Search This Blog

Wednesday 31 August 2011

விடுகதை 216

வெளிப்பட்டார்,
 விளங்கப்பட்டார்,
 காணப்பட்டார்,
 பிரசங்கிக்கப்பட்டார்,
  விசுவாசிக்கப்பட்டார்,
  ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
 அவர் யார்?
தேவன். 1 தீமோத்தேயு 3:16

Tuesday 30 August 2011

விடுகதை 215

அநேக காரியம் உண்டு...
    அதினாலும்,
    அதினாலும்,
    அவர்களுக்கு
    அன்பாய் எழுத மனமில்லையே.....
    அவர்களின் மகிழ்வுக்காக.....
                - எதினெதினால்?

                   காகிதத்தினாலும், மையினாலும் (2 யோ 12)

INRI

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்கட்டிருக்கும் படங்களில் INRI என்று எழுதப்பட்டிருப்பதற்கான அர்த்தம் இதுதான் Iesus Nazarenus Rex Iudaeorum. இது வேதத்தில் யோவான் 19:19-20 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது, இறைமகன் இயேசுவைக் குறித்து ரோம ஆளுநர் பிலாத்து எழுதி வைத்த வராற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகள்தான் இவைகள் 'நசரேயனாகிய இயேசு யூதர்களின் அரசர் ' இதுவே அதன் பொருள். இது எபிரேயம் , இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த தாக சத்திய வேதம் சான்று பகர்கின்றது...

Monday 29 August 2011

விடுகதை 214

பிதாவும்
       பிதாவின்
       பிரியமான மகனும் என்னுள்
       பிணைந்துள்ளனர்..
                       - நான் யார்?
            கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் (2 யோ 9)

Sunday 28 August 2011

விடுகதை 213

மெய்யான தேவன்
          நித்திய   ஜீவன்
     தேவனின்    மகன்
                         - யார்?
               தேவனுடைய குமாரன் இயேசுகிறிஸ்து ( 1யோ 5:20)

Saturday 27 August 2011

விடுகதை 212

சாட்சிகள்
    சாட்சிகள் பரலோகில்
    சாட்சிகள்...
    சாட்சிகள் மூவரும்
    சாதாரணமானோரல்லவே...
    சாட்சிகள் ஒருமைப்பாட்டில்
    சாதனை செய்தனர்....
                     - அவர்கள் யார்?
              பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி (1 யோ 5:7)           

Friday 26 August 2011

விடுகதை 211

தந்தை(பிதா)
     தனக்காயல்ல...
     தம் அன்புமகனை,
     தன் படைப்பாம் உலகுக்கு,
     தம் மக்களின்
     தன்னிகரில்லா மீட்புக்காய் அனுப்பினார்....
                   - எவ்வாறு?
               உலகரட்சகராக (1 யோ 4:14)

Thursday 25 August 2011

விடுகதை 210

அன்பானவர்
    அன்பாகவே இருக்கிறார்...
    அன்பான
    அவரை
    அவன்
    அறியான்...
                    -அவன் யார்?
               அன்பில்லாதவன் (1 யோ 4:8)

Wednesday 24 August 2011

விடுகதை 209

விடுகதை:

ஆதாயம் என்னும் போர்வைக்குள்
அமர்ந்து இருப்பாள் லாபம்   -அது எந்த போர்வை?
  விடை:
போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தி. 1 தீமோ 6:6.

விடுகதை 208

விடுகதை:
மூடன் என்று சொன்னான்
முக்கியமானதைக் கேட்டான்
படியைப் போட்டு மடியை நிரப்பி
காத்துக்கொள்ள வேண்டிக் கொண்டான் -அவன் யார்?

விடை:
ஆகூர். நீதி 30:1-9.

Tuesday 23 August 2011

விடுகதை 207

விடுகதை:

வியாபாரக் கப்பல் அவள்
விலையுயர்ந்த முத்து அவள்
வீட்டுக்கு வெளிச்சம் அவள்
வீதிக்கு வள்ளல் அவள்
கண்டிபிடிப்பதில் கடினம் அவள்
கண்டுபிடித்தால் இன்பம் அவள்  -அவள் யார்?
  விடை:
குணசாலியான ஸ்தீர். நீதி 31:1-31.

Monday 22 August 2011

விடுகதை 206

விடுகதை:
கடவுளுக்கு வந்தது வருத்தமாம்
கண்களில் இருந்தது கிருபையாம்
வருத்தம் அழிவைத் தந்ததாம்
கிருபை அவனைக் காத்ததாம்  -அவன் யார்?
  விடை:
நோவா. ஆதி 6,7 அதி.

Sunday 21 August 2011

விடுகதை 205

விடுகதை:
 நினைக்கும் பருவம் இதுவாம்
நடக்கும் பருவம் இதுவாம்
வாழ்க்கை வாழ்வதற்கே எண்ணம்
எட்டிப் பார்க்கும் பருவம்
கணக்கு கொடுக்க வேண்டியதை
கணித்துச் சொல்லும் பருவம்   -அது என்ன?
  விடை:
வாலிபப் பருவம். பிர 11:9.

Saturday 20 August 2011

விடுகதை 204

விடுகதை:
ஓடும் நீரின் ஓரத்தில்
ஓங்கி உயர்ந்த நாணலில்
ஒளிந்து கிடந்தது பெட்டி
உள்ளே இருந்தான் சுட்டி   -அவன் யார்?
  விடை:
மோசே. யாத் 2:1-10.

Friday 19 August 2011

விடுகதை 203

விடுகதை:
சொப்பனத்தில் செளிந்தவன்
சொன்னபடி செய்தவன்
சொர்க்கத்து முத்ததனை
செல்லமாய் வளர்த்தவன்   -அவன் யார்?
  விடை:
யோசேப்பு. மத் 1:18-25.

Thursday 18 August 2011

விடுகதை 202

விடுகதை:
மறுபடியும் மறுபடியும் சொன்னாலும்
மனதுக்குள் இது வருவதில்லை.
மற்றக் கவலைகள் மலையாய் சேர
மறுபடியும் அது தேவைதானே  -அது என்ன?
  விடை:
சந்தோஷம். பிலி 4:4.

Wednesday 17 August 2011

விடுகதை 201

விடுகதை:
 ஆறடி தேக்கு மரம்
அரசம் பழம் பட்டு
தொப்பென்று விழுந்தது  -அது யார்?
  விடை:
கோலியாத். 1 சாமு 17:4,49.

Tuesday 16 August 2011

விடுகதை 200

விடுகதை:
இரண்டெழுத்து பெண்
மூன்றெழுத்து ஆணை மணந்து
ஓபேதை பெற்றாள் - அவள் யார்?
  விடை:
ரூத். மத் 1:5.


Monday 15 August 2011

விடுகதை 199

அவர் கட்டளைகளை
    அன்பாய் கைக்கொண்டால்
    அவரில் நிலைப்போம்...
    அவரில் நிலைத்ததை
    அதினாலே
    அறிவோம்....
                       - எதினாலே?
            அவர்{இயேசுகிறிஸ்து}தந்தருளின ஆவியினாலே (1 யோ 3:24)


Sunday 14 August 2011

விடுகதை 198

அபிஷேகம் பெற்று
   அனைத்தையும்
   அறிந்தோம்
   அவராலே !
                     - யாராலே?
                 பரிசுத்தராலே (1 யோ 2:20)


Saturday 13 August 2011

விடுகதை 197

விடுகதை:
புறப்பட்டது இடி..
     புறப்பட்டது மின்னல்..
     புறப்பட்டது சத்தம்..
                 - எதிலிருந்து?
விடை:
              சிங்காசனத்திலிருந்து (வெளி 4:5)


Friday 12 August 2011

விடுகதை 196

உண்மை
     உண்மை
     உயிருள்ளவரை
     உண்மை
     உண்மையாயிருப்பின்
     உன்னதரேசு
     உனக்குத் தரும்
     உயரிய பரிசு....
                     - அது என்ன?

விடை:
                  ஜீவகிரீடம் ( வெளி 2:10)


Thursday 11 August 2011

விடுகதை 195

அழகிய உடைகளை
      அசுசிப் படுத்தாமல்
      அவர்களில் சிலர்...
      அவர்கள் பாத்திரவான்களெனில்
      அவர்களுக்கு
      அழகிய வெள்ளை உடை.....
                  - எந்த சபை?
             சர்தை சபை (வெளி 3:4,5)



Wednesday 10 August 2011

மெத்தூசலா

மெத்தூசலா மரித்த வருடமும் நோவா கால ஜலபிரளயம் உண்டான வருடமும்
ஒன்றுதான். மெத்தூசாலா 187 வயதில் லாமேக்கை பெற்றான் – ஆதி 5:25.
லாமேக்கு 182 வயதில் நோவாவை பெற்றான் – ஆதி 5:28,29.
நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் ஜலபிரளயம் உண்டானது – ஆதி 7:11
187+182+600 = 969. 
மெத்தூசலாவின் ஆயுட்காலம் 969 வருஷம்.

Tuesday 9 August 2011

எஸ்தர்

எஸ்தர் என்பது பெர்சிய பெயர். இது ஸ்டார் (Star) என்று பெர்சியச் சொல்லிருந்து தோன்றியது ஆகும். "கிழக்கு வெள்ளி" என்பது இதன் பொருள். இலத்தீன் பெயர் ஹெஸ்டர். பாபிலோன் தேவதை இஷ்டார் என்ற பெயரோடு ஒரு தொடர்பு இருக்கலாம் என்று அறிஞர்களில் சிலர் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். இந்த நூலின் கிரேக்க தலைப்பு எஸ்தர் என்பதாகும். எஸ்தரின் யூதப் பெயர் அத்சாள் (Hadassah -Myrtle). நறுமண மலர்ச்செடி என்பது இதன் பொருள்.

Monday 8 August 2011

காய்பா

எழுபது பேர் கொண்ட யூத பேரவைக்கு சனகரீம் சபை என்று பெயர். யூதர்களில் நடவடிக்கைகளை விசாரித்துத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் இச்சபைக்கு இருந்தது. இதன் தலைவராக அன்னா என்பவர் இருந்தார். பிறகு ரோமர்கள் இவரை நீக்கிவிட்டுக் காய்பாவை பதவியமர்த்தினர். இந்த காய்பா அன்னாவின் மருமகன்.

Saturday 6 August 2011

தெசலோனிக்கே ஒரு அறிமுகம்

தெசலோனிக்கே என்பது மக்கெதோனியா நாட்டின் மிகப் பெரிய கடற்கரைப் பட்டிணம். கி.பி.49 க்கும் 54க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பவுல் தனது முதலாம் நிருபத்தை தெசலோனிக்கேயருக்கு எழுதுகிறார். இந்நிருபம் கொரிந்து பட்டிணத்திலிருந்து எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. பவுலின் இரண்டாம் மிஷனரி பயணத்தின் போது இப்பட்டணத்தில் சபை நிறுவப்பட்டது. ஆனால் பயங்கரமான எதிர்ப்பின் காரணத்தால் (அப் 17:1-10) பவுலும், சீலாவும் இப்பட்டிணத்தை விட்டு வேகமாக வெளியேற நேர்ந்தது. பின்பு இச்சபையாரின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அறிய பவுல் தீமோத்தேயுவை அனுப்புகிறார்.

முதலாம் நிருபம் எழுதிய பிறகு மிகக் குறுகிய கால இடைவெளியில் இரண்டாம் நிருபத்தை எழுதினார். தெசலோனிக்கேயர் இன்னும் உபத்திரவங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், கர்த்தரின் நாளைப் பற்றிய உபதேசங்கள் தவறாய்ப் போதிக்கப்பட்டிருந்தாலும் பவுல் இவ்விரண்டாம் நிருபத்தை எழுதினார்.

இவ்விரு நிருபங்களுக்குள் பல வேற்றுமைகள் இருப்பதை வேத அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். முதலாம் நிருபத்தைவிட இரண்டாம் நிருபம் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. முதலாம் நிருபத்தில் கர்த்தருடைய வருகை திருடனின் வருகையைப் போலிருக்கும். (1.தெச.5:2) என்றும் இரண்டவது நிருபத்தில் கர்த்தருடைய நாள் வருவதற்கு முன் சில காரியங்கள் நடைபெறும் (2 தெச.2:1-4) என்று பவுல் கூறுகிறார். முதல் நிருபம் தெசலோனிக்கே பட்டணத்து சபையிலிருந்த புற ஜாதிகளுக்கு எழுதப்பட்டது என்றும் இரண்டாம் நிருபம் அச்சபையிலிருந்த யூதர்களுக்கு எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

வேறுபாடுகள் பல இருப்பினும், உபத்திரப்படுகின்ற கிறிஸ்துவர்களை உற்சாகப்படுத்துவதாயும், மற்றவர்களை (யூதர்களை) கர்த்தரின் நாளைப் பற்றிக் கூறி எச்சரிப்பதாகவும் இந்நிருபங்களில் காணப்படுகின்றன. இனி வரும் சில நாட்கள் இந்நிருபங்களைப் பற்றி நாம் தியானிக்கும் போது உற்சாகமடைவோம். கர்த்தரின் நாளுக்காக ஆயத்தப்படுவோம்.

Friday 5 August 2011

சீஷர்களின் மரணம்

இயேசுவின் சீஷர்கள் மரித்தது எப்படி?

அப். மத்தியா : யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக தெரிந்து கொள்ளப்பட்ட (அப் 1:26) இவர் கற்களால் எறியுண்டு பிறகு சிரைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அப்.யோவான் : வயது முதிர்ந்து நல்லபடி மரித்த ஒரே அப்போஸ்தலர் இவரே ஆகும்.

அப்.ததேயு : பெரிட்டஸ் என்ற இடத்தில் இரத்தசாட்சியாய் மரித்தார்.


அப். தோமா : இந்தியாவிலுள்ள சென்னைப் பட்டணத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அப்.சீமோன் : இவரை குறித்ததான சரியான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை இவரும் சிலுவையில் இரத்த சாட்சியாய் மரித்தார் என்று கருதுகின்றனர்.

அப். பற்தொலொமேயுச்: அர்மேனியாவில் உள்ள அல்லானும் என்றும் பட்டணத்தில் சவுக்கால் அடிக்கப்பட்டு, பிறகு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அப்.பிலிப்பு : டோமிட்டியன் காலத்தில் ஹீரப்போலிஸ் என்ற பட்டணத்தில் பேதுருவை போல தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அப்.அந்திரேயா, அக்காயா என்னப்படும் கிரேக்கப்பட்டணத்தில் ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டு X வடிவிலான சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

செபதேயுவின் குமாரனாகிய அப். யாக்கோபு பாலஸ்தீனாவில் ஏரோது அகிரிப்பா 1-ம் மன்னானால் ஏறக்குறைய கி.பி. 44-வது ஆண்டு சிரைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

அல்பேயுவின் குமாரனான அப். யாக்கோபு தேவாலயத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு பிறகு கற்களால் எறியுண்டு இரத்தசாட்தியாய் மரித்தார்.

அப்.சீமோன் பேதுரு ரோம மாநகரில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சி மரித்தார் இயேசுவை போல மரிக்க தனக்கு தகுதியில்லை,அதனால் என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் வேண்டிக்கொண்டார். அப்படியே அறைந்தார்கள்.

அப்போஸ்தலனாகிய மத்தேயுவை எத்தியோப்பியாவில் சிறையாக்கி, அங்கே தரையோடு சேர்ந்து ஆணி அடித்தனர். அதன் பிறகு தலை வெட்டபட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.

Thursday 4 August 2011

கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும்

இஸ்ரவேலின் கடைசி நியாயாயிபதி யார் ?


எபிரெய வேதாகமத்தில் 1 & 2 சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாக இருந்தன. 16ம் நூற்றாண்டில் தான் சாமுவேல் இரண்டு புத்தகங்களாக பிரிக்கப்பட்டது. 1 சாமுவேல் இஸ்ரவேலரின் தலைமைப் பதவி, நியாயாதிபகளிடமிருந்து இராஜாக்களுக்கு மாறியதை விளக்குகிறது. கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும், இஸ்ரவேலின் முதல் அரசனான சவுலையும், அவனுக்குப் பின் அரசனான தாவீதையும் அபிஷேகம் செய்தவருமான சாமுவேலின் பெயர் இந்நூல்களுக்கு அளிக்கப்பட்டது பொருத்தமானதே.

Wednesday 3 August 2011

"சொப்பனங்களின் தீர்க்கதரிசி"

"சொப்பனங்களின் தீர்க்கதரிசி" யார் ?



தானியேல் மாபெரும் ஜெபவீரர். சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும் வாழ்ந்தவர். தீர்க்கதரிசன வரம் பெற்றவர். "சொப்பனங்களின் தீர்க்கதரிசி" என்று இவர் அழைக்கப்பட்டார். தானியேல் என்றால் தேவன் என்னுடைய நீதிபதி (தேவன் எனக்கு நியாயம் செய்கிறவர்) என்று பொருளாகும். தானியேலைச் சிங்கக்கெபியில் போடும்போது அவர் சுமார் 90 வயதாயிருந்தார் என்பது குறிப்படத்தக்கது. தானியேல் வாழ்ந்த காலத்தில் தான் எசேக்கியேல் தீர்க்கதரிசியும் வாழ்ந்தார்.

Tuesday 2 August 2011

உடன்படிக்கைப் பெட்டி

உடன்படிக்கைப் பெட்டி பற்றி கூறுக.


3 3/4 X 2 1/4 அடி X 2 1/4 அடி அளவிலான பெட்டி சீத்திம் மரத்தினால் செய்யப்பட்டு தங்கத்தினால் மூடப்பட்டிருந்தது. இதில் 10 கட்டளைகள் அடங்கிய 2 கற்பலகைகளும், மன்னா இருந்த பொற்பாத்திரமும், ஆரோனின் கோலும் இருந்தன. கிருபாசனம் என்ற முற்றிலும் பொன்னினால் செய்யப்பட்ட மூடியினால் இந்தப் பெட்டி மூடப்பட்டிருந்தது. அந்த மூடியோடே ஒரே வார்ப்பினால் செய்யப்பட்ட 2 கேருபீன்கள் அமைக்கப்படிருந்தன. 10 கட்டளைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் உள்ள பெட்டியின் மேல் கிருபாசனம் இருந்தது. இந்த அமைப்பானது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாகவும் கிருபையின் வெளிப்பாடாகவும் இருக்கிற கிறிஸ்துவுக்கு அடையாளமாக விளங்கினது.

Monday 1 August 2011

அதிகாரப் பிரிவுகள்

வேதத்தில் அதிகாரப் பிரிவுகள் எப்போது பகுக்கப்பட்டது?


இன்று நாம் வேதத்தில் காணும் அதிகாரங்கள் மற்றும் வசன எண்கள் ஆகியவை கி.பி.1250 வரை இருக்கவில்லை. கி.பி.1250ல் தான் இப்படி வசனங்களுக்கு எண் கொடுத்தும், அதிகாரங்களுக்கு எண்ணிட்டும் பிரித்தார்கள். வேதத்தை இப்படி பிரித்தவர் கார்டினால் ஹ்யூகோ என்பவராவார். இவர் முதன் முதலில் லத்தீன் வேதாகமத்தில் தான் இதை உண்டாக்கினார்.தற்போதுள்ள அதிகாரப் பிரிவுகள் கி.பி.1553ல் தான் ஏற்படுத்த பட்டன. கிரேக்க மொழியின் வேதாகமத்தில் இப்பிரிவுகளை உண்டாக்கியவர் இராபர்ட் ஸ்டீபன் என்பவராவார்.