Search This Blog

Tuesday 31 January 2017

II நாளாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. ஆசாவால் சிறையில் வைக்கப்பட்டது யார்?
      அனானி (16:7-10)
2. வியாதி வந்து மரித்தது யார்?
      ஆசா  (16:12,13)
3. பரிசுகளை வாங்கிக் கொண்டு, இஸ்ரவேல் ராஜாவை வழிமாறிப் போக செய்தது யார்?
      பென்னாதாத் (16:1-5)

Monday 30 January 2017

II நாளாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. தேவ ஆவி இறங்கி, தீர்க்கத்தரிசனம் சொன்னது யார்?
       அசரியா (15:1,2)
2. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
      இளைப்பாறுதல் (14:7, 15:15)
3. ஆசா காலத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கை என்ன?
      கர்த்தரை தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்பட வேண்டும் (15:13)
4. தன் தாயை ராஜபதவியிலிருந்து விலக்கியது யார்?
     ஆசா (15:16)

Sunday 29 January 2017

II நாளாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
      இளைப்பாறுதல் (14:7, 15:15)
2. ஆசாவுக்கு எதிராக வந்த எத்தியோப்பியன் யார்?
     சேரா (14:9)
3. "லேசான காரியம்" என்ற பாடல் வரிகளை சொன்ன ராஜா யார்?
      ஆசா (14:11)

Saturday 28 January 2017

II நாளாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. தேவன் தங்கள் சேனாபதி என்றது யார்?
      அபியா (13:12)
2.  அடி வாங்கி மரித்தது யார்?
       யெரொபெயாம் ( 13:20)
3. அபியா ஏறின மலை எது?
      செமராயீம் (13:4)
4. ஆர்ப்பரித்து, வெற்றி பெற்றவர்கள் யார்?
      யூதா மனுஷர் (13:15)

Friday 27 January 2017

II நாளாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ஆலயப் பொருட்களை எடுத்து சென்றது யார்?
      சீஷாக் (12:9)
2. பொன்னுக்கு பதில் வெண்கலத்தில் மாற்றுப்பொருள் செய்தது யார்?
      ரெகொபெயாம் (12:10)

Thursday 26 January 2017

II நாளாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. லேவியரை ஊழியம் செய்யாமல் ஒதுக்கிய ராஜா யார்?
      யெரொபெயாம் (11:14)  
2. 88 பிள்ளைகளை உடையவன் யார்?
      ரெகொபெயாம் (11:21)
3. சகோதரர் யுத்தம் செய்யாமலிருக்க, தேவன் பயன்படுத்திய மனுஷன் யார்?
      செமாயா (11:2-4)

Wednesday 25 January 2017

II நாளாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. கல் எறிந்து கொல்லப்பட்டது யார்?
      அதோராம் (10:18)
2. இளைஞர்களின் ஆலோசனையினால், மேன்மை இழந்து ஓட்டம் பிடித்தது யார்? 
      ரெகொபெயாம் (10:14-18)

Tuesday 24 January 2017

II நாளாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. சாலொமோன் கற்களைப் போல அதிகப்படுத்தியது என்ன?
      வெள்ளி (9:27)
2. யாரும் கொடுக்காத பரிசுப்பொருளை, சாலொமோனுக்கு கொடுத்தது யார்?
      சேபாவின் ராஜஸ்திரீ (9:9)
3. சாலொமோனை சோதித்தது யார்?
      சேபாவின் ராஜஸ்திரீ (9:1,2)
4. ஒரு பரிசையின் செலவு ------, ஒரு கேடகத்தின் செலவு ------
      அறுநூறு சேக்கல் நிறை பொன், முந்நூறு சேக்கல் நிறை பொன் (9:15,16)
5. 666 - என்ன?
      சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன்னின் தாலந்து நிறை (9:13)

Monday 23 January 2017

II நாளாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. அரமனையிலிருந்து மாளிகைக்கு குடியேறியது யார்?
      பார்வோனின் குமாரத்தி (8:11)
2. வனாந்தரத்தில், சாலொமோன் கட்டியது என்ன?
      தத்மோர் (8:4)
3. ராஜ கட்டளைகளுக்கு, கீழ்ப்படிந்து நடந்தவர்கள் யார்?
      ஆசாரியர், லேவியர் (8:15)

Sunday 22 January 2017

II நாளாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. ஜெபத்திற்கு, கர்த்தரின் 👀 ------, 👂🏻👂🏻 -------
      திறந்தவைகளும், கவனிக்கிறவைகளுமாயிருக்கும் (7:15)
2. பலிகள் செலுத்த போதுமான இடம் இல்லை - எதில்?
     வெண்கலப் பலிபீடம் (7:7)

Saturday 21 January 2017

II நாளாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. ஆசாரியர் ------ தரித்து, பரிசுத்தவான்கள் ------ மகிழ்வார்களாக.
      இரட்சிப்பைத், நன்மையிலே (6:41)
2.  -------- கர்த்தரின் வாசஸ்தலம்.
      பரலோகம் (6:21,30,33,39)
3. பீடத்தில் நின்று உரையாற்றியது யார்?
      சாலொமோன் (6:13)
4. தேவன் மனுஷனின் ------ அறிந்தவர்.
      இருதயம் (6:31) 

Friday 20 January 2017

II நாளாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. இசைக் கலைஞரான ஆசாரியர்கள் எத்தனை பேர்?
      நூற்றிருபது (5:12)
2. தேவனுடைய பெட்டி கொண்டு வந்த மாதம் எது?
     ஏழாம் (5:2-5)
3. ஆசாரியர், ஆலயத்தில் நிற்கக்கூடாதது எதினால்? பிரவேசிக்க முடியாதது எதினால்?
       மேகத்தினால், கர்த்தருடைய மகிமையினால் (5:14, 7:2)
4. தேவனுடைய பெட்டியில் இருந்தது என்ன?
      இரண்டு கற்பலகைகள் (5:10)

Thursday 19 January 2017

II நாளாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. கழுவுவதற்காக உண்டாக்கப்பட்டது என்ன? 
      பத்து கொப்பரைகள் (4:6) 



Wednesday 18 January 2017

II நாளாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பெயர் சொல்லப்பட்டுள்ள தங்கம், பொன் வகைகள் எவை?
      ஓப்பீரின் தங்கம், பர்வாயீமின் பொன் (I நாளாகமம் 29:4, 3:6)
2. கால்களால் ஊன்றி நின்றவை எவை?
     கேருபீன்கள் ( 3:13)
3. தீரு ராஜாவால் சாலொமோனிடம் அனுப்பப்பட்டது யார்?
      ஈராம் அபி (2:13,3:16)
4. சாலொமோன் ஆலயம் கட்டிய மலை எது?
      மோரியா (3:1)

Tuesday 17 January 2017

II நாளாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. லீபனோன் மரங்கள் எவ்விடம் வரை கொண்டு வரப்படும்?
      யோப்பா (2:16)
2. எதை அறிந்தவனை, சாலொமோன் தன்னிடம் அனுப்ப கேட்டான்?
      கொத்து வேலை அறிந்தவனை (2:7)
3. தீரு ராஜாவால் சாலொமோனிடம் அனுப்பப்பட்டது யார்?
      ஈராம் அபி (2:13,3:16)
4.  எந்த வேலையாட்களுக்கு சாலொமோன் சாப்பாட்டிற்கு தேவையானதை கொடுப்பதாக சொன்னான்?
     மரங்களை வெட்டுகிற ஈராமின் வேலையாட்களுக்கு   (2:10)

Monday 16 January 2017

II நாளாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. சாலொமோனின் குதிரை வீரர்கள் எத்தனை பேர்?
       பன்னீராயிரம் (1:14)
2. 10000 சர்வாங்க தகனபலி செலுத்தின இடத்தை உண்டாக்கியது யார்?
      பெசலெயேல் (1:5,6)

Sunday 15 January 2017

I நாளாகமம் - கேள்வி பதில்கள்

I நாளாகமம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
I நாளாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

Saturday 14 January 2017

I நாளாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. ரத்தினங்கள் கொடுக்கப்பட்டது யாரிடம்?
      யெகியேல் (29:8)
2. இருமுறை அரசனாக்கப்பட்டது யார்?
     சாலொமோன் (29:22)
3. யாருக்கும் இல்லாதவைகளாக, சாலொமோனுக்கு கிடைக்கப் பெற்றவைகள் எவை?
      ராஜரிக மகத்துவம், ஐசுவரியம், சம்பத்து, கனம் (29:25, II நாளாகமம் 1:12)
4. பெயர் சொல்லப்பட்டுள்ள தங்கம், பொன் வகைகள் எவை?
      ஓப்பீரின் தங்கம், பர்வாயீமின் பொன் (29:4, II நாளாகமம் 3:6)
5. தாவீது கால தீர்க்கத்தரிசிகள் யார்? யார்?
      சாமுவேல், நாத்தான், காத் (29:30)
6. -------- என்னும் நம்பிக்கை .
      நிலைத்திருப்போம் (29:15)
7. கர்த்தரின் கரத்தில் எவைகள் உண்டு?
      சத்துவமும், வல்லமையும் (29:12)

Friday 13 January 2017

I நாளாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை காண்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
      தேட வேண்டும் (28:9)
2. கட்டட மாதிரி எழுதப்பட்டது யாரால்?
      கர்த்தருடைய கரத்தினால் (28:19)
3. கால் ஊன்றி நின்றது யார்?
      தாவீது, (28:2)
4. தாவீதின் தேவன் யார்?
      தேவனாகிய கர்த்தர் (28:20)
5. கர்த்தர் அரசாள தெரிந்து கொண்ட தாவீதின் குமாரன் யார்?
      சாலொமோன் (28:5)

Thursday 12 January 2017

I நாளாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1. கோத்திர தலைவர்கள் வரிசையில், இடம்பிடித்த சந்ததி தலைவன் யார்? 
      சாதோக் (27:17)
2. புத்தியுள்ள ஆலோசனைக்காரன் யார்? 
     யோனத்தான் (27:32)
3. பொருத்துக:- 
         a) 👨🏻‍🌾👩🏻‍🌾 - ஓபில்
         b) 🌳🌵 - எஸ்ரி
         c) 🐪🐫 - யாசிசு
         d) 🐐🐏 - பால்கானான்

விடைகள் :  
 a) 👨🏻‍🌾👩🏻‍🌾 - எஸ்ரி (27:26)
 b) 🌳🌵 - பால்கானான் (27:28)
 c) 🐪🐫 - ஓபில் (27:30)
 d) 🐐🐏 - யாசிசு (27:31)

Wednesday 11 January 2017

I நாளாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. ஊழியப்பணிக்கு நியமிக்கப்பட்ட, ஓபேத்ஏதோமின் குடும்பத்தார் எத்தனை பேர்?
      அறுபத்திரண்டு (26:8)
2. மேற்கு இஸ்ரவேல் மேல், வேலைக்காக நியமிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      அசபியா அவன் சகோதரர் ஆயிரத்து எழுநூறு பேர் (26:30)
3. மூத்தவனல்ல, ஆனாலும் தலைவன் - நான் யார்?
      சிம்ரி (26:10)
4. பொக்கிஷ பிரதானி யார்? 
      செபுவேல் (26:24)
5. விவேகமுள்ள யோசனைக்காரன் யார்? 
      சகரியா (26:14),

Tuesday 10 January 2017

I நாளாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. பாடல் பயிற்சி பெற்று, சீட்டுப் போடப்பெற்ற பாடகர்கள் எத்தனை பேர்?
       இருநூற்றெண்பத்தெட்டு (25:7)
2. 17 - வது பாடகர் வரிசை சீட்டு யாருக்கு விழுந்தது?
      யோஸ்பேக்காஷா (25:24)
3. ஞானதிருஷ்டிக்காரனாகிய பாடகரின் பிள்ளைகள் எத்தனை பேர்?
      பதினேழு பேர் -  14 குமாரர், 3 குமாரத்திகள் (25:4,5)

Monday 9 January 2017

I நாளாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. புத்திரனில்லாமல் மரித்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      3 (23:22,24:2)
2. ஆரோனின் குமாரர்கள் பெயர்களை சீட்டுகளில் எழுதியது யார்?
      செமாயா (24:5,6)

Sunday 8 January 2017

I நாளாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. புத்திரனில்லாமல் மரித்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      3 (23:22,24:2)
2. கர்த்தரை துதிக்கிறதற்கு நியமிக்கப்பட்ட லேவியர் எத்தனை பேர்?
      நாலாயிரம் (23:5)
3. ஒரே ஒரு மகனை உடையவனின் தகப்பன் யார்?
      மோசே (23:15-17)

Saturday 7 January 2017

I நாளாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. தகப்பன் தன் மகனிடம் எதை செய்தால், பாக்கியவானாய் இருப்பாய் என்றார்?
      கர்த்தர் கற்பித்த நியமங்களையும், நியாயங்களையும் செய்ய (22:13)
2. எது மகா பெரிதாக இருக்க வேண்டும் என தாவீது எண்ணினான்?
      கர்த்தருக்கு கட்டப்படும் ஆலயம் (22:5)

Friday 6 January 2017

I நாளாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. கொள்ளை நோயால் இறந்தவர்கள் எத்தனை பேர்?
     எழுபதினாயிரம் (21:14)
2. தாவீது வாங்கின நிலத்தின் தொகை எவ்வளவு?
     அறுநூறு சேக்கல் நிறைபொன் (21:25)
3. தாவீது எங்கு போக, கட்டளை பெற்றான்?
      எபூசியனாகிய ஒர்னானின் களம் (21:18)
4. யோவாபால் கணக்கெடுக்கப்படாத கோத்திரங்கள் எவை?
      லேவி, பென்யமீன் (21:6)

Thursday 5 January 2017

I நாளாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் தலையில் வைக்கப்பட்ட கிரீடம் யாருடையது? 
      அம்மோன் புத்திர ராஜாவின் (20:1,2) 
2. 🖐🏻🖐🏻✌🏻✌🏻🤺 - யார்? 
      யோனத்தான் (20:6,7)


Wednesday 4 January 2017

I நாளாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. இணைந்து யுத்தம் நடத்திய சகோதரர்கள் யார்?
      யோவாப், அபிசாய் (19:10-13)
2. பொய் சொல்லை கேட்டு, தீமையான காரியம் செய்தது யார்?
      ஆனூன் (19:1-7) 

Tuesday 3 January 2017

I நாளாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. உதவுவதிலோ நல்மனம், போன இடங்களிலோ மாட்டிக்கொள்வோம் - நாங்கள் யார்?
      சீரியர் (18:5,19:18,19)
2. தாவீதிடம் அனுப்பப்பட்ட இளவரசன் எத்தேசத்தான்?
      ஆமாத் (18:9,10)
3. கூனி யாருடைய பட்டணம்? 
      ஆதாரேசர் (18:8)
4. தாவீதின் மந்திரி, சம்பிரதி யார்? யார்? 
      யோசபாத், சவிஷா (18:15,16)

Monday 2 January 2017

I நாளாகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரால் மீட்கப்பட்ட ஒரே ஜாதி எது?
       இஸ்ரவேல் (17:21)
2. தாவீதின் வீடு எந்த மரத்தாலானது?
     கேதுரு (17:1)

Sunday 1 January 2017

I நாளாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1.  I நாளாகமம்:16:8-22, 23-33 வசனங்கள் அடங்கிய சங்கீதம் எவை?
      சங்கீதம் 105,96