் கொடுக்கப்பட்டது யாரிடம்?
      இத்தாமார் (38:21)
2. வலைப்பின்னல் போன்று செய்யப்பட்டது என்ன?
      வெண்கலச் சல்லடை (38:4)
3. பரிசுத்த வேலைக்கென்று கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, வெண்கல அளவுகள் எவ்வளவு?
      பொன் - 29 தாலந்தும் 730 சேக்கல் நிறை, வெள்ளி - 100 தாலந்தும் 1775 சேக்கல் நிறை, வெண்கலம் - 70 தாலந்தும், 2400 சேக்கல் நிறை (38:24,25,29)

Tuesday 29 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1. குத்துவிளக்கின் கிளைகள் மற்றும் அகல்களின் எண்ணிக்கை எத்தனை?
      ஆறு கிளைகள், ஏழு அகல்கள் (37:18,23)
2.  கிருபாசனத்தை செய்தது யார்?
      பெசலெயேல் (37:1-6)
3. மேஜையின் அளவுகள் என்ன?
      இரண்டு முழ நீளம், ஒரு முழ அகலம், ஒன்றரை முழ உயரம் (37:10)
4. தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக செய்யப்பட்டவை எவை?
       அபிஷேகதைலம், தூபவர்க்கம் (37:29)

Monday 28 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. விநோத நெசவுவேலையாக செய்யப்பட்டது என்ன?
      கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகள்  (36:8)
2. பலகைக்கு, சம தூரமான அளவில் இருந்தவை எவை?
       இரண்டு கழுந்துகள் (36:22)
3. பலகைகளின் நடுவில் உருவப்பாயும்படி செய்யப்பட்டது என்ன?
      நடுத்தாழ்ப்பாள் (36:33)
4. வாசஸ்தல மேற்கூடாரம் போட செய்யப்பட்ட மூடுதிரைகளின் எண்ணிக்கை எத்தனை?
       பதினொரு (36:14)

Sunday 27 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. போதிக்கும் வரம் எவர்களுக்கு அருளப்பட்டது? 
      பெசலெயேல், அகோலியாப் (35:30-34)
2.  சமைக்கக் கூடாத நாள் எது? 
      ஓய்வுநாள் (35:3)
3. ஞான எழுப்புதலடைந்த பெண்கள் செய்தது என்ன?
      வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள் (35:26)
4.  இரத்தின கற்களை கொண்டு வந்தவர்கள் யார்?
      பிரபுக்கள் (35:27)
5. கர்த்தரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவனின் தந்தை யார்?
       ஊரி (35:30)
   

Saturday 26 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்


1. மோசேயுடன் சீனாய் மலையில் ஏறிப்போனவர்கள் எத்தனை பேர்?  
      ஒருவருமில்லை (34:2-5)
2. கர்த்தரின் சந்நிதியில் மோசே முக்காடு அணிந்திருந்தாரா?
     இல்லை (34:34)
3. பண்டிகை கொண்டாட வேண்டிய மாதம் எது? 
      ஆபீப் (34:18)
4. மோசே மலையிலிருந்த நாட்கள் எத்தனை?
      நாற்பது நாள் (34:28)
5. வருடத்தில் 3 முறை கர்த்தரின் சந்நிதியில் வர வேண்டியவர்கள் யார்?
      ஆண்மக்கள் எல்லாரும் (34:23)
6. கர்த்தரின் நாமம் என்ன?
      எரிச்சலுள்ள தேவன் (34:14)

Friday 25 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. மோசே கர்த்தரிடம் காண்பிக்க சொன்னது என்ன?
       கர்த்தரின் மகிமையை (33:18)
2. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றது எது?
      மேகஸ்தம்பம்  (33:9)
3.  கர்த்தர் மோசேயை எதினால் மூடுவதாக சொன்னார்?
       கரத்தினால் (33:22)
4. ஆபரணங்கள் கழற்றி போடப்பட்ட இடம் எது?
      ஓரேப் மலையருகே (33:6)

Thursday 24 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1.கர்த்தரின் புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படும் பெயர் யாருடையது?
      கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தவனின் பெயர்  (32:33)
2. எரிக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, தூவப்பட்டு, குடிக்கப்பட்டது என்ன? 
      கன்றுக்குட்டி (32:20)
3. சிற்பக்கலைஞான ஆசாரியன் யார்?
      ஆரோன் (32:4)
4. லேவியர் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
      3000 பேர் (32:28)
5. தன் இன ஜனத்துக்காக கர்த்தரிடம் மன்றாடியவன் யார்?
      மோசே (32:11-14,32)

Wednesday 23 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1.  சாட்சிப் பலகைகள் எதினால் எழுதப்பட்டிருந்தது?
     தேவனுடைய விரலினால் (31:18)
2. கர்த்தருக்கு செலுத்த வேண்டிய கேராவின் அளவு எது?
     அரைச்சேக்கல் = 10 கேரா (1 சேக்கல் = 20 கேரா) - (31:13)
3. தேவாவியினால் நிரப்பப்பட்டது யார்?
      பெசலெயேல் (31:2-5)

Tuesday 22 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. ஒரு குடத்தின் அளவு எடுக்க சொன்னது என்ன?
      ஒலிவ எண்ணெய் (30:24)
2. இதை செலுத்துவதில் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் வித்தியாசமில்லை - எதை?
      பாவநிவாரணப் பணம் - அரை சேக்கல் (30:15)
3. மோசே செய்கிற முறைப்படி எதை செய்யக்கூடாது என்றார்?
      தூபவர்க்கத்தை (30:37)
4. வருஷம் ஒரு தரம் பிராயச்சித்தம் பண்ண வேண்டியது எதன்மேல்?
      தூபபீடத்தின் கொம்புகளின்மேல் (30:10)

Monday 21 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரின் சந்நிதி எதினால் பரிசுத்தமாகும்?
      கர்த்தரின் மகிமையினால் (29:42,43)
2. சகோதரனால் ஆசாரிய அபிஷேகம் செய்யப்பட்டது யார்?
       ஆரோன் (29:5-7)
3. பரிசுத்தமானவைகளை புசிப்பவர்கள் யார்?
      ஆரோனும் அவன் குமாரரும் (29:32,33)
4. கைகளை வைக்க வைக்க, அடிக்கப்பட்டவை எவை?
      காளை, 2 ஆட்டுக்கடா (29:3,10,11,15,16,19,20)
5. இதை தொட்டால் பரிசுத்தம் - எதை?
      பலிபீடத்தை (29:37)
6. அடை பண்ண வேண்டிய மாவு எது?
      கோதுமை மாவு (29:2)

Sunday 20 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1.  🛎, கனி - இவை தொங்க வேண்டியது எங்கே?
      அங்கியின் ஓரங்களில் (28:34)
2. இஸ்ரவேல் குமாரரின் நாமங்களை எங்கே பதிக்க வேண்டும்?
      பொன் குவளைகளில் (28:11)
3. பரிசுத்தமானவைகளின் தோஷத்தை சுமப்பது யார்?
      ஆரோன் (28:38)
4. இஸ்ரவேல் குமாரரிலிருந்து, பிரிக்கப்படும் குமாரர்கள் யார்?
      ஆரோனின் குமாரர்கள் - 4 பேர் (28:1)
5. 🔲,✌🏻,🤙🏻,🤙🏻, - இவை எதனுடைய அளவுகள்?
      நியாயவிதி மார்ப்பதக்கம்  (28:15,16)
6. நியாயவிதி மார்ப்பதக்கத்தில் வைக்க வேண்டிய இரண்டு எவை?
      ஊரீம் தும்மீம் (28:30)
7. சத்தம் கேட்கவில்லையென்றால், சாவு - யாருக்கு?
       ஆரோன் (28:35)

Saturday 19 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1.  குத்துவிளக்கிற்கு தேவையான எண்ணெய் எது?
      ஒலிவ எண்ணெய் (27:20)
2.  பலிபீடத்தின் பாதி உயரத்தில் இருக்கும்படி, வைக்க வேண்டியது என்ன?
     வெண்கலச் சல்லடை (27:4,5)
3.  1⃣0⃣0⃣,5⃣0⃣, 5⃣ - முழ அளவுகள் எதனுடையது?
      பிரகாரம் (27:18)
4. 🥄🥄  - இவை செய்யப்படுவது எதனால்?
      வெண்கலத்தால் (27:3)

Friday 18 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1.  இருஸ்தலங்களுக்கும் பிரிவுண்டாக்குவது எது?
      திரைச்சீலை (26:33)
2.  சித்தீம் மர பலகைக்கு🧱 இருக்க வேண்டியது என்ன?
      இரண்டு கழுந்துகள் (26:17)
3. காதுகளை எதனால் உண்டுபண்ண வேண்டும்?
      இளநீலநூலால் (26:4)

Thursday 17 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் சொன்ன காணிக்கைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
     16 (25:3-7)
2. மேஜையின் மேல் வைக்க வேண்டியது என்ன?
     சமுகத்தப்பங்கள் (25:30)
3. பெட்டியிலிருந்து எதை கழற்றக்கூடாது?
     தண்டுகள் (25:15)
4. சித்தீம் மரப்பெட்டியில் வைக்க வேண்டியது என்ன?
      சாட்சிப்பிரமாணம் (25:10,16)

Wednesday 16 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. மோசே வாசித்த புஸ்தகம் எது?
      உடன்படிக்கையின் புஸ்தகம் (24:7)
2. மோசே நாட்டின தூண்கள் எத்தனை?
      பன்னிரண்டு (24:4)
3. ☁ - 🤓🦮 மலையை எத்தனை நாள் மூடியிருந்தது?
      ஆறு நாள் (24:16)
4. கர்த்தருக்கு பலி செலுத்தியவர்கள் யார்?
       இஸ்ரவேல் புத்திரரின் வாலிபர் (24:5)

Tuesday 15 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. குருடராக்குவது எது?
     பரிதானம் (23:8)
2. கர்த்தர் யாரை நீதிமானென தீர்ப்பதில்லை?
      துன்மார்க்கனை (23:7)
3. யாரை கோபப்படுத்தக் கூடாது?
     தூதனை (23:20,21)
4.  யார் பெயரை சொல்லக்கூடாது?
      அந்நிய தேவர்களின் (23:13)
5. அந்நிய ஜாதிகளை துரத்த கர்த்தர் அனுப்புவது என்ன?
     குளவிகள் (23:28)

Monday 14 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பீறுண்டவைகளுக்காக ஒப்புவிக்க வேண்டியது என்ன?
      சாட்சியை (22:13)
2.  நம் நாட்டின் ஜனாதிபதியை சபிக்கலாமா?
       சபிக்க கூடாது (22:28)
3.  யாரை உயிரோடு வைக்கக்கூடாது?
      சூனியக்காரியை (22:18)
4. எவர்களை ஒடுக்கும் சத்தம் கேட்டால், கர்த்தர் கொலையாளியாவார்? 
      விதவை, திக்கற்றப்பிள்ளை (22:22-24)

Sunday 13 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. அடித்தாலும், சபித்தாலும் மரணம் நிச்சயம் - எவர்களை?
     தகப்பன், தாய் (21:15,17)
2. நான் மனுஷனைக் கொன்றால், என் எஜமானுக்கு சாவு உறுதி - நான் யார்?
     முட்டுகிற மாடு (21:29)
3. விடுதலையாக மனமில்லாதவனுக்கு, குத்த வேண்டியது எதை?
     காதை (21:5,6)

Saturday 12 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. புகைந்தது எது?
      மலை (20:18)
2.  யாரைக் குறித்து 3⃣ - ம்,4⃣ - ம் தலைமுறையிலும் விசாரணை நடக்கும்?
      கர்த்தரைப் பகைக்கிறவர்களைக் (20:5)
3. யார் தண்டனைக்கு தப்புவதில்லை?
      கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குகிறவன் (20:7)
4. எங்கு படிகள் மேல் ஏறிப்போகக் கூடாது?
       பலிபீடத்தின் மேல் (20:26)

Friday 11 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. தொட்டால் சாவு - எதை?
     மலை (19:12)
2. ஏறின என்னை இறங்கச்சொல்லி, வேறொருவருடன் வர கட்டளைப் பெற்றேன் - யாருடன்?
     ஆரோனுடன்  (19:24)
3. கர்த்தர்✝ இஸ்ரவேலரை எப்படி சுமந்தார்?
     கழுகுகளுடைய செட்டைகளின்மேல் (19:4)
4. 🤓🦮 - இம்மலையில் கர்த்தர் இறங்கும் நாள் எது?
     3-ம் நாள் (19:11)
5. ஜனங்களின் கீழ்ப்படிதலுக்கு சாட்சி சொன்னவன் யார்?
      மோசே (19:23)

Wednesday 9 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1.  மோசே கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன?
     யேகோவாநிசி (17:15)
2.  சுதந்திரம் பெற்ற இஸ்ரவேலர் முதன்முதலில் யுத்தம் பண்ணினது யாரோடு?
     அமலேக்கியரோடு (17:8-10)
3. இஸ்ரவேலர் யார் மேல் கல் எறிய பார்த்தார்கள்?
      மோசே (17:4)


Tuesday 8 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. விடியற்காலத்தில் காண்பது என்ன?
      கர்த்தருடைய மகிமை (16:7)
2. இஸ்ரவேலர் மன்னாவை சாப்பிட்ட காலம் எவ்வளவு?
      நாற்பது வருஷம் (16:35)
3. இரட்டிப்பு சேமிப்பு - எந்நாளில்?
      ஆறாம் நாளில் (16:5,22)
4. அப்பம் காணப்படாத நாள் எது?
     ஏழாம் நாளாகிய ஓய்வுநாளில் (16:26)
5. அப்பம் அளக்கப்பட்ட அளவின் பெயர் என்ன?
     ஓமர் (16:18)

Monday 7 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. எகிப்தியரை விழுங்கியது எது?
      பூமி (15:12)
2.  கரைவது யார்?
      கானானின் குடிகள் யாவரும் (15:15)
3. எதிரிகள் அமிழ்ந்ததாக சொல்லப்பட்டது எவைகளைப் போல?
      கல், ஈயம் (15:5,10)
4. இஸ்ரவேலர் தண்ணீரில்லாமல் இருந்த நாட்கள் எத்தனை?
      மூன்று நாள்  (15:22)
5. பாடகியான தீர்க்கத்தரிசி யார்?
      மிரியாம் (15:21,22)
6. ஜலம் குவிந்தது எதினால்?
      கர்த்தரின் நாசியின் சுவாசத்தினால் (15:8)
7. ஏலிமின் சிறப்பு எவை?
       12 நீரூற்றுகள், 70 பேரீச்சமரங்கள் (15:27)

Sunday 6 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கடலின் நடுவில் அழிக்கப்பட்டது யார்?
      இஸ்ரவேலரை பின்தொடர்ந்த எகிப்தியர் (14:27,28)
2. சாவதை விட எது நலம் என இஸ்ரவேலர் கூறினர்?
       எகிப்தியருக்கு வேலைசெய்கிறது (14:12)
3. இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுவது யார்?
      கர்த்தர் (14:14)
4. கர்த்தர் மோசேயிடம் எதை பிளக்க சொன்னார்?
      சமுத்திரத்தை (14:16)
5. இரு சேனைகளுக்கும் நடுவே வந்தது எது?
      மேகஸ்தம்பம்  (14:19,20)

Saturday 5 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. எத்தேச வழியாய், கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்தவில்லை? 
      பெலிஸ்தரின் (13:17)
2. இஸ்ரவேலரிடமிருந்து விலகாதவை எவை? 
      மேகஸ்தம்பம், அக்கினிஸ்தம்பம் (13:22)
3.  இஸ்ரவேலர் சுதந்திரம்🇮🇱 பெற்ற மாதத்தின் பெயர் என்ன? 
      ஆபிப் (13:4)
4. எகிப்திலிருந்து மோசே கொண்டு போனது என்ன? 
      யோசேப்பின் எலும்புகள் (13:19) 
 5.  அடிமைத்தன வீடு எது? 
       எகிப்து (13:3)

Friday 4 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. i) எல்லார் வீட்டிலும் சாவு - *எங்கே?*
      எகிப்தில் (12:30)
2.  *யார் மேல்* நீதி செலுத்தப்படும்?
       எகிப்து தேவர்களின்மேல் (12:12)
 3. ஒரே பிரமாணம் *எவர்களுக்கு?* 
      சுதேசி, பரதேசி (12:49)
4. *எதை* சாப்பிட்டால் மரணம் நிச்சயம்?
      புளித்த அப்பம் (12:15,19)
5.  *எந்நாளில்* தெரிந்து கொண்டதை *எந்நாளில்* (தேதி) சாப்பிட வேண்டும்?
      10-ம் தேதி, 14-ம் தேதி (12:3-8)
6. இஸ்ரவேலர் தோளின் மேல் கொண்டுபோனது *என்ன?*
      பிசைந்தமா இருந்த பாத்திரம் (12:34)
7.  இரத்தத்தை தெளிக்க பயன்படுத்தப்பட்டது *எது?* 
      ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்து (12:29)
8. 7⃣ நாள் சாப்பிட வேண்டியது *என்ன?* தேதி *குறிப்பிடுக?* 
       புளிப்பில்லா அப்பம், முதலாம் மாதம் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை (12:15,18)

Thursday 3 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. உக்கிர கோபத்தோடு😡 புறப்பட்டது *யார்?*
     மோசே (11:8)
2. மிகப் பெரியவன்🕺 *யார்?*
     மோசே (11:3)

Wednesday 2 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. *யாரைக்* கண்டால்🤓 மோசேக்கு சாவு?
     பார்வோன் (10:28)
2. துரத்திவிடப்பட்ட🏌🏻‍♂ சகோதரர்கள் *யார்?*
     மோசே, ஆரோன் (10:8-11)
3. எகிப்தியர் குருடாயிருந்த👨‍🦯👩‍🦯 நாட்கள் *எத்தனை?*
     மூன்று நாள் (10:23)
4. கர்த்தர் வீசப்பண்ணின காற்றுகள்🌬 *எவை?*
     கீழ்க்காற்று, மேல்காற்று (10:13,19)
5. 🦗🦗 - இவை *எதை* மூடியது?
     பூமியின் முகம் முழுவதையும் (10:15)

Tuesday 1 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. அழிவிற்கு தப்பின தானியப்பயிர்கள் எவை?
      கோதுமை, கம்பு (9:32)
2. மரணத்திற்கு தப்பினவை எவை? 
      இஸ்ரவேலரின் மிருகஜீவன்கள் (9:7)
3.  வேகமாய் தரையில் ஓடியது எது?
      அக்கினி (9:23)