Search This Blog

Tuesday 31 May 2011

விடுகதை 151

அடங்காத கிடாரி இவன்
அப்பம் சுடும் அடுப்பு இவன்
திருப்பிப் போடாத அப்பம் இவன்
விரும்பப்படாத பாத்திரம் இவன்
பேதையான புறாவாய், மோசம் போக்கும் வில்லாய்
உலர்ந்து போன வேரானான் - அவன் யார்?

விடை:
எப்ராயீம் – ஓசியா 7:1-10.



Monday 30 May 2011

விடுகதை 150

விடுகதை:
ஆட்டின் பின்னே நடந்தவன்
ஆண்டவரின் பணியை செய்தான்
மீனைப் பிடிக்க சென்றவன்
மீட்பரின் பணியைச் செய்தான் – ஆனால்
மாட்டின் பின்னே நடந்தவன்
மாட்டிக் கொண்டான் ஆண்டவரின் பணிக்கு -அவன் யார்?

விடை:
எலிசா – 1 இரா 19:15-21.


Sunday 29 May 2011

விடுகதை 149

விடுகதை:
ஒவ்வொரு மனிதருக்குள்ளும்
குட்டி உலகம் ஒன்று
கும்மாளமிடுகின்றது -அது என்ன?

விடை:
நாவு – யாக் 3:6-8.


Saturday 28 May 2011

விடுகதை 148

விடுகதை:
ஆயுசு நூறு என்று
ஆனந்தத்தால் வாயைத் திறந்து
ஆர்ப்பரித்து கத்தினாலும்
ஆண்டவர் தந்த ஆவியிலே
ஆயுசுக்கு அளவு உண்டு -அது எவ்வளவு?

விடை:
120 வருடங்கள் – ஆதி 6:3.


Friday 27 May 2011

விடுகதை 147

விடுகதை:
பகல் நேரம் கடக்க
பாடல் சத்தம் கேட்க
பூமி மிகவும் அதிர
கட்டுகள் எல்லாம் அவிழ
சீடர்கள் அங்கே இருக்க -அவர்கள் யார்?

விடை:
பவுல், சீலா – அப் 16:25-28.


Thursday 26 May 2011

விடுகதை 146

விடுகதை:
வெட்டி வேலை ஆபிஸரு
பட்டி தொட்டி சுத்தினாரு
சட்டிப் பானையை உருட்டினாரு
தவிட்டையும் தேடியே ஓடினாரு
பட்டினியால் உருண்டாரு -அவர் யார்?

விடை:
இளையகுமாரன் – லூக்கா 15:13-17.


Wednesday 25 May 2011

விடுகதை 145

விடுகதை:
அத்தேனே பட்டணத்தில்
அர்த்தமுள்ள நீதிமன்றம் -அது என்ன?

விடை:
மார்ஸ் மேடை – அப் 17:19-23.


Tuesday 24 May 2011

விடுகதை 144

விடுகதை:
கைவீசம்மா கைவீசு
கஷ்டம் வரும்போது கைவீசு
வயது கூடினாலும் கைவீசு
வால வயதாகும் கைவீசு - வாசிப்பது எங்கே?

விடை:
சங்கீதம் 103:5.


Monday 23 May 2011

விடுகதை 143

விடுகதை:
குள்ளமான மனிதனுக்கு
குதித்து வந்ததாம் ஆசை
குடுகுடுவென மரத்தில் ஏறி
கூட்டத்திலே இயேசுவைப் பார்த்தானாம்
உள்ளத்தில் அவரை ஏற்றுக் கொண்டு
இல்லத்தில் விருந்து கொடுத்தானாம் -அவன் யார்?

விடை:
சகேயு – லூக்கா 19:1-10.


Sunday 22 May 2011

விடுகதை 142

விடுகதை:
அப்பா ஊரு கிரேக்கம்
அம்மா ஊரு யூதேயா
பாட்டி ஊட்டி வளர்க்க
பவுல் அண்ணன் அழைக்க
பரமனின் பணியைத் தொடர்ந்தார் -அவர் யார்?

விடை:
தீமோத்தேயு – அப் 16:1-3.


Saturday 21 May 2011

விடுகதை 141

விடுகதை:
வேஷம் போட்டு
மோஷம் செய்யும்
நாச மனிதரை மீட்டிடவே
பாசம் வைத்து
நேசக் குமாரனை
தேசத்திற்கு தந்தாரே -அவர் யார்?

விடை:
தேவன் – யோவான் 3:16.


Friday 20 May 2011

விடுகதை 140

விடுகதை:
சின்னத்தம்பி, பெரியத்தம்பி
சிலையாய் மலைத்து நிற்க
துண்டக் காணோம் துணியைக் காணோம்
எதிரிகள் எல்லாம் ஓட
முப்பத்தொரு ராஜாக்களை
முறியவே அடித்தான் -அவன் யார்?

விடை:
யோசுவா – யோசு 12:1-24.


Thursday 19 May 2011

விடுகதை 139

விடுகதை:
சுருக்கெழுத்துப் போட்டி போல்
சுருங்கப் பேச வேண்டுமாம் -அது என்ன?

விடை:
தேவ சமூகம் – பிர 5:2.


Wednesday 18 May 2011

விடுகதை 138

விடுகதை:
சும்மா கிடந்த சங்கை
ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி – இவனோ
சும்மா போன நாயின்
காதைப் பிடித்து இழுத்தானாம் - அவன் யார்?

விடை:
தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் – நீதி 26:17.


Tuesday 17 May 2011

விடுகதை 137

விடுகதை:
மாடு போனால் தேடலாம்
மானம் போனால்…!
மானத்தைக் கல்லில் கட்டி
கடலிலே தூக்கி எறிந்து
மதிக் கெட்டு நடந்தனர்
அக்காவும் தங்கையும் -அவர்கள் யார்?

விடை:
அகோலாள், அகோலிபாள் – எசே 23:1-4.


Monday 16 May 2011

விடுகதை 136

விடுகதை:
ஆசீர்வாத பிரசங்கம்
ஆவியில் நிறைந்த பிரசங்கம்
ஆளை மயக்கும் பிரசங்கம்
ஆளுக்கொரு பிரசங்கம்
எத்தனை பிரசங்கம் கேட்டாலும்
இதனை அறிக்கை பண்ணாவிட்டால்
எதனையும் நம்பக் கூடாதாம் -எதனை?

விடை:
இயேசு தேவனுடைய குமாரன் – 1 யோவா 4-3


Sunday 15 May 2011

விடுகதை 135

விடுகதை:
ஏசி ரூமிலே
கத்திக் குத்து
எமலோஜம் சென்றான்
அதின் சொந்தக் காரன் -அவன் யார்?

விடை:
மோவாபின் ராஜா எக்லோன் – நியாய 3:14-25.


Saturday 14 May 2011

விடுகதை 134

விடுகதை:
ஒரு கல்லில் இரண்டு மாங்காயாம்
ஒரே கல்லில் எழுபது கொலையாம் - கொலைகாரன் யார்?

விடை:
அபிமெலேக்கு – நியா 9:5.


Friday 13 May 2011

விடுகதை 133

விடுகதை:
இரவும் பகலும் படித்தவன்
இளைத்துக் களைத்துப் போனானாம்
மூளை எட்டிப் பார்க்கவே
ரோட்டிலே அலைந்து திரிந்தானாம் -அது எதினால்?

விடை:
அதிகபடிப்பு – பிர 12:12.


Thursday 12 May 2011

விடுகதை 132

விடுகதை:
ஆட்கள் இரண்டு, அடித்ததால் இரண்டு
கேட்டது இரண்டு, பிரித்தது இரண்டு
கிழித்தது இரண்டு, கிடைத்தது இரண்டு
கூப்பிட்டது இரண்டு, வந்தது இரண்டு
செத்ததோ நாற்பத்து இரண்டு
இவையனைத்தும் இரண்டில் இரண்டு -வாசிப்பது எங்கே!

விடை:
2 இராஜாக்கள் 2:2.


Wednesday 11 May 2011

விடுகதை 131

விடுகதை:
ஊசி முனையில் தவமிருந்தாலும்
ஊசிக் கண்ணில் வானம் தெரிந்தாலும்
ஊசிக் காதில் ஒட்டகம் போனாலும்
இவன் போக முடியாது பரலோகம் -அவன் யார்?

விடை:
ஐசுவரியவான் – மத் 19:23,24.


Tuesday 10 May 2011

விடுகதை 130

விடுகதை:
தலைவர்களின் கூட்டத்தில்
தலையை ஆட்டி ஆடி
தலையை வாங்கிச் சென்றாள் -அவள் யார்?

விடை:
ஏரோதியாளின் குமாரத்தி – மத் 14:6-11.


Monday 9 May 2011

விடுகதை 129

விடுகதை:
இந்தியா என்று சொல்லடா
இன்றே நிமிர்ந்து நில்லடா
இதயத்தில் துணிச்சல் கொள்ளடா
இகத்தை இயெசுவுக்காய் மாற்றடா
இந்தியா வேதத்தில் உள்ளதடா -அது எங்கே?

விடை:
எஸ்தர் 1:1.


Sunday 8 May 2011

விடுகதை 128

விடுகதை:
உலக உருண்டை
உருண்டு கீழே
விழுந்து கிடக்குது -அது எங்கே?

விடை:
பொல்லாங்கனுக்குள் – 1 யோவான் 5:19


Saturday 7 May 2011

விடுகதை 127

விடுகதை:
ஒரு மரமாம்
அந்த மரத்துக்கு 12 கிளையாம்
அதில் ஒன்று உடைந்து போனதாம்
உடைந்த கிளையின் கீழே
அந்த மரம் தஞ்சம் புகுந்ததாம் -அது யார்?

விடை:
யாக்கோபு – ஆதி 47:1-11.


Friday 6 May 2011

விடுகதை 126

விடுகதை:
அழகிலே சிறந்தவருக்கு
ஆயிரங்கள் ஈடில்லை
உலகிலுள்ள அழகையெல்லாம்
ஒன்று சேர்த்து இணைத்தாலும்
ஒன்றுமே அவருக்கு நிகரில்லை -அவர் யார்?

விடை:
என் நேசர் – உன்னத 5:10-16


Thursday 5 May 2011

விடுகதை 125

விடுகதை:
நண்பர்கள் கூட்டம் வந்தது
நலம் பொலம் பல சொன்னது
உதவாக்கரை மருத்துவர்களாய்
உருமாறிப் போனது -அவர்கள் யார்?

விடை:
யோபுவின் நண்பர்கள் – யோபு 16:2.


Wednesday 4 May 2011

விடுகதை 124

விடுகதை:
ஓடும் நீரில் குளிப்பான்
ஓஹோ என்று வளர்வான்
பருவத்தில் பழங்கள் தருவான்
பச்சைப் பசேல் எனத் தேரிவான் -அவன் யார்?

விடை:
இரவும் பகலும் வேதத்தில் தியானமாய் இருக்கிறவன் – சங் 1:3. கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிறவன் – எரே 17:7,8


Tuesday 3 May 2011

விடுகதை 123

விடுகதை:
ஏணி மீது ஏணி கட்டி
ஏறி போயி தேடினாலும்
முடவன் கொம்புத் தேனைப் போல
மூடனுக்கு இருக்குமாம் -அவன் யார்?

விடை:
ஞானம் – நீதி 24:7.


Monday 2 May 2011

விடுகதை 122

விடுகதை:
சத்தமில்லா முத்தத்தால்
சத்தியபரனை காட்டிக் கொடுத்து
சத்துருவான எட்டப்பன் -அவன் யார்?

விடை:
யூதாஸ் காரியோத்து – மாற் 14:43-46


Sunday 1 May 2011

விடுகதை 121

அழகு இருக்கும் இடத்திலே
ஆபத்தும் இருக்குமாம்
அழகான மனைவியால்
ஆபத்து என பயந்து
சென்ற இடம் எங்கும்
அவலை சகோதரி என்றான் - அவன் யார்?

விடை:
ஆபிரகாம் – ஆதி 20:1-12