Search This Blog

Saturday 30 April 2011

விடுகதை 120

சிங்காசனத்தில் அமர்ந்தவருக்கு
அப்பா அம்மா இல்லையாம்
ஆசாரியப் பணி செய்தவருக்கு
ஆதியும் அந்தமும் இல்லையாம் -அது யாருக்கு?

விடை:
மெல்கிசேதேக்கு – எபி 7:1-3.


Friday 29 April 2011

விடுகதை 119

பிரதமரை பார்க்கணுமா
பிரசிடண்டை பார்க்கணுமா
முதல்வரை பார்க்கணுமா
முக்கியமானோரை பார்க்கணுமா
பாதையில்லா இடத்திலே
பாதைகளை ஏற்படுத்தும்
சூப்பரான ஆயுதம் -அது என்ன?

விடை:
வெகுமதி – நீதி 18:16.


Thursday 28 April 2011

விடுகதை 118

கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை
கண்ணுக்கு தெரிந்தது
காலுக்கோ முடியவில்லை -அது என்ன? யாருக்கு?

விடை:
கானான்,மோசே – உபா 34:1-5.


Wednesday 27 April 2011

விடுகதை 117

கர்ப்பப் பையிலிருந்த கருவை
கழுவி எடுத்தார் கர்த்தர் -அது யார்?

விடை:
எரேமியா 1:5.


Tuesday 26 April 2011

விடுகதை 116

போட்டி இல்லை, பொறாமை இல்லை
சண்டைச் சச்சரவு எதுவும் இல்லை
கூடுதல் இல்லை, குறைவு இல்லை
கூப்பாடு சத்தம் கேட்கவும் இல்லை
மனதிலே ஒருமை நிறைந்திருக்க
மகிழ்ச்சி அவர்களை சூழ்ந்திருக்க -அவர்கள் யார்?

விடை:
விசுவாசிகள் – அப் 2:44-47.


Monday 25 April 2011

விடுகதை 115

பழைய கஞ்சி குடித்தாலும்
படுத்த உடனே தூங்குவான் – ஆனால்
பொரித்த கோழி, அவித்த கோழி
உரித்த கோழி தின்று விட்டு
மெத்தையிலே புரண்டாலும்
தூக்கமே வராதாம் -அவர்கள் யார்?

விடை:
வேலை செய்கிறவன் / செல்வன் – பிர 5:12.


Sunday 24 April 2011

விடுகதை 114

அய்யா…
அம்மா…
கேட்காதவன் போல் போனால்
கேட்கமாட்டாராம் கர்த்தர் -அது யாருக்கு?

விடை:
ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்து கொள்ளுகிறவன் – நீதி 21:13.


Saturday 23 April 2011

விடுகதை 113

முக்காலம் அறிந்த முனிவர்கள்
முழி பிதுங்கி நின்றனர்
மறைந்த பொருள் தெரியாமல்
மரைந்தே விலகிச் சென்றனர் -அவர்கள் யார்?

விடை:
பாபிலோன் ஞானிகள் – தானி 5:8.


Friday 22 April 2011

விடுகதை 112

மோசேயின் மனைவி பெயரின் முதல் எழுத்து
தானியேலின் இருப்பிடத்தில் இரண்டாம் எழுத்து
இயேசு சுகப்படுத்திய வியாதியின் கடை எழுத்து
இவைகளை இணைத்தால் சிலுவை வரும் – அவை எவை?

விடை:
சிப்போராள், யாத் 18:2, கொலுமண்டபம், தானி 2:49, நீர்கோவை, லூக்கா 14:2-4


Thursday 21 April 2011

விடுகதை 111

ஆகாயத்தில் கழுகு
கன்மையில் பாம்பு
நடுக்கடலில் கப்பல்
இதனுடன் தொடர்புடைய இன்னொன்று -அது என்ன?

விடை:
ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழி – நீதி 30:19.


Wednesday 20 April 2011

விடுகதை 110

ஆபேலின் இரத்தம்
ஆறாகப் பாய்ந்தோட
உடன் வந்து இணைந்ததாம்
இன்னொரு இரத்த ஆறு -அது என்ன?

விடை:
பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம் – மத் 23:35.


Tuesday 19 April 2011

விடுகதை 109

விடுகதை:
இல்லாத ஒன்றை
இருப்பதாகச் சொல்லி
வைத்தியம் பார்க்கும்
மருத்துவர்கள் -அது என்ன? யார்?

விடை:
சமாதானம் தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் – எரே 8:10,11.


Monday 18 April 2011

விடுகதை 108

விடுகதை:
22,000 பேர் திரும்பி போக
10,000 பேர் மீதியாக இருக்க
300 பேர் மட்டும் நிலைத்திருக்க
மீதியானியரை முறிய அடித்தான் -அவன் யார்?

விடை:
கிதியோன் – நியாய 7:3-7.



Sunday 17 April 2011

விடுகதை 107

விடுகதை:
ஒரே கூட்டில்
உலகத்தின் ஜோடிகள்
ஒன்று சேர்ந்து விளையாடின -அது எங்கே?

விடை:
நோவா பேழை – ஆதி 7:1-9.



Saturday 16 April 2011

விடுகதை 106

விடுகதை:
எங்கும் குறை
எதிலும் குறை
நிறைகளைத் தேடியே
நித்தமும் ஓடினாலும்
குறைவு ஏதும் இன்றியே
குதூகலமாய் வாழுவார் -அவர்கள் யார்?

விடை:
கர்த்தரைத் தேடுகிறவர்கள் – சங் 34:10.



Friday 15 April 2011

விடுகதை 105

விடுகதை:
சும்மா சுத்தும் ஆசாமிக்கு
சோறு போடக் கூடாதாம் – அவன்
சோறும் சாப்பிடக் கூடாதாம் -அவன் யார்?

விடை:
வேலை செய்ய மனதில்லாதவன் – 2 தெச 3:10.


Thursday 14 April 2011

விடுகதை 104

விடுகதை:
அகல உழுகிறதை விட ஆழ உழணும்
அகலவும் உழமாட்டான்
ஆழவும் உழமாட்டான் – ஆனால்
அருப்பில் வந்து பிச்சைக் கேட்பான்
அழுது கொண்டே திரும்புவான் -அவன் யார்?

விடை:
சோம்பேறி – நீதி 20:4.



Wednesday 13 April 2011

விடுகதை 103

விடுகதை:
தலை கால் புரியாமல் ஆடுவான்
தலை மேல் ஏறி ஓடுவான்
தலையே இல்லாமல் விழுவான் – ஆனால்
அடக்கம் ஒடுக்கமாக வாழ்ந்து
அரியாசனத்தில் அமருவான் -அவர்கள் யார்?

விடை:
ஆமான், மொர்தேகாய் – எஸ் 7:1-8:2.



Tuesday 12 April 2011

விடுகதை 102

விடுகதை:
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
வைத்தியமானதை பைத்தியம் என்று
புத்தியீனர் சிலர் பிதற்றுகின்றனர் -அது என்ன?

விடை:
சிலுவையைப் பற்றிய உபதேசம் – 1 கொரி 1:18.


Monday 11 April 2011

விடுகதை 101

விடுகதை:
அண்ணன் தம்பி இரண்டு பேர்
மூத்தவன் காட்டில் இருப்பான்
இளையவன் வீட்டில் இருப்பான்
பிந்தியவன் ஏமாற்ற
முந்தியவன் ஏமாறுவான் -அவர்கள் யார்?

விடை:
ஏசா, யாக்கோபு – ஆதி 27:1-37.


Sunday 10 April 2011

விடுகதை 100

விடுகதை:
ஏ.பி.சி.டி படிப்போரே
ஏக்,தோ,தீன், படிப்போரே
இதனை முதலில் படியுங்கள்
இகத்தினை வாழச் செய்யுங்கள் -அது என்ன?

விடை:
நன்மை – ஏசா 1:17,18.

Saturday 9 April 2011

விடுகதை 99

விடுகதை:
பிரதர் தினகரன் பாடினாரு
ஃபாதர் பெர்க்மான்ஸ் ஆடினாரு
நேச ரோஜா ந்கைக்க
இஸ்ரவேல் ராஜா பாடியே ஆடினாரு -அவர் யார்?

விடை:
தாவீது ராஜா – 2 சாமு 6:16.


Friday 8 April 2011

விடுகதை 98

விடுகதை:
வேட்டையோ வேட்டை
கொள்ளை வேட்டை
சந்தனக் கட்டை வீரப்பன் அல்ல
சண்டைப்போட்ட சதாம் அல்ல
கர்த்தருக்கு முன்பு கம்பீரமாய் நின்ற
பல்த்த ஒரு வேட்டைக்காரன் -அவன் யார்?

விடை:
நிம்ரோத் – ஆதி 10:8,9


Thursday 7 April 2011

விடுகதை 97

விடுகதை:
நஷ்டம் என்று விட்டு விட்டு
குப்பை என்று தூக்கிப் போட்டு
இயேசுவினால் பிடிக்கப்பட்டு
இலக்கை நோக்கி ஓடினார் -அவர் யார்?

விடை:
பவுல் – பிலி 3:11-14.



Wednesday 6 April 2011

விடுகதை 96

விடுகதை:
வருடங்கள் மூன்று சுற்றி வந்து
வருமானம் ஏதும் இல்லை என்று
வருடம் ஒன்றைக் கூட்டிக் கொடுத்து
வருவேன் என்று திரும்பி சென்றான் -அவன் யார்?

விடை:
தோட்டக்காரர் – லூக் 13:6-9.



Tuesday 5 April 2011

விடுகதை 95

விடுகதை:
அளந்து பார்க்க அளவுகளில்லை
அறிந்துக் கொள்ள புத்தியுமில்லை – ஆனால்
இயேசு உலகினில் வந்ததால்
இதனை பார்க்க முடிந்தது -அது என்ன?

விடை:
அன்பு – எபே 3:18,19.


Monday 4 April 2011

விடுகதை 94

விடுகதை:
கண் உண்டு, காது உண்டு,
மூக்கு உண்டு, நாக்கு உண்டு – ஆனால்
அது வெறும் வெத்து வேட்டு -அது என்ன?

விடை:
விக்கிரகம் – சங் 115:4-6.


Sunday 3 April 2011

விடுகதை 93

விடுகதை:
முன்னே உடல் ஓட
பின்னே தலை திரும்ப
மேலே ஆவி பறக்க
அங்கே தானே நிற்க - அவள் யார்?

விடை:
லோத்தின் மனைவி – ஆதி 19:26.



Saturday 2 April 2011

விடுகதை 92

விடுகதை:
மலைகளின் மேல் உலாவரும்
தங்கத் தேர் -அது என்ன?

விடை:
சுவிசேஷகனின் பாதங்கள் – ஏசா 38:9-16.



Friday 1 April 2011

விடுகதை 91

விடுகதை:
சுற்றி சுற்றி வந்து
சத்தன் போட்டு கத்தி
பொத்தென்று விழுந்ததால்
சொந்தமாக்கி கொண்டனர் -அது என்ன? யாருக்கு?

விடை:
எரிகோ கோட்டை, இஸ்ரவேலர் – யோசு 6:1-21.