Search This Blog

Thursday 30 June 2011

விடுகதை 181

விடுகதை:
காட்சிகள் மாறிடும்;
      காரணங்கள் தேய்ந்திடும்;
      காலங்கள் ஓடிடும்; (பகை)
      கானங்கள் பாடிடும்..   ஆனாலும்
      காத்துக் கொள்..
      காத்துக் கொள்..
      காலமெல்லாம்
      காத்துக் கொள்..
            -எதை?எதினால்?
     

விடை:
ஆத்துமாக்களை, பொறுமையினால் (யோவான் 21:19)


Wednesday 29 June 2011

விடுகதை 180

விடுகதை:
பாம்புகளின் தலைவன்
பாலைவனத்தில் பிறந்தான்
பார்த்தவன் பிழைத்தான்
பாராதவன் மரித்தான் -அவன் பெயர் என்ன?

விடை:
நிகுஸ்தான். 2 இராஜா 1:4.



Tuesday 28 June 2011

விடுகதை 179

விடுகதை:
யானைக்கு அடி சறுக்கும்
இவனுக்கோ முடி சறுக்கும் -அவன் யார்?

விடை:
சிம்சோன். நியாய 16:16-21.


Monday 27 June 2011

விடுகதை 178

விடுகதை:
வேண்டாம் என்று சொன்னதை
வேண்டும் என்று கேட்கவே
கிடைத்தது பணம் சாக்கிலே
வந்தது நிறம் கதையிலே -அவன் யார்?

விடை:
கேயாசி. 2 இராஜா 5:20-27.


Sunday 26 June 2011

விடுகதை 177

விடுகதை:
சாவுக்கு பயந்து ஓடி
ஊரை விட்டு வந்து
சூரைத் தஞ்சம் கொண்டு
அயர்ந்த நித்திரை செய்த
ஆண்டவரின் அடியான் -அவன் யார்?

விடை:
எலியா. 1 இராஜா 19:1-6.



Saturday 25 June 2011

விடுகதை 176

விடுகதை:
கிடைத்ததற்கரிய செல்வத்தை
கையினில் வாங்கி
எறிந்து போட்டான் -அவன் யார்?

விடை:
மோசே. யாத் 32:15-20.


Friday 24 June 2011

விடுகதை 175

விடுகதை:
உயரத்தை உரசிப் பார்த்தான்
அழகை அலசிப் பார்த்தான்
இஸ்ரவேலில் சிறந்து நின்றான்
பதவியைக் கண்டு ஒளிந்து கொண்டான் -அவன் யார்?

விடை:
சவுல். 1 சாமு 9:1; 10:22.



Thursday 23 June 2011

விடுகதை 174

விடுகதை:
முதலாவது இருப்பான்
மூலவனைச் சொல்லுவான்
முப்பெரும் தந்தையரின்
முழு வரலாறும் கூறுவான்
ஐம்பது கிளைகள் கொண்டவன்
ஐயங்களைத் தீர்ப்பவன் -அது என்ன?

விடை:
ஆதியாகமம். ஆதி 1-50 அதி.


Wednesday 22 June 2011

விடுகதை 173

விடுகதை:
உயிருக்கு பயந்து ஓடி
அடைக்கலப் பட்டணம் தேடி
உப்புத்தூணாய் மாறி
நின்ற பொண்ணு யாரு?

விடை:
லோத்தின் மனைவி. ஆதி 19:12-26.


Tuesday 21 June 2011

விடுகதை 172

விடுகதை:
திருதிருவென முழித்தான்
திருட்டுதனமாய் எடுத்தான்
மடமடவெனத் தோண்டினான்
மண்ணிற்குள் புதைத்தான்
கற்கள் பார்த்து சிரிக்க
கல்லால் எரிந்து கொல்லப்பட்டான் -அவன் யார்?

விடை:
ஆகான். யோசுவா 6:16-26.


Monday 20 June 2011

விடுகதை 171

விடுகதை:
குட்டைக்கும் நெட்டைக்கும் சண்டையாம்
சண்டையில் குட்டை ஜெயித்ததாம்
நெட்டைக்கு நெற்றிப்பட்டை கழந்ததாய்
ஜெயித்த குட்டையன் யார்?
தோற்ற நெட்டையன் யார்?

விடை:
தாவீது – கோலியாத். 1 சாமு 17:38-50.


Sunday 19 June 2011

விடுகதை 170

விடுகதை:
அரைக்கிற ஆலை தனில்
அடைப்பட்டுக் கிடப்பான்
ஆயுள் சக்கரத்தை
அரை நொடியில் எரிப்பான்
அடக்கினால் வாழ்வு இல்லையெனில் அழிவு -அது என்ன?

விடை:
நாவு. யாக் 3:5-10.

Saturday 18 June 2011

விடுகதை 169

விடுகதை:
விடாமல் விரட்டி விடும்
தொடாமல் துரத்தி விடும்
வீட்டின் வாசற்படியில்
நித்தமும் படுத்திருக்கும் -அது எது?

விடை:
பாவம். ஆதி 4:7.


Friday 17 June 2011

விடுகதை 168

விடுகதை:
உயிர் உண்டு, உடல் இல்லை
பாதை உண்டு, பள்ளம் இல்லை
மார்க்கம் உண்டு, மரணம் இல்லை
இவ்வழி சென்றால் எவ்வழியும்
தேவை இல்லை -அது எவ்வழி?

விடை:
நீதியின் பாதை. நீதி 12:18.



Thursday 16 June 2011

விடுகதை 167

விடுகதை:
கட கட மட மட
கண்டவர் வாய் பிளக்க
கட்டியவர் கதி கலங்க
கண்டம் துண்டமாய் நின்றது - அது என்ன?

விடை:
பாபேல் கோபுரம். ஆதி 11:1-9.



Wednesday 15 June 2011

விடுகதை 166

விடுகதை:
நான் பாதி அவர் பாதி
நாங்கள் இருவரும் பாதி பாதி
நல்ல சேதி கெட்ட சேதி
அறிந்து கொண்டோம் அன்று மீதி
அதனால் இன்று நீங்கள் வீதி -நாங்கள் யார்?

விடை:
ஆதாம் – ஏவாள். ஆதி 3:1-24.



Tuesday 14 June 2011

விடுகதை 165

விடுகதை:
கையின் மேல் தலை
உடலின் மேல் வறுமை - அவன் யார்?

விடை:
சோம்பேறி. நீதி 6:9-11.



Monday 13 June 2011

விடுகதை 164

விடுகதை:
பத்து முறை பந்தாட
மக்கள் எல்லாம் துண்டாட
எதிரிகள் நின்று கொண்டாட
தான் மட்டும் திண்டாட
சொல்லடா இவன் யாரடா? - இவன் யார்?

விடை:
பார்வோன். யாத் 7-14 அதி.



Sunday 12 June 2011

விடுகதை 163

விடுகதை:
காட்டில் பெய்த மழை
கரை புரண்டு ஓடி
வனந்திரத்தில் பாய்ந்து
வழியை ஏற்படுத்தியது
வானவில் ஒன்று தோன்றவே
வாயாரப் புகழ்ந்தது -அது யார்?

விடை:
யோவான் ஸ்நானன். மத் 3:1-17.



Saturday 11 June 2011

விடுகதை 162

விடுகதை:
வேர் விட்டு பரவும்
விதை இன்றி வளரும்
வேதனை இதனால் பெருகும்
விசுவாசம் அதனால் சரியும் - அது என்ன?

விடை:
பண ஆசை. 1 தீமோ 6:10


Friday 10 June 2011

விடுகதை 161

விடுகதை:
கூட்டிப் பார், கழித்துப் பார்
முட்டிப் பார் மோதிப் பார்
புத்தியிருந்தால் கணக்குப் பார்
முயன்று நீயும் தப்பிப் பார் -அது என்ன?

விடை:
666. வெளி 13:18.



Thursday 9 June 2011

விடுகதை 160

விடுகதை:
காய்க்காமல் பழுத்திடும்
கசக்காமல் இனித்திடும்
பலவண்ணப் பழங்களை
பலருக்கும் தந்திடும்
நித்திய வாழ்வை நீ அடைய
நித்தமும் இது தேவை -அது என்ன?

விடை:
ஆவியின் கனிகள். கலா 5:22,23.



Wednesday 8 June 2011

விடுகதை 159

விடுகதை:
வா என்று கூப்பிடும்
வந்தால் அணைத்திடும்
வாழ்க்கயில் உயர்ந்திட
வழிகளைச் சொல்லிடும் -அது என்ன?

விடை:
ஞானம். நீதி 8; 9 அதி.



Tuesday 7 June 2011

விடுகதை 158

விடுகதை:
அடித்தால் அழாதது
இடித்தால் விழாதது
இருப்பதில் பெரியது
உலகிற்கு தேவையது -அது என்ன?

விடை:
அன்பு. 1 கொரி 13:1-13.



Monday 6 June 2011

விடுகதை 157

விடுகதை:
உண்ணுகின்ற உணவிற்குள்
ஒரு மனிதன் குறட்டை விட்டான் - அவன் யார்?

விடை:
யோனா. யோனா 1:17.



Sunday 5 June 2011

விடுகதை 156

விடுகதை:
குழிக்குள் போட்ட வெள்ளிக்காசுகள்
அந்நிய நாட்டிற்கு பயணமாகி
சிறையில் சிதறி சிங்காசனமானது - அவன் யார்?

விடை:
யோசேப்பு. ஆதி 41:38-44.



Saturday 4 June 2011

விடுகதை 155

விடுகதை:
ஆஹா என்று ஆனந்தக் கூத்தாடி
ஓஹோ என்று ஒய்யார மரம் செய்து
ஐயோ என்று அலறிச் செத்தான் - அவன் யார்?

விடை:
ஆமான். எஸ்தர் 7:1-10.



Friday 3 June 2011

விடுகதை 154

விடுகதை:
இன்னிசை குயில் ஒன்று
இதய கீதம் இதமாய் பாடி
சகோதரனை வம்புக்கு இழுத்தது
இழுத்த வம்பால் கை
வெமுத்துக் கொண்டது -அவள் யார்?

விடை:
மிரியாம். – எண் 12:1-10.



Thursday 2 June 2011

விடுகதை 153

விடுகதை:
பந்தா பந்தா பந்தா
பறபறக்கும் பந்தா
கிப்பித்தலை தொப்பித்தலை
தன் தலை தனக்கே ஆபத்து -அவன் யார்?

விடை:
அப்சலோம், 2 சாமு 18:9-15.



Wednesday 1 June 2011

விடுகதை 152

விடுகதை:
கர்த்தரின் பெட்டிக்கு முன்னே
தலை நிமிர நினைத்ததால்
தலையில்லா முண்டமாய்
தரையில் உருண்டு விழுந்தான் -அவன் யார்?

விடை:
தாகோன் – 1 சாமுவேல் 5:1-5.