Search This Blog

Friday 31 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்த அவர் யார்!
 தேவனுடைய வார்த்தை வெளி 19: 13

Thursday 30 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. ஒரே நாழிகையில் யாருக்கு ஆக்கினை வந்தது?
 மகா பாபிலோன் வெளி 18: 10

Wednesday 29 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் யார்?
 மகா பாபிலோன் வெளி 17 :5

Tuesday 28 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. அற்புதங்களை செய்கிற பிசாசுகள் ஆவிகள் எதில் இருந்து புறப்பட்டு வந்தது?
 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன். வெளி16:13

Sunday 26 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. முதற் பலனாக மீட்டுக் கொள்ளப்பட்ட அவர்களின் தொகை எவ்வளவு?
 லட்சத்து 44 ஆயிரம் பேர். வெளி 14 :3

2. இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது யாருக்கு?
 மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்கிறவனுக்கு. வெளி 14: 11

Saturday 25 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. மிருகத்தின் சொரூபம் எப்படிப்பட்டதாக செய்யப்பட்டது?
  அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும். வெளிப்படுத்தின விசேஷம் 13:15

2. 42 மாதம் யுத்தம் பண்ண எதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?
 சமுத்திரத்தில் இருந்து தோன்றிய மிருகம். வெளி 13: 1 ,5

Friday 24 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. உலகம் அனைத்தையும் மோசம் போக்குகிறவன் யார்?
 பிசாசு, சாத்தான், பெரிய வலுசர்ப்பம். வெளி12 :9

2. சூரியனை அணிந்திருந்த ஸ்திரீயினுடைய சந்ததியார் யார்?
 தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று. வெளிப்படுத்தின விசேஷம் 12:17

Thursday 23 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. ஆண்டவருக்கு முன் நிற்கிற இரண்டு விளக்கு தண்டுகள் யார்?
 ஆண்டவருடைய இரண்டு சாட்சிகள். வெளி 11: 3

2. ஏழாம் தூதன் எக்காளம் ஊதிய பின் நடந்தது என்ன?
  அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின. வெளிப்படுத்தின விசேஷம் 11:15

3. பரலோகத்தில் தேவாலயம் திறக்கப்பட்ட போது அதில் காணப்பட்டது என்ன?
 தேவனுடைய உடன்படிக்கையின்பெட்டி. வெளி11: 19

Wednesday 22 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. தேவ ரகசியம் எப்போது நிறைவேறும்?
 ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே. வெளி 10: 6
2. வாய்க்கு தேனை போல மதுரமாய் இருந்தது வயிற்றுக்கு கசப்பாய் இருந்தது அது என்ன?
 சிறு புத்தகம். வெளி 10:10
3. யோவான் எவைகளை எழுதாமல் முத்திரை போட்டான்?
 ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை வெளி 10 :4

Tuesday 21 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. பாதாளத்தின் தூதன் பெயர் என்ன?
எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன். வெளிப்படுத்தின விசேஷம் 9:11

2. குதிரை சேனைகளாகிய ராணுவங்கள் இன் தொகை என்ன? 
 20 கோடி. வெளி 9: 16

Monday 20 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. எட்டி என்பது என்ன?
 வானத்திலிருந்து விழுந்த ஒரு பெரிய நட்சத்திரம். வெளி 8: 10

2. பூமியில் சத்தங்களும் இடி முழக்கங்கள் மின்னல்களும் பூமியதிர்ச்சி எதனால் உண்டாயின?
 பலிபீடத்தின் நெருப்பை பூமியில் கொட்டியவுடன். வெளி 8 :5

Sunday 19 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1.   🍱🍲🍚••😋•••❌❌
      🥛🍸🍹•••😋•••❌❌
     🌞☀🌤••••••❌❌
     🔥🔥🔥••••••❌❌

  அ) இவ்வசன இருப்பிடம் எது?
                  (வெளி 7:17)    
   ஆ) இவர்களின் _மேய்ப்பர்_ யார்?
                     ஆட்டுக்குட்டியானவர் (வெளி 7:17)
    

Saturday 18 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. 🌴••••••🌪
    🌴••••••🍒⬇⬇
     ⛅••••💫🌟⭐🌏⬇⬇ 
                   -  வசனம் எது?
             (வெளி 6:13)

Friday 17 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1.   📖------⛅🌏 👆 ❌❌
       📖------👀 ❌❌
  அது என்ன?
            ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த புஸ்தகம் (வெளி 5:1)
2.  அதை வாங்க பாத்திரர் யார்?
             ஆட்டுக்குட்டியானவர்/தேவரீர் (வெளி 5:8,9)

Thursday 16 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. புறப்பட்டது இடி..
     புறப்பட்டது மின்னல்..
     புறப்பட்டது சத்தம்..
                 - எதிலிருந்து?
              சிங்காசனத்திலிருந்து (வெளி 4:5)

Wednesday 15 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1.   அழகிய உடைகளை
      அசுசிப் படுத்தாமல்
      அவர்களில் சிலர்...
      அவர்கள் பாத்திரவான்களெனில்
      அவர்களுக்கு
      அழகிய வெள்ளை உடை.....
                  - எந்த சபை?
             சர்தை சபை (வெளி 3:4,5)

Tuesday 14 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1.  அதை விட்டாய்..
     அதை விட்டதே உன் குறை...
     அதை மீண்டும் தொடர்ந்து செய்...
     அதினால் நீங்கிடா விளக்குத்தண்டு....
                         -எதை?
           ஆதியில் கொண்ட அன்பை ( வெளி 2:4,5)
2.  உண்மை
     உண்மை
     உயிருள்ளவரை
     உண்மை
     உண்மையாயிருப்பின்
     உன்னதரேசு
     உனக்குத் தரும்
     உயரிய பரிசு....
                     - அது என்ன?
                  ஜீவகிரீடம் ( வெளி 2:10)

Monday 13 May 2019

வெளிப்படுத்தல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1.   இருந்தவர்
      இருக்கிறவர்
      இனி வருகிறவர்
      இவர்
      இருக்கை சிங்காசனம்...
      இறந்தோரிலிருந்து முதற்பிறந்தவர்..
      இவ்வுலகின் அதிபதி..
                     - அவர் யார்?
              இயேசுகிறிஸ்து ( வெளி 1:4,5)

2.    இரைச்சல்..
       இரைச்சல்..
       இரைச்சல்..பெருவெள்ள
       இரைச்சல்
                        - அது என்ன?
               மனுஷகுமாரனுக்கொப்பானவருடைய சத்தம் (வெளி 1:15)

Sunday 12 May 2019

யூதா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்


1. சத்தியம் பேசுபவனின்
    சரீரம் குறித்து
     சர்ப்பத்திடம்(பிசாசு)
     சம்பாஷித்தார் தர்க்கமாய்..
                      - அவர் யார்?
            பிரதான தூதன் மிகாவேல் (யூதா 9)
      
2.  அன்பினில் கறைகளாய்..
     அடியுண்டோடும் மேகங்களாய்...
     அசைவில்லா மரங்களும்...
     அமளியான கடலலைகளும்...
     அறநெறி தப்பி
     அலைந்திடும் நட்சத்திரங்களாயிருக்கும்
    அவர்களுக்காக வைக்கப்பட்டது......
                      - அது என்ன?
                 காரிருள் (யூதா 13)

Saturday 11 May 2019

3 யோவான் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1.  நடந்தனர்
      நடந்தனர்
      நல்ல
      நம் பிள்ளைகள்
      நடந்தனர்..
      நடந்த
      நற்செய்தியை
      நன்றாய் அறிந்ததும்
      நல்ல மகிழ்ச்சியே....
                     - எதிலே?
           சத்தியத்திலே (3 யோ 4)
2.     செய் !
        செய் !
        செயலை நன்றாய் !
        செய்...நன்மையாய்
        செய்பவன் இவரால் உண்டானவன்...
                         - அவர் யார்?
              தேவன் (3 யோ 11)      

Friday 10 May 2019

2 யோவான் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1.    பிதாவும்
       பிதாவின் 
       பிரியமான மகனும் என்னுள்
       பிணைந்துள்ளனர்..
                       - நான் யார்?
            கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் (2 யோ 9)

2. அநேக காரியம் உண்டு...
    அதினாலும்,
    அதினாலும்,
    அவர்களுக்கு
    அன்பாய் எழுத மனமில்லையே.....
    அவர்களின் மகிழ்வுக்காக.....
                - எதினெதினால்?

                   காகிதத்தினாலும், மையினாலும் (2 யோ 12)

Wednesday 8 May 2019

1 யோவான் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. சாட்சிகள்
    சாட்சிகள் பரலோகில்
    சாட்சிகள்...
    சாட்சிகள் மூவரும்
    சாதாரணமானோரல்லவே...
    சாட்சிகள் ஒருமைப்பாட்டில்
    சாதனை செய்தனர்....
                     - அவர்கள் யார்?
              பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி (1 யோ 5:7)                   
2. மெய்யான தேவன்
          நித்திய   ஜீவன்
     தேவனின்    மகன்
                         - யார்?
               தேவனுடைய குமாரன் இயேசுகிறிஸ்து ( 1யோ 5:20)

Tuesday 7 May 2019

1 யோவான் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அன்பானவர்
    அன்பாகவே இருக்கிறார்...
    அன்பான
    அவரை
    அவன்
    அறியான்...
                    -அவன் யார்?
               அன்பில்லாதவன் (1 யோ 4:8)
     
2. தந்தை(பிதா)
     தனக்காயல்ல...
     தம் அன்புமகனை,
     தன் படைப்பாம் உலகுக்கு,
     தம் மக்களின்
     தன்னிகரில்லா மீட்புக்காய் அனுப்பினார்....
                   - எவ்வாறு?
               உலகரட்சகராக (1 யோ 4:14)

Monday 6 May 2019

1 யோவான் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பாவம்
    பாவம் இதை மீறுகிறதே
    பாவம்....
                     -எதை?
            நியாயப்பிரமாணத்தை (1 யோ 3:4)
   
2. அவர் கட்டளைகளை
    அன்பாய் கைக்கொண்டால்
    அவரில் நிலைப்போம்...
    அவரில் நிலைத்ததை
    அதினாலே
    அறிவோம்....
                       - எதினாலே?
            அவர்{இயேசுகிறிஸ்து}தந்தருளின ஆவியினாலே (1 யோ 3:24)

Sunday 5 May 2019

1 யோவான் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. பரிந்து பேசும்
    பரிகாரி;நமக்காய்
    பலியானவர்...
                       - யார்?
                இயேசுகிறிஸ்து (1 யோ 2:1,2)

2. அபிஷேகம் பெற்று
   அனைத்தையும்
   அறிந்தோம்
   அவராலே !
                     - யாராலே?
                 பரிசுத்தராலே (1 யோ 2:20)

Saturday 4 May 2019

1 யோவான் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. இருக்கிறார்
    இருக்கிறார்...ஒளியிலே
    இருக்கிறார்..
    இயேசுவோடு ஐக்கியமாய்
    இருக்கிறார்..
    இருப்பவர்
    இவரிலே
    இருளுக்கு
    இடமில்லை...
                    -அவர் யார்?
               தேவன் (1 யோ 1:5)


Thursday 2 May 2019

2 பேதுரு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1) 1=1000., & 
1000=1 எது? யாருக்கு?
தேவனுக்கு 1 நாள் = 1000 வருஷம். 2 பேதுரு 3:8.

Wednesday 1 May 2019

2 பேதுரு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. தன் இருதயத்தில் வாதிக்கப்பட்டவன்  யார்?
நீதிமானாகிய லோத்து.  2 பேதுரு 2:8