Search This Blog

பழைய ஏற்பாடு

பரிசுத்த வேதத்திலே உள்ள பழைய ஏற்பாடு மொத்தம் 39 ஆகமங்களை(புத்தகங்களை) உள்ளடக்கியது.

பழைய ஏற்பாட்டிலே மத்தியிலுள்ள புத்தகம் நீதி மொழிகளாகும்.

கி.பி.1448-ம் வருடம் ஆர்.நாதன் என்பவரால் பழைய ஏற்பாடு முழுவதும் வசனங்களாக பிரிக்கப்பட்டது.

தமிழ் மொழியில் பழைய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளியிட்டம்வருடம் கி.பி 1728-ஆகும்.

பழைய ஏற்பாட்டிலே நீளமானஅதிகாரம் சங்கீதம் 119.

“சேலா” என்கிற வார்த்தை சங்கீத புத்தகத்தில் 71 மிறையும் ஆபகூக் புத்தகத்தில் 3 முறையும் வருகிறது.

யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

ஜெர்மனியிலிருந்து வந்த மிஷினரியான சீகன் பால்கு ஐயர் என்பவர் தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிப்பெயர்த்தவர். சீகன் பால்கு ஐயர் அவர்கள் மரித்தப்பின் அவர் விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின் ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின் ஸ்கல்ட்ஸ் என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார்.
சீகன் பால்கு ஐயர் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் தன் ஊழியங்களை செய்து, ஒரு சபையை கட்டியுள்ளார். அத்திருச்சபையில் இன்றும் ஆராதனை நடக்கிறது.

* பழைய ஏற்பாடு அளவில் புதிய ஏற்பாட்டை விட 3 மடங்கு பெரியது.

* முதல் 5 புத்தகங்களும் "டோரா" என்றழைக்கப் படுகின்றன. இது பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய 1/4 பங்கிற்கும் சற்று குறைவாகவே இருக்கிறது.

* யோசுவா முதல் எஸ்தர் வரை உள்ள சரித்திர புத்தகங்கள் பழைய ஏற்பாட்டில் 1/3க்கும் சற்று குறைவாய் இருக்கின்றன.

* தீர்க்கதரிசனப் புத்தகங்கள் பழைய ஏற்பாட்டில் கால் பகுதிக்கும் மேலாக இருக்கின்றன.

* அளவில் பெரிய புத்தகம், சங்கீத புத்தகம். 150 அதிகாரங்கள் (92 பக்கங்கள்) உள்ளன.