Search This Blog

Monday 28 February 2011

விடுகதை 59

நடக்குமா? நடக்காதா?
கிடைக்குமா? கிடைக்காதா?
மனதிலே போராட்டம்
வாழ்விலே திண்டாட்டம் -அவன் யார்?


விடை:
சந்தேகப்படுகிறவன் – யாக் 1:5-8.

Sunday 27 February 2011

விடுகதை 58

தலையெல்லாம் தண்ணீராம்
கண்களெல்லாம் கண்ணீராம்
இரக்கமுள்ள மனிதனாம்
இரவும் பகலும் அழுவானாம் -அவன் யார்?


விடை:
எரேமியா - எரே 9:1.

Saturday 26 February 2011

விடுகதை 57

தூங்காதே அண்ணே தூங்காதே
செய்தி நேரம் தூங்காதே
தூங்கினால் நடப்பதை
தூங்கியவன் கூறுவான் -அவன் யார்?


விடை:
ஐத்திகு – அப் 20:9.


Friday 25 February 2011

விடுகதை 56

விடுகதை:
வேதாகம நண்பரா – நீங்கள்
வேதனை நீக்கும் நண்பரா
ஆண்டவரின் நண்பர் இவர்
ஆசீர்வாத அனபர் இவர் -அவர் யார்?


விடை:
ஆபிரகாம் – யாக் 2:23.


Thursday 24 February 2011

விடுகதை 55

விடுகதை:
குருவிப் போல பறந்தவன்
மாட்டை போல நடந்தவன்
அம்பினாலே அடிப்பட்டு
அங்கே தானே அழிந்தவன் -அவன் யார்?


விடை:
புத்தியீன வாலிபன் – நீதி 7:7-23.


Wednesday 23 February 2011

விடுகதை 54

விடுகதை:
சரிகமபதநி
தரிகிட திரிகிட தோம்
தாளம் போட்டு, கைகள் தட்டி
கர்த்தரைத் துதிக்க சொல்லும்
கீதம் சரியா சொல்லு? -அது என்ன?


விடை:
சங்கீதம் 150, சங்கீதம் 150:1-6.


Tuesday 22 February 2011

விடுகதை 53

விடுகதை:
குழாயடி சண்டையில்
குறுக்கிட மாட்டாள்
குடிக்க தண்ணீர் கேட்டால்
குடம் நிறையத் தருவாள்
குணசாலியான பெண்ணதால்
குபேர வாழ்வுப் பெற்றாள் -அவள் யார்?


விடை:
ரெபெக்காள். ஆதி 24:16-67.

Monday 21 February 2011

விடுகதை 52

விடுகதை:
அங்கும் இங்கும் ஆடுவான்
மேலும் கீழும் துள்ளுவான்
அசையாமல் நிற்கும்போது
கணக்கு சரி இல்லையானால்
கர்த்தருக்கு அருவருப்பு -அது என்ன?


விடை:
கள்ளத்தராசு. நீதி 11:1.


Sunday 20 February 2011

விடுகதை 51

விடுகதை:
பளிச்சென வெளிச்சம்
திடீரென அடிக்க
பம்பரமாய் சுழன்று
படாரென்று விழுந்தான்
பவ்யமாய் எழுந்து பரிகாரம் தேட
பதில் ஒன்று கிடைக்க பரமனின் பணியினை
பக்தியுடன் தொடர்ந்தான் -அவன் யார்?


விடை:
சவுல். அப் 9:1-6.

Saturday 19 February 2011

விடுகதை 50

விடுகதை:
க கா கி கூ
த தா தி தூ
கண்ட கண்ட எழுத்திலெல்லாம்
கட்சி பல முழைத்துவிட
கரைவேட்டியில் கரையான்கள் -அது என்ன?


விடை:
தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள். நீதி 28:2.


Friday 18 February 2011

விடுகதை 49

விடுகதை:
கர்த்தர் வரைந்த கோட்டிற்கு
என்றும் முடிவில்லை -அது என்ன?

விடை:
இரக்கம். புலம் 3:22.

Thursday 17 February 2011

விடுகதை 48

விடுகதை:
வீடு வீடாய் மாறினாலும்
வீடு வீடாய் சுற்றினாலும்
இந்த வீட்டிற்கு போவதிலே தனிச் சிறப்பு -அது எது?

விடை:
துக்கவீடு. பிர 7:2.


Wednesday 16 February 2011

விடுகதை 47

விடுகதை:
இறக்கைகளே இல்லாமல்
வேகமாய் பறப்பவன்
கூடினால் சோதனை
ஏறினால் வேதனை -அது என்ன?


விடை:
ஆயுசு நாட்கள், சங் 90:9,10; ஐசுவரியம், நீதி 23:5.


Tuesday 15 February 2011

விடுகதை 46

விடுகதை:
பட்டாளத்து மனிதன்
பக்தியுள்ள மனிதன்
தேடி வந்த மனிதர்களின்
தேவைகளை சந்தித்தவன் -அவன் யார்?


விடை:
கொர்நெலியு - அப் 10:1,2.


Monday 14 February 2011

விடுகதை 45

விடுகதை:
வீட்டையெல்லாம் பிரித்து
வீதியிலே வைப்பான் -அவன் யார்?


விடை:
பொருளாசைக்காரன் - நீதி 15:27.


Sunday 13 February 2011

விடுகதை 44

விடுகதை:
வாழ ஆசைப்பட்டு
கண்ணீர் அதிகம் விட்டு
அகைவையை அதிகம் கேட்டு
வாழ்ந்த மனிதன் யாரு?


விடை:
எசேக்கியா ராஜா 2 இராஜா 20:1-6, ஏசா 38:1-5.


Saturday 12 February 2011

விடுகதை 43

விடுகதை:
வேகமாக வருது
விரட்டிக் கொண்டு வருது
தீவிரமாய் வருது
அலறிக்கொண்டு வருது
பொன்னோ பொருனோ எதுவும்
உதவிட முடியாது -அது என்ன?


விடை:
கர்த்தருடைய உக்கிரத்தின் நாள் – செப் 1:18.


Friday 11 February 2011

விடுகதை 42

விடுகதை:
அடர்ந்த மண் மேட்டிலே
அழுகுரல் ஒன்று கேட்குது
அம்மா எட்டி பார்க்குது
அருகே தண்ணீர் தெரியுது -அது எங்கே யார்?


விடை:
பெயர்செபா வனாந்திரம் – ஆதி 21:14-19.


Thursday 10 February 2011

விடுகதை 41

விடுகதை:
பெரியாரின் கொள்கையிலே
பெரிசுகள் பலர் சிக்கினர்
இல்லை என்று சொல்லியே
இதயத்தைக் கெடுத்தனர் – ஆனால்
உண்மையிலே இவனுக்கோ
சமாதானம் இல்லையே

-அது யாருக்கு?


விடை:
துன்மார்க்கன் – ஏசா 48:22.


Wednesday 9 February 2011

விடுகதை 40

விடுகதை:
வருடத்தின் நாட்கள் போல
வருடங்கள் முழுவதும் நடநது
வரலாறு முடிவு இன்றி
வானில் பறந்து போனான்

-அவன் யார்?



விடை:
ஏனோக்கு – ஆதி 5:21-24.


Tuesday 8 February 2011

விடுகதை 39

விடுகதை:
கேட்பது போல் கொடு – ஆனால்
கேட்பது போல் கொடுக்காதே -அது

என்ன? யாருக்கு?

விடை:
மறுஉத்தரவு, மூடனுக்கு – நீதி 26:4,5.


Monday 7 February 2011

விடுகதை 38

விடுகதை:
ராஜாவான இவனுக்கோ
கை அடிக்கடி நீழும்
கையை நீட்டி பேசவே
காத்தாஈ போன்று நின்றது -அவன் யார்?


விடை:
யெரோபெயாம் - 1 இராஜ 13:1-4.


Sunday 6 February 2011

விடுகதை 37

விடுகதை:
கையினால் வரைந்தால் அது சித்திரம்
கைக்குள் வரைந்தால் நீ பத்திரம் -அது எங்கே?


விடை:
கர்த்தரின் உள்ளங்கையில் – ஏசா 49:16.


Saturday 5 February 2011

விடுகதை 36

விடுகதை:
வீட்டிலே துரத்தலாம்
வீதிக்கு அனுப்பலாம்
ஒதுக்கப்பட்டு, துரத்தப்பட்டு
ஓரமாய் கிடந்தவன்
காலம் வர, நேரம் வர
முக்கியமாய் மாறினான் -அது என்ன?


விடை:
மூலைக்கு தலைக்கல் – சங் 118:22.


Friday 4 February 2011

விடுகதை 35

விடுகதை:
ஊர் ஊராக சுற்றியவன்
ஊதாரியாக வாழ்ந்தவன்
சொந்தம் விட்டு பறந்தவன்
சொத்தை எல்லாம் அழித்தவன்
தவிட்டை தேடி தவித்தவன்
தகப்பனை நாடி நடந்தவன் -அவன் யார்?


விடை:
இளைய மகன் – லூக்கா 15:11-24.



Thursday 3 February 2011

விடுகதை 34

விடுகதை:
புகழ் வந்தால் ஓடி வரும்
பணம் வந்தால் பறந்து வரும்
விழித்திருந்தால் தப்பலாம்
சகித்திருந்தால் ஜெயிக்கலாம் -அது என்ன?


விடை:
சோதனை – யாக் 1:12.


Wednesday 2 February 2011

விடுகதை 33

விடுகதை:

கல்லறை மனிதர்கள்
கபடம் நிறைந்தவர்கள்
கல்லறைகள் கட்டுவார்கள்
கல்லறை போல் வாழ்வார்கள் -அவர்கள்

யார்?

விடை:
வேத பாரகர், பரிசேயர் – மத் 23:27-29.


Tuesday 1 February 2011

விடுகதை 32

விடுகதை:
படுக்கையில் ஆடுவான்
பயங்கரமாய் தூங்குவான்
பகுதியெல்லாம் கட்டுவான்
பரிதாபமாய் வாழுவான் -அவன் யார்?


விடை:
சோம்பேறி – நீதி 26:14,15.