Search This Blog

புதிய ஏற்பாடு

நம்முடைய வேதத்திலே உள்ள புதிய ஏற்பாடு மொத்தம் 27 ஆகமங்களை(புத்தகங்களை) கொண்டது.

கி.பி.1551-ம் ஆண்டு ராபாட் ஸ்டிபன்ஸ் என்பவரால் புதிய ஏற்பாடு முழுவதும் வசனங்களாக பிரிக்கப்பட்டது.
தமிழ் புதிய ஏற்பாடு கி.பி 1714 –ம் ஆண்டு தரங்கம்பாடியில் சீகன் பால்கு ஐயர் என்பவரால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.சீகன் பால்கு ஐயர் முதல் முதல் அச்சடித்து வெளியிட்ட தமிழ் வேதாகம பகுதி “புதிய ஏற்பாடு” ஆகும்.

புதிய ஏற்பாட்டிலே மத்தியிலுள்ள புத்தகம் “2 தெசலோனிக்கேயர்” ஆகும்.

புதிய ஏற்பாட்டிலே நீளமானஅதிகாரம் லூக்கா 1.

புதிய ஏற்பாட்டில் 260 அதிகாரங்கள் உண்டு அவைகளில் 260-க்கும் மேற்ப்பட்ட பழைய ஏற்பாட்டு வசனங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில் “அல்லேலூயா” என்ற வார்த்தை நான்கு முறை வருகிறது அதுவும் வெளிப்படுத்தலில் மட்டுமே வருகிறது (வெளி 19:1,3,4,6).

நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.

தள்ளப்பட்ட வேதம் (Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் எழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.

பழைய ஏற்பாட்டிலே மத்தியிலுள்ள புத்தகம் நீதி மொழிகளாகும்.

புதிய ஏற்பாட்டிலே மத்தியிலுள்ள புத்தகம் “2 தெசலோனிக்கேயர்” ஆகும்.

முதல் புதிய ஏற்பாடு

திருமறையின் பிரதிகள் கையால் எழுதப்படுகின்றன என்று கேள்விப்பட்ட இங்கிலாந்து நாட்டு மக்கள் அச்சு இயந்திரம் ஒன்றை 1711-ம் ஆண்டு அனுப்பி வைத்தார்கள். 1714-ம் ஆண்டு சீகன் பால்க் மொழி பெயர்த்த முதல் புதிய ஏற்பாடு தமிழில் அச்சிடப்பட்டு வெளியானது. வேதப் பண்டிதர் முதல் பாமர மக்கள் வரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். 1717-ம் ஆண்டில் முதன் முதன் இந்தியாவின் நாட்காட்டி தரங்கை அச்சகத்திலிருந்து அச்சிடப்பட்டு வெளியானது. சீகன் பால்கு ஐயர் அவர்கள் மரித்தப்பின் அவர் விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின் ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின் ஸ்கல்ட்ஸ் என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார்.