Search This Blog

Wednesday 31 August 2016

ரூத் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. பேரேசின் சந்ததியில் வந்த இஸ்ரவேல் ராஜா, யாருடைய பேரன்?
      ஓபேத் (4:22)
2. ரூத்தின் கணவர்கள் யார்? யார்?
       மக்லோன், போவாஸ் (4:10,13)
3. 👞 - இதை உறுதி சாட்சியாக கொடுக்கும் பழக்கம் எங்கிருந்தது?
      இஸ்ரவேலில் (4:7)
4. ஒருவரை கூப்பிட ஓய் என்ற சொல்லை பயன்படுத்தியது யார்?
      போவாஸ் (4:1) 

Tuesday 30 August 2016

ரூத் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. மாமியின் சொற்படி நடந்த மருமகள் யார்?
      ரூத் (3:6)
2. போவாஸ் ரூத்திற்கு கொடுத்த கோதுமையின் அளவு எவ்வளவு?
      ஆறுபடி வாற்கோதுமை (3:15)

Monday 29 August 2016

ரூத் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1.  ரூத் வயலில் சேகரித்த கோதுமையின் அளவு எவ்வளவு?
      ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை (2:17)
2. ரூத்திற்கு தயைபாராட்டின வயல்காரன் யார்?
     போவாஸ் (2:10,19)

Sunday 28 August 2016

ரூத் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. மரணம் நம்மை பிரிக்கும் வரை, சேர்ந்து வாழ்வேன் என திருமணத்தில் சாட்சி கொடுக்கிறது போல, சொன்னது யார்? யாரிடம்? 
     ரூத் நகோமியிடம் (1:17)
2. எப்பிராத்திய குடும்பம், மோவாபில் குடியிருந்த காலம் எவ்வளவு?
      ஏறக்குறைய பத்து வருஷம் (1:1-4)
3. தனக்கு தானே பெயரிட்டுக் கொண்டது யார்?
      நகோமி (1:20)

Saturday 27 August 2016

நியாயாதிபதிகள் - கேள்வி பதில்கள்

நியாயாதிபதிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
நியாயாதிபதிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

Friday 26 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.ஆண்டுதோறும் பண்டிகை கொண்டாடுவது எங்கே? 
       சீலோ (21:19) 
2.பென்யமீனர், எவர்களில் தங்களுக்கு மனைவிகளை பிடித்தார்கள்? 
      நடனம்பண்ணுகிறவர்களில் (21:23)
3.எங்கு வராத இஸ்ரவேலன் கொல்லப்படுவான்? 
      மிஸ்பா (21:5)
4.யாபேசின் குடிகளில், பென்யமீனருக்கு கொடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      நானூறு கன்னிப்பெண்கள் (21:12-14)
5.  இஸ்ரவேல் புத்திரர் மனஸ்தாபப்பட்டது யாருக்காக ? அறுப்புண்டு போனது எது?
பென்யமீனரை நினைத்து , 
இஸரவேலின் ஒரு கோத்திரம் - பென்யமீன்     (21:6)
6. ஜனங்கள் மனஸ்தாபப்பட்டது யாருக்காக ஏன்?*
பென்யமீனருக்காக..
இஸ்ரவேல் கோத்திங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று...
21:15

Thursday 25 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1.  ரிம்மோன் மலைக்கு ஓடிய, பென்யமீனர் எத்தனை பேர்?
      அறுநூறு பேர் (20:47)
2. கிபியாவின் யுத்தமனுஷரில், இடக்கை பலமுள்ளவர்கள் எத்தனை பேர்?
      எழுநூறு (20:15,16)
3. இஸ்ரவேலரால் அழிக்கப்பட்ட பென்யமீன் கோத்திரத்தார் மொத்தம் எத்தனை பேர்?
      இருபத்தையாயிரம் (20:46)
4. இஸ்ரவேலரின் பேச்சை கேட்க விருப்பமாயிராத கோத்திரம் எது? 
      பென்யமீன் (20:13)
5. பென்யமீனரால், இருமுறையாக அழிக்கப்பட்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்? 
     நாற்பதினாயிரம் (இருபத்தீராயிரம்+பதினெண்ணாயிரம்) (20:21,25)
6. இஸ்ரவேலர் சபையாக கூடின இடம் எது?
     மிஸ்பா (20:1)
7. கிபியா எந்த நாட்டில் உள்ளது?
பென்யமீன்     (20:4)
8. இரண்டாம்முறை  பென்யமீனர் இஸ்ரவேல் புத்திரரில் எத்தனைபேரைச் சங்கரித்தார்கள்?
பதினெண்ணாயிரம்     (20:25)

Wednesday 24 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. பிரயாணமாய் வந்தவர்களுக்கு, இராத்தங்க இடங்கொடுத்த விவசாயி எங்கே குடியிருந்தான்?
      கிபியா (19:16-21)
2. லேவியன் தன் மாமனார் வீட்டில் தங்கியிருந்த நாட்கள் எத்தனை?
      நான்கு (19:4-7)
3. லேவியன் தன் மறுமனையாட்டியின் உடலை எத்தனை துண்டுகளாக வெட்டினான்?
      பன்னிரண்டு (19:29)
4. லேவியனின் மறுமனையாட்டி தன் தகப்பன் வீட்டில் எத்தனை மாதம் இருந்தாள்?
நான்கு மாதம் (19:2)
5. கிழவனின் வீட்டைச் சூழ்ந்துகொண்டவர்கள் யார்?
பேலியாளின் மக்கள்   (19:22)
6. கிழவன் தன் மகளை எப்படிக் கூறினான்?
கன்னியாஸ்திரி    (19:24)

Tuesday 23 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. உயர்பதவி கிடைத்ததும், தன் எஜமானுக்கு துரோகம் பண்ணியது யார்?
     மீகா வீட்டு வாலிப ஆசாரியன் (18:18-20)
2. குடியிருக்க, போதிய இடமில்லாமலிருந்த கோத்திரம் எது?
      தாண் (18:1)
3. சகல வளங்களும் இருந்த இடத்தை பிடித்து, எரித்துப் போட்டது, எக்கோத்திரத்தார்?
      தாண் (18:10,27)
4. பயமில்லாமல், சுகமாய் குடியிருந்தது யார்?
      லாயீசு ஊரார் (18:7,27)
5.  இஸ்ரவேல் தேசத்தை வேவு பார்க்க வந்தவர்கள் எந்த கோத்திரத்தார்  எத்தனை பேர்?
தாண் கோத்திரத்தார், 5 பேர்
18:2
6. மறுபெயர் என்ன?
கீரியாத்யாரீம் ==.............................
லாயீஸ் ==......................................
Ans:
மக்னிதான் 18:12
தாண் 18:29


Monday 22 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. மீகாவின் தாய், தட்டானிடம் கொடுத்த தொகை எவ்வளவு?
      இருநூறு வெள்ளிக்காசு (17:4)
2. திருடிய பணத்தை திரும்ப கொடுத்தது யார்?
      மீகா (17:1,2)
3. வழி தெரியாமல் வந்த எனக்கு, ஆசாரியப்பணி கிடைத்தது - நான் யார்?
      யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் (17:7-12)
4. தன் வீட்டியில் இருந்த 1100 வெள்ளி காசு திருடிய வாலிபன் யார்?
 மீகா 17:2,4

Sunday 21 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. சிம்சோனால் 3முறை ஏமாற்றப்பட்டவள் எங்கு குடியிருந்தாள்? 
       சோரேக் ஆற்றங்கரையில் (16:4,15) 
2. இறக்கும் போது, தன்னோடு பல உயிர்களை⚰ பலி வாங்கியது யார்? 
      சிம்சோன் (16:30)
3.பணத்திற்காக, தன்னோடு அன்பாயிருந்தவனுக்கு துரோகம் பண்ணியது யார்? 
      தெலீலாள் (16:4-19)
4.சிம்சோன் கதவுகளை சுமந்து கொண்டு போன இடம் எது?     
      எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்கு (16:3)
5. பெலிஸ்தியரின் தெய்வம் யார்? 
      தாகோன் (16:23)
6.  சிம்சோனை தெலீலாள் பெலிஸ்தரிடம் பலமுறை காட்டிகொடுத்த போது கூட தன் புத்தியீனத்தை அனைத்தையும் மாற்றிக் கொள்ளாமல் இருந்தான் ஏன்?
 அனுதினமும் ஆசைக்காட்டி அன்போடு பேசி மயக்கினால் 16:16
7. சிம்சோனை தெலீலாள் எத்தனை விதமான கயிறால் கட்டினாள்?
 (மூன்றுவிதமான கயிறுகளினால்)

  •  உலராத பச்கையான கயிறு 16:7
  •  புதுக் கயிறு 16:11
  •  நெசவு நூல் (கயிறு) 16:13,14
8. ஒரு கிறிஸ்தவன் (சிம்சோன்) அந்நிய பெண்ணிடன் தொடர்பு வைத்துக் கொண்டப்படியால் அவன் முடிவு எப்படி இருந்தது?

  •  கர்த்தர் அவனுடன் இருந்து விலகினார் 16:20
  •  புறஜாதிகளுக்குள்ளே பரியாசம் பண்ணப்பட்டான் 16:27
  •  தப்பி ஓடாதப்படி இரு கண்களும் பிடுங்கப்பட்டது 16:21
  •  அவன் மரணம் அவர்களுக்கு இன்பமாய் இருந்தது 16:23
  •  இரு கை காலூம் தூணில் கட்டப்பட்டது 16:26

Saturday 20 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. தண்ணீர் கிடைத்த இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
      எந்நக்கோரி (15:19) 
 2.  கணவனின் தோழனுக்கு கொடுக்கப்பட்ட பெண் எவ்வூராள்?
      திம்னாத் (14:1,20,15:2-6)
3. யூதர்களில், கன்மலைக்கு சிம்சோனிடத்தில் போனவர்கள் எத்தனை பேர்?
      மூவாயிரம் (15:11)
4. 1000 பேரை கொன்ற இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
      ராமாத் லேகி (15:16,17)
5. தான் ஆசைப்பட்ட பெண் தனக்கு கிடைக்காத கோபத்தில் 300 நரியை பிடித்து வாலில் தீ வைத்து கட்டி திராட்சத்தோட்டத்தையும் ஒலிவத்தோப்பையும் எரித்துப் போட்டவன் யார்?
 சிம்சோன் 15:4,5
6. தாகத்திற்கு தண்ணீர் இல்லையே இறைவா என்று கர்த்தரிடம் கேட்டபோது என்ன நடந்தது?
ஒரு பள்ளத்தைப் பிளக்கபண்ணி தண்ணீர் வரபண்ணி கொடுத்தார் 15:18,19
7. கழுதையின் தாடை எலும்பை வைத்து சிம்சோன் எத்தனை பேரை அடித்துக் கொன்றான்?
 1000 பேரை 15:15

Friday 19 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கணவனின் தோழனுக்கு கொடுக்கப்பட்ட பெண் எவ்வூராள்?
      திம்னாத் (14:1,20,15:2-6)
2. சிம்சோன் சிங்கத்தையும், 30 மனுஷரையும் கொன்றதும் ஒரே பலத்தினால் - அது என்ன?
      கர்த்தருடைய ஆவியின் (14:6,19)
3. 7 நாட்கள் அழுதுகொண்டு இருந்தது யார்?
      சிம்சோனின் பெண்சாதி (14:17)
4.  போட்டியில் தோல்வி அடைந்தவனாய் கோபத்துடன் அஸ்கலோனுக்கு போய் 30 பேரை கொலை செய்த மனிதர் யார்?
 சிம்சோன் 14:18,19
5. கணவன் சொன்ன ரகசியத்தை தன் இன மக்களுக்கு சொல்லிக் கொடுத்து அவன் நண்பனை திருமணம் செய்த பெண் யார்?
 பெலிஸ்தரின் குமாரத்திகளில் பெண் (சிம்சோன் மனைவி) 14:17,20

Thursday 18 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. பயமுற்ற தன் கணவனுக்கு, தைரியமூட்டியது யார்?
      மனோவாவின் மனைவி (13:22,23)
2. பிள்ளைக்கு செய்ய வேண்டியதை போதிக்க ஜெபம் பண்ணியது யார்?
      மனோவா (13:8)
3. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணிடம் ஒரு தூதன் தோன்றி மதுபானம் குடியாதப்படி எச்சரிக்கையாக இரு  உனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று யாரிடம் சொன்னார்?
 மனோவா மனைவி 13:4,14
4. சிம்சோனை  ஆவியானவர் எப்போது  முதலில் வழிநடத்தத் துவங்கினார்?
தாண் பாளயத்தில் இருக்கையில். (13:25)

Wednesday 17 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. கீலேயாத் மனுஷர் எங்கே வாசமாயிருந்தார்கள்?
      எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே (12:4)
2. ஒரு வார்த்தை சொல்ல தெரியாமல், அழிந்தவர்கள் எத்தனை பேர்?
      நாற்பத்தீராயிரம் (12:6)
3. யெப்தா &  கீலேயாத் ஜனங்களோடு யுத்தத்திற்கு புறப்பட்டு எப்பிராயீம் மனிதர்களோடு யுத்தம் பண்ணி எத்தனை பேரை விழப்பண்ணினார்கள்?
 42,000 பேர்  12:6 
4. யெப்தா இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
 6 வருஷம் 12:7

Tuesday 16 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. தன்னை துரத்தினவர்களாலேயே, தலைவனாயிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டது யார்?
     யெப்தா (11:6,7)
2.அம்மோன் புத்திரரின் தெய்வம் யார்?
      காமோஸ் (11:24)
3. யெப்தாவிற்கு பிள்ளைகள் எத்தனை?
      ஒரே குமாரத்தி (11:34)
4. இஸ்ரவேலருக்கு தன் தேச வழியாய் போக இடங்கொடுக்க மறுத்து, தன் தேசம் அழிய காரணமாயிருந்தது யார்?
      சீகோன் (11:19-21)
5. இஸ்ரவேலில், ஆண்டுதோறும் 4 நாட்கள் புலம்பல் - யாரைக் குறித்து?
     யெப்தாவின் குமாரத்தி (11:40)
6.  அந்நிய பெண்ணுக்கு பிறந்த பரஸ்திரீயின் மகன் அம்மோன் புத்திரரை முறியடித்து இஸ்ரவேலை காப்பாற்றினான் அவன் யார்?
 யெப்தா 11:1,33
7. மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டவன் தேவனால் பயன்படுத்தப்பட்டான் அவன் யார்?
 யெப்தா 11:2,7,
8. எல்லா மனிதர்களுக்கும் மரித்த பின்பு தான் துக்கம் கொண்டாடுவார்கள் ஆனால் ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் அவள் உயிரோடு அருகில் வைத்துக்கொண்டு 2 மாதம் துக்கம் கொண்டாடினார்கள் அவள் யார்?
 யெப்தா மகள் 11:38-40

Monday 15 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. 30குமாரர்களை உடைய நியாயாதிபதி யார்?
     யாவீர் (10:3,4)
2. அம்மோனியருக்கு எதிராய்😡 இஸ்ரவேலர் பாளயமிறங்கின இடம் எது?
      மிஸ்பா (10:17) 
3. தாத்தா, மகன், பேரன் - மூவருக்கும் ஈரெழுத்து பெயராம், தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஓரெழுத்தே வேறாம் - அவர்கள் யார்? 
     தாத்தா - தோதோ, மகன் -  பூவா, பேரன் - தோலா (10:1)
4. 30 கழுதை, 30 குமாரர், 30 ஊர்கள் கொண்ட நியாயாதிபதி யார்?
 யாவீர் 10:3
5. கர்த்தர் கோபத்தில் யாரை பார்த்து அந்நிய தெய்வங்களையே  வழிபட்டு வணங்குங்கள் அவர்கள் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்?
 இஸ்ரவேலரை பார்த்து   நியா 10:14 

Sunday 14 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. அரசரான பணிவிடைக்காரியின் மகன் யார்?
      அபிமெலேக்கு (9:17) 
2. 70 பேரை கொலை செய்தவன் யார்?
      அபிமெலேக்கு (9:4,5)
3. அபிமெலேக்கை கொல்ல பெண், பயன்படுத்தியது என்ன?
      எந்திரக்கல்லின் துண்டு (9:53) 
4. அபிமெலேக்கை யுத்தம் பண்ண அழைத்தது யார்?
      காகால் (9:28,29)
5. மரங்கள்🌳🌴🌲 ராஜாவாயிருக்க, எந்த மரங்களிடம் கேட்டன?
      ஒலிவமரம், அத்திமரம் (9:8-11)
6. ஒரே கல்லில் 70 பேரை கொலை செய்த கொலைகாரன் யார்?
 அபிமெலேக்கு நியா 9:5
7. மரம் செடி பழத்தை வைத்து கதை சொல்லி ஜனங்களை எச்சரிக்கை கொடுத்தது யார்?
 யோதாம் நியா 9:7-15
8. 1000 பேரை தீயிட்டு கொள்ளுத்தியவன் ஒரு பெண்ணின் கையால் எந்திரக்கல்லினால் அடிபட்டு மண்டை உடைந்து சாக துடித்தவன் யார்?
 அபிமெலேக் நியா 9:49,54

Saturday 13 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. அப்பம் கொடுக்க மறுத்து கொல்லப்பட்டவர்கள் யார்?
      பெனூவேலின் மனுஷர் (8:8,9,17)
2. கிதியோனுக்கு பிறகு, இஸ்ரவேலர் பின்பற்றிய தெய்வங்கள் எவை?
      பாகால்கள், பாகால்பேரீத் (8:33)
3. மீதியானிய ராஜாக்கள் யார்?
      சேபா, சல்முனா (8:12)
4. கிதியோனின் முதல் மற்றும் கடைசி குமாரன் யார்? யார்?
      யெத்தேர், யோதாம் (8:20,9:5)
5.  உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று மிரட்டியது யார்?
 கிதியோன் 8:7
6. எல்லா காரியத்திலும் கர்த்தருக்கு பயந்து நடந்த கிதியோன் ஒரு காரியத்தில் மட்டும் விழ்த்தப்பட்டான் அது என்ன?
 பொன்னினால் ஏபபோத்தை உண்டு பண்ண காரணமாய் இருந்தான் நியா 8:27

Friday 12 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. ஆரோத்தில் பாளயமிறங்கினவர்கள் மொத்தம் எத்தனை பேர்?     
     முப்பத்தீராயிரம் (இருபத்தீராயிரம்+பதினாயிரம்) (7:1-3)
2.  *🦗🦗🦗* - இவைகளுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டவர்கள் யார்?
      மீதியானியர், அமலேக்கியர், கிழக்கத்திப் புத்திரர் (6:4,5, 7:12)
3. தங்கள் பெயரையுடைய இடத்திலேயே அழிக்கப்பட்டவர்கள் யார்?
      ஓரேப், சேப் (7:25)
4. பயமும் திகிலும் இருந்த 22,000 பேர் யுத்தத்திற்கு செல்லாமல் பயந்து வீடு திரும்பினார்கள்.ஆனால் 300 சிறுபடை அந்த பெரும் படையை தகர்க்கும் என்ற மன தைரியத்தோடு போருக்கு சென்ற மனிதன் யார்?
 கிதியோன் நியா 7:3,7,10,11
5. பானை உடையும் சத்தத்தை வைத்து யுத்த களத்தை மிரளவைத்த யுத்த வீரர்கள் யார்?
 300 நபர்கள் கொண்ட கிதியோன் படை நியா 7:16, 20,21

Thursday 11 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. கிதியோனின் வேறுபெயர்கள் எவை?
      யெருபாகால், இஸ்ரவேலனுடைய பட்டயம் (6:32,7:14)
2. கிதியோனின் கோத்திரம் எது?
       மனாசே (6:15)
3. பகலிலோ பயம், இரவிலோ கர்த்தர் சொன்ன காரியத்தை துணிந்து செய்தேன் - நான் யார்?
      கிதியோன் (6:27)
4. கற்பாறை மேல் ஊற்ற சொன்னது என்ன?
      ஆணம் (6:20)
5. கிதியோன் கட்டிய பலிபீடப் பெயர் என்ன?
      யெகோவா ஷாலோம் (6:24)
6. *🦗🦗🦗* - இவைகளுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டவர்கள் யார்?
      மீதியானியர், அமலேக்கியர், கிழக்கத்திப் புத்திரர் (6:4,5, 7:12)
7.  வந்தது தேவதூதர் என்று அறிந்துக் கொள்ளாமல் அவர் சொற்படி சிறப்பான உணவு செய்து கொடுத்தவன் யார்?
 கிதியோன் நியா 6:21,22
8. கர்த்தருக்கும் மனிதனுக்கும் பயந்து மிக தந்திரமாய் செயல்பட்டது யார்?
 கிதியோன் நியா 6:27 

Wednesday 10 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் பட்சமாய் நில்லாததால், சாபம் பெற்றது யார்? 
      மேரோசின் குடிகள் (5:23)
2.  🖋✍ - இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
      செபுலோன் (5:14)
3. யாபீனின் சேனாபதியோடு, யுத்தம் பண்ணினவை எவை? 
      நட்சத்திரங்கள் (5:20)
4. இஸ்ரவேலர் எவர்களை தெரிந்து கொண்டதால் யுத்தம் வந்தது? 
      நூதன தேவர்கள் (5:8)
5. யுத்தத்தில் தங்களை உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள் யார்?
      செபுலோன், நப்தலி (5:18)
  

Tuesday 9 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. நயமாய் பேசி, தாகமும் தீர்த்து, கொலையும் செய்தது யார்?
     யாகேல் (4:18-21)
2. யாகேல் குடியிருந்த இடம் எது?
      கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே (4:11)
3.  பாராக் எத்தனை பேரை யுத்தத்திற்கு அழைத்துக் கொண்டு போக கட்டளைப் பெற்றான்?
     பதினாயிரம் பேர் (4:6)

Monday 8 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இஸ்ரவேலரை எவர்களிடமெல்லாம் விற்றார்?
      கூஷான்ரிஷதாயீம், யாபீன் (3:8,4:2)
2. ஏகூத், எக்லோனை எந்த கையால் கொலை செய்தான்?
       இடது கை (3:15,21)
3. ➕🚗 - இவனால் அடி வாங்கியவர்கள் எத்தனை பேர்?
      அறுநூறு (3:31)
4. மோவாபியரில் வெட்டப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      ஏறக்குறைய பதினாயிரம் பேர் (3:29)

Sunday 7 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. யோசுவா அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?
      திம்னாத்ஏரேசு (2:9)
2. கர்த்தர் ஜனங்களை பகைவரிடமிருந்து, இரட்சிக்க எவர்களை எழுப்பினார்?
      நியாயாதிபதிகளை (2:16)
3. தூதன் பேசின இடத்திற்கு என்ன பெயர்?
      போகீம் (2:1-5)

Saturday 6 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

 1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - என்ற பழமொழிக்கு உதாரணம் யார்?
      அதோனிபேசேக் (1:6,7)
2. எமோரியரால் நெருக்கப்பட்டவர்கள் யார்?
      தாண் புத்திரர் (1:34)
3. தன் பட்டணத்தை காட்டிக் கொடுத்தவன், தான் கட்டிய புது பட்டணத்திற்கு இட்ட பெயர் என்ன?
      லூஸ் (1:24-26)
4. யுத்தத்திற்கு போக தன் சகோதரனையும் கூட அழைத்தது யார்?
      யூதா (1:3) 

Friday 5 August 2016

யோசுவா - கேள்வி பதில்கள்

யோசுவா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
யோசுவா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

Thursday 4 August 2016

யோசுவா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. யோசுவா இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடம் எது?
      சீகேம் (24:25)
2. மேட்டில் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
       எலெயாசார் (24:33) 
3.  தேராகின் பிள்ளைகளில், கர்த்தரால் அழைக்கப்பட்டவன் யார்?
      ஆபிரகாம் (24:2,3)
4. யார் சொல்லை கேட்க, கர்த்தருக்க விருப்பமில்லாதிருந்தது? 
      பிலேயாம் (24:10)
5.  எமோரிய ராஜாக்களை துரத்தியவை எவை? 
      குளவிகள் (24:12)
6. பேசினதை கேட்ட, உயிரற்ற பொருள் எது? 
      கல் (24:26,27)

Wednesday 3 August 2016

யோசுவா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. அந்நிய ஜாதிகள் இஸ்ரவேலரின் கண்களுக்கு எப்படி இருப்பார்கள்?
      முள்ளுகள் (23:12,13)
2. பீடத்தின் பெயர் என்ன?
      ஏத் (22:34)
3. இஸ்ரவேலருக்கு தேசத்தை பங்கிட்டு கொடுத்தது யார்?
     யோசுவா (23:2-4)
4. கர்த்தர் இஸ்ரவேலருக்கு சொல்லிய, எவைகளில் ஒன்றும் தவறவில்லை?
    நல்வார்த்தைகளில் (21:45, 23:14)

Tuesday 2 August 2016

யோசுவா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் தங்கள் சகோதரரோடு, யுத்தம் பண்ண கூடின இடம் எது?
      சீலோ (22:12)
2. பீடம் கட்டி, கர்த்தருக்கு துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்?
      ரூபன், காத், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் (22:15,16)
3. சாபத்தீடானதில், துரோகம் செய்தவன் யார்?
      ஆகான் (22:20)

Monday 1 August 2016

யோசுவா அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இஸ்ரவேலருக்கு சொல்லிய, எவைகளில் ஒன்றும் தவறவில்லை?
     நல்வார்த்தைகளில் (21:45, 23:14)
2. முதல் சீட்டு கிடைக்கப்பெற்ற லேவியின் புத்திரன் யார்?
      கோகாத் (21:9)
3. கேதேசை அடைக்கலப் பட்டணமாக பெற்ற லேவி புத்திரர் யார்?
      கெர்சோன் (21:27-33)
4. லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைபெற்ற வம்சம் எது?அவர்கள் யார்?
கோகாத்தியர், ஆரோனின் குமாரர்     (யோசுவா21:-9)
5. கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு சொல்லியிருந்த நல்வார்த்தைகள் எப்படி போகவில்லை?
தவறிப்போகவில்லை     (யோசுவா 21:-45)