Search This Blog

வேதாகம துணுக்கு

மோசேயின் கற்பலகை
செங்கடலை கடந்தது எப்படி?
குடிமதிப்பு
பரிசுத்த வேதாகமம்
பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது
தீர்க்கதரிசி
அல்பா, ஓமெகா
நான்கு சுவிசேஷங்களிலும்
மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலையும்
அதிகாரப் பிரிவுகள்
உடன்படிக்கைப் பெட்டி
சொப்பனங்களின் தீர்க்கதரிசி
கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும்
சீஷர்களின் மரணம்
INRI
வேதாகம பயணம்
அப்பா பிதாவே
சேலா





2 இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.




மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.




சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.




சாஸ்திரிகள் கீழே கண்ட நட்சத்திரத்தை குறித்து மத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.




வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23

கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர் ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.

நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.

இயேசு கிறிஸ்துவின் உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மில பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.

தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

“தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.

“அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.

லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது – லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.

லேவியராகமத்தில் “கர்த்தர்” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.

யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.

இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.

பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது – லேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.


தமிழ் புதிய ஏற்பாடு கி.பி 1714 –ம் ஆண்டு தரங்கம்பாடியில் சீகன் பால்கு ஐயர் என்பவரால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

ஹென்றி பாவர் என்பவர் தலைமையில் மூழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது இன்று வரை அநேக தமிழ் கிறிஸ்தவர்களின் கரங்களில் தவழுவதும் இந்த மொழிப்பெயர்ப்பே.

வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.

மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.

பிதாவாகிய தேவனை “அப்பா” என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிடஊஅட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).

கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமு இதுவே).



நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

பழைய ஏற்பாட்டில் நீளமான அதிகாரம் சங்கீதம் 119 புதிய ஏற்பாட்டில் லூக்கா 1.