Search This Blog

Friday 30 September 2016

I சாமுவேல் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. தாவீது, ஆகீசுக்கு யாரைப் போல பிரியமாயிருந்தான்?
       தேவனுடைய தூதனைப் போல (29:9)
2. தாவீதிடம் ஒரு தவறையும் காணவில்லை என சாட்சி கொடுத்தது யார்?
      ஆகீஸ் (29:3,6)
3. பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் எந்த  இடத்தில்  கூடிவரச் செய்தார்கள்?
ஆப்பெக்கிலே     1சாமுவேல் - 29:1
4. தாவீது பெலிஸ்தரின் தேசத்திற்கு புறப்பட்டபோது, பெலிஸ்தர் எந்த  இடத்திற்கு கடந்து சென்றார்கள்?
யெஸ்ரயேலுக்கு      1சாமுவேல்- 29:11

Thursday 29 September 2016

I சாமுவேல் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. சவுலுக்கு விருந்து வைத்தவளின் ஊர் எது?
      எந்தோர் (28:7,24,25)
2. கர்த்தர் யாருக்கு பதிலளிக்கவில்லை?
      சவுல் (28:6,15)
3. மரித்த நான் பேசினேன் - யார்? யாரிடம்?
     சாமுவேல் சவுலிடம் (28:3,15-19)

Wednesday 28 September 2016

I சாமுவேல் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1.  தனக்கு அடைக்கலம் கொடுத்தவனிடம் பொய் சொல்லி, ஏமாற்றி வந்தது யார்?
      தாவீது (27:2,8-12)
2. தாவீதுக்கு, பெலிஸ்திய தேசத்தில் கொடுக்கப்பட்ட இடம் எது?
      சிக்லாக் (27:5,6)

Tuesday 27 September 2016

I சாமுவேல் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. சத்தம் கேட்டே, அவர் யாரென கண்டுபிடித்தேன் - நான் யார்?
     சவுல் (26:17)
2. தாவீதோடு, சவுலின் பாளயத்திற்கு சென்றவனின் தகப்பன் யார்?
      செருயா (26:6)
3. தாவீது, சவுலிடமிருந்து எடுத்தவை எவை?
      ஈட்டி, தண்ணீர்ச்செம்பு (26:12)
4. மதியில்லாமல் செய்த தன் தவறை உணர்ந்தது யார்?
      சவுல் (26:21)

Monday 26 September 2016

I சாமுவேல் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. தன் கணவனை "பயித்தியம்" என்றது யார்?
      அபிகாயில் (25:23-25)
2. தாவீதின் மனைவி எவ்வூரானுக்கு கொடுக்கப்பட்டாள்? 
      காலீம் (25:44)
3. நன்மைக்கு தீமை செய்தவர்கள் யார்? யார்?
      சவுல் (24:17), நாபால் (25:21)
4. தாவீதின் வேண்டுதலுக்கு மறுப்பு தெரிவித்தது யார்? 
      நாபால் (25:8-11)
5. உயிரோடே செத்தவன் போலிருந்தது யார்? 
     நாபால் (25:37) 
    

Sunday 25 September 2016

I சாமுவேல் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. தன் பிராணனை வாங்க தேடினவனை, தகப்பனே என்று யார்?
      தாவீது (24:8-11)
2. நான் பகைத்தவன், எனக்கு நன்மை செய்தபடியால், அவனை குமாரன் என அழைத்தேன் - நான் யார்?
       சவுல் (24:16-18)
3. நன்மைக்கு தீமை செய்தவர்கள் யார்? யார்?
      சவுல் (24:17), நாபால் (25:21)
4. முதியோர் மொழி என்ன?
     ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் (24:13)
5. "ராஜாவாகிய என் ஆண்டவனே" - என்று சவுலைக் கூப்பிட்டது யார்?
தாவீது.   1சாமுவேல் - 24:8
6. "என் குமாரனாகிய தாவீதே" - என்று கூப்பிட்டு, சத்தமிட்டு அழுதது யார்?
சவுல்   1சாமுவேல் - 24:16
7.தாவீதும் அவன் மனுஷரும் __________   இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
அரணிப்பான.     1சாமுவேல் - 24:22

Saturday 24 September 2016

I சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. சவுலின் மேல் தயை வைத்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் யார்?
      சீப் ஊரார் (23:19-21)
2. சவுல், தாவீதை விட்டு திரும்பின இடத்திற்கு என்ன பெயரிடப்பட்டது? 
     சேலா அம்மாலிகோத் (23:28)
3. "ஏபோத்தை இங்கே கொண்டு வா" - என்று தாவீது யாரிடம் கேட்டான்?
ஆசாரியனாகிய அபியத்தார்.            1சாமுவேல் - 23:9
4.  மாமனும் மருமகனும் மலையின் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலுமாக நடந்தார்கள். யார் அந்த மாமன், மருமகன்? பெயரெழுதவும்.
மாமன் - சவுல்;       மருமகன் - தாவீது
   1சாமுவேல் 23:26

Friday 23 September 2016

I சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. தாவீது தன் பெற்றோரை யாரிடம் ஒப்படைத்தான்?
      மோவாபின் ராஜா (22:3)
2. தப்பி ஓடிய ஆசாரியனிடம் இருந்தது என்ன?
      ஒரு ஏபோத்து (22:20, 23:6)
3. பெயர் சொல்லப்பட்டுள்ள கெபி, காடு எவை?
      அதுல்லாம் கெபி (22:1), ஆரேத் (22:5)
4. 85 ஆசாரியர்களை கொன்றது யார்?
      தோவேக்கு (22:18)
5.  தாவீதின் மூன்று படைகளையும் பார்த்தால் சிரிப்பு வரும்.  எண்ணிப் பார்த்தால் நானூறு வரும். அவர்கள் யார்?
ஒடுக்கப்பட்டவர்கள்,  கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள். 
   1சாமுவேல் - 22: 1,2
6. ஆசாரியர்களின் பட்டணம் எது?
      நோப்.   1சாமுவேல் - 22:19

Thursday 22 September 2016

I சாமுவேல் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. சவுலின் மேய்ப்பர்களுக்கு தலைவன் யார்?
      தோவேக்கு (21:7)
2. தாவீதிடம் பயத்துடன் பேசியது யார்?
      அகிமெலேக்கு (21:1)
3. தாவீதை பயித்தியம் என்றது யார்?
      ஆகீஸ் (21:14,15)
4. இங்கே ஒரு ஈட்டியும் பட்டயமும் இல்லையா? என்று தாவீது யாரிடத்தில் கேட்டான்?
அகிமெலேக்கு   1சாமுவேல் - 21:8
5.  "இவனை (தாவீதை) நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது  என்ன?" - யார், யாரிடம் கேட்டது?
ஆகீஸ் தன் ஊழியக்காரரிடம்.     1சாமுவேல் - 21:14

Wednesday 21 September 2016

I சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. தன் மகனை கொல்லப் பார்த்த தகப்பன் யார்?
     சவுல் (20:32,33)
2. அம்புகளைக் குறித்த காரியத்தை அறியாதிருந்தது யார்?
      பிள்ளையாண்டான் (20:39)
3. யோனத்தான் தாவீதை எப்படி சிநேகித்தான்?
      தன் உயிரை சிநேகித்தது போல (20:17)
4.  தாவீதை மிகவு‌ம் சிநேகித்தது யார்?
யோனத்தான்.      1சாமுவேல் - 20;17
5. அவன்  ஏன் _______ ?  அவன்  என்ன _______  என்றான்.
கொல்லப்படவேண்டும்?,   செய்தான்.              1சாமுவேல் 20:32

Tuesday 20 September 2016

I சாமுவேல் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. தாவீதும், தீர்க்கத்தரிசியும் தங்கியிருந்த இடம் எது?
      நாயோதி (19:18,22)
2. தகப்பனிடமிருந்து, தன் கணவனை தப்புவித்த மகள் யார்?
      மீகாள் (19:11-17)
3. தன் சிநேகிதனுக்காக, பரிந்து பேசியது யார்? 
      யோனத்தான் (19:2-6)
4. என்னை பிடிக்க வந்தவர்கள், தீர்க்கத்தரிசிகளானார்கள் - நான் யார்? 
      தாவீது (19:19-24)
5. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை? 
      3 (18:11,19:10)
6.  தன் வீட்டிலே உட்கார்ந்திருந்த சவுல், தன் கையிலே  எதைப் பிடித்துக் கொண்டிருந்தான்?
ஈட்டி   1சாமுவேல் - 19:9
7. தாவீது எந்த  இடத்தில்  இருப்பதாக சவுலுக்கு அறிவிக்கப்பட்டது?
ராமாவுக்கடுத்த நாயோதிலே.   1சாமுவேல் - 19:19

Monday 19 September 2016

I சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. ராஜாவுக்கு மருமகனான மேய்ப்பன் யார்?
      தாவீது (18:27)
2. தாவீது, சவுலுக்கு எண்ணி கொடுத்தது என்ன?
      இருநூறு பெலிஸ்தரின் நுனித்தோல்கள் (18:27)
3. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை?
      3 (18:11,19:10)
4.  தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்து கொண்டது யார்?
தாவீது   1சாமுவேல் - 18:14
5. 'சவுல் இன்னும்  அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்தான்' - ஏன்? (ஏதாவது  ஒரு காரணம் எழுதவும்)
(i) கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்
(ii) சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை (தாவீதை) நேசித்தினால்
1சாமுவேல்  - 18:28,29

Sunday 18 September 2016

I சாமுவேல் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேல் ராஜாவின் சேனாபதி யார்?
      அப்னேர் (17:55)
2. தன் தம்பியிடம் கோபமாய் பேசிய அண்ணன் யார்?
       எலியாப் (17:28)
3. கோலியாத்தின் கவச நிறை எவ்வளவு?
      ஐயாயிரம் சேக்கலான வெண்கலம் (17:5)
4. ஈசாய் அதிபதிக்கு கொடுக்க சொன்னது என்ன?
      பத்துப் பால்கட்டிகள் (17:18)
5. 🦁🐻 - இவைகளை கொன்றது யார்?
      தாவீது (17:34-36)
6. ஒற்றைக் கல்லினால், மடிந்த வீரன் எவ்வூரான்?
      காத் (17:4,49)
7. ஈசாயின் எட்டாவது குமாரன் யார்?
      தாவீது (16:10,11,17:12-14)
8. இஸ்ரவேலர் எல்லாரும் ஏலா பள்ளத்தாக்கிலே யாரோடு யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்?
பெலிஸ்தரோடு   1சாமுவேல் - 17:19
9. "சுகமாயிருக்கிறீர்களா"  - என்று  யார், யாரிடம் கேட்டது?
தாவீது தன் சகோதரரைப் பார்த்து.   1சாமுவேல் - 17:22
10. பெலிஸ்தர் எதின் வழியில் எந்தெந்த பட்டணங்கள் மட்டும் வெட்டுண்டு விழுந்தார்கள்?
சாராயீமின் வழியிலும், காத், எக்ரோன் பட்டணங்கள் மட்டும்.
   1சாமுவேல் 17:52

Saturday 17 September 2016

I சாமுவேல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. இசைக்கருவி மீட்டி, தீய ஆவியை விரட்டியது யார்?
      தாவீது (16:23)
2. ஈசாயின் எட்டாவது குமாரன் யார்?
      தாவீது (16:10,11,17:12-14)
3.  "இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" - என்று  இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. யார் அந்த  இருவர்?
அபினதாப்,.சம்மா.     1சாமுவேல் -16:8,9
4. அவன் (தாவீது) பராக்கிரமசாலி,  _______   காரியசமர்த்தன்,   _______.
யுத்த வீரன், சவுந்தரியமுள்ளவன்.      1சாமுவேல் - 16:18

Friday 16 September 2016

I சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலருக்கு தயவுசெய்ததால், தப்புவிக்கப்பட்டவர்கள் யார்?
     கேனியர் (15:6)
2. தீர்க்கத்தரிசியால் கொல்லப்பட்ட ராஜா யார்?
      ஆகாகு (15:33)
3. சவுல் ஜனத்தொகையை எண்ணிப் பார்த்த இடம் எது?
      தெலாயீம் (15:4)
4. பலியை விட உத்தமமான செயல் எது?
      கீழ்ப்படிதல் (15:22)
5. தீர்க்கத்தரிசியின் சால்வையை கிழித்தது யார்?
     சவுல் (15:27)
6. தனது பார்வைக்குச் சிறியவராயிருந்த போது இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானது யார்?
   சவுல்   1சாமுவேல் - 15:17
7. சவுல் யாரைப் பணிந்து கொண்டான்?
    கர்த்தரை.   1சாமுவேல் - 15:31

Thursday 15 September 2016

I சாமுவேல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. சாக வேண்டிய என்னை, ஜனங்கள் காப்பாற்றினர் - நான் யார்?
      யோனத்தான் (14:43-45) 
2. யோனத்தானுக்கு கண் தெளிவடைந்தது எதனால்?
      தேனை ருசிபார்த்ததினால் (14:29)
3. சவுலின் நாட்களில் கர்த்தரின் ஆசாரியனாயிருந்தது யார்? 
     அகியா (14:3,18,19)
4. பெயர் சொல்லப்பட்ட பாறைகள் எவை? 
      போசேஸ், சேனே (14:4)
5. கீஸின் சகோதரன் யார்?
     நேர் (14:50,51,9:1)
6.  "எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்" -  யார், யாரிடம் சொன்னது?
தாணையம்.இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து.   1சாமுவேல் - 14:12
7. எந்த  இடத்திலிருந்து எந்த  இடமட்டும் பெலிஸ்தரை முறிய  அடித்தபோது ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்?
மிக்மாசிலிருந்து ஆயலோன் மட்டும்.   1சாமுவேல் - 14:31
8. பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பி விட்டது யார்?
           சவுல்.             1சாமுவேல் - 14:46

Wednesday 14 September 2016

I சாமுவேல் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலில் யார் இல்லாததால், ஆயுதங்கள் இல்லை?
       கொல்லன் (13:19-22)
2. சாபம் வாங்கிய இஸ்ரவேலின் முதல் ராஜா யார்?
      சவுல் (13:12-14)
3. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு நேரிட்ட நெருக்கடியான சூழ்நிலையில்  எங்கெல்லாம் ஒளித்துக்கொண்டார்கள்?
கெபிகள், முட்காடுகள், கன்மலைகள், துருக்கங்கள், குகைகள்.
     1சாமுவேல் - 13:6
4. இஸ்ரவேலர் யாவரும் தங்கள்  ஆயுதங்களைத் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு யாரிடம் போக வேண்டியதாயிருந்தது?
பெலிஸ்தர்.     1சாமுவேல் - 13:20

Tuesday 13 September 2016

I சாமுவேல் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. சாமுவேல் ஜனங்களுக்கு, எப்படிப்பட்ட வழியை கற்பிப்பதாக சொன்னார்?
      நன்மையும் செவ்வையுமான (12:23)
2.  பிதாக்களின் கூக்குரலுக்கு, கர்த்தரால் எகிப்துக்கு அனுப்பப்பட்டவர்கள் யார்?  
     மோசே, ஆரோன் (12:8)
3. ஜெபம் பண்ணினேன், மழை பெய்தது - நான் யார்?
      சாமுவேல் (12:17,18)
4.  ஓரே வசனத்தில் ஐந்து கேள்விகள். அது எந்த வசனம்? இருப்பிடம் எழுதவும்
1சாமுவேல் - 12:3
5. அம்மோன் புத்திரரின் ராஜா பெயர் என்ன?
நாகாஸ்.       1சாமுவேல் - 12:12
6. "பயப்படாதேயுங்கள்" - யார், யாரைப் பார்த்து கூறியது?
சாமுவேல் ஜனங்களை     ..1சாமுவேல் - 12:20

Monday 12 September 2016

I சாமுவேல் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1.  7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
      யாபேசின் மூப்பர்கள் (11:3), சவுல் (10:8,13:8)
2. சாமுவேல், சவுலை ராஜாவாக ஏற்ப்படுத்திய இடம் எது?
      கில்கால் (11:15)
3. தன்னை நிந்தித்தவர்களை, மரணத்திற்கு தப்புவித்தது யார்?
      சவுல் (11:12,13)
4. யாபேஸ் குடிகளின் வலக்கண்ணை குருடாக்குவேன் என்றது யார்?
      அம்மோனியனாகிய நாகாஸ் (11:2)
5. யாபேசின் மூப்பர்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்புவதற்கு எத்தனை நாள் தவணை கேட்டார்கள்?
ஏழுநாள்      1சாமுவேல் -11:3
6. அங்கே ________  _______   மனுஷர் யாவரும் மிகவும் _______.
சவுலும் இஸ்ரவேல்,  சந்தோஷங்கொண்டாடினார்கள்
    1சாமுவேல் - 11:15

Sunday 11 September 2016

I சாமுவேல் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. சாமுவேல், சவுலை ஜனங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்திய இடம் எது?
      மிஸ்பா (10:17-24)
2. 7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
      யாபேசின் மூப்பர்கள் (11:3), சவுல் (10:8,13:8)
3. தன்னை பரியாசம் பண்ணுகிறவர்களுக்கு, செவிகொடாமல் இருந்தவன் யார்?
      சவுல் (10:27)
4. வேறு இதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு?
      சவுலுக்கு (10:9)
5. பென்யமீன் எல்லையாகிய செல்சாவில்  யாருடைய கல்லறை உள்ளது?
ராகேல்      1சாமுவேல் - 10:2
6. "காது கேளாதவன் போல இருந்தான்" - யார்?
சவுல்     1சாமுவேல் - 10 :26,27

Saturday 10 September 2016

I சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. வழி கேட்க போன இடத்தில், சிறப்பு விருந்தும், உயர் பதவியும் கிடைத்தது - நான் யார்?
      சவுல் (9:6,23,24, 7:1)
2. நல்ல உயரமும், அழகுமுள்ளவனின் தாத்தா யார்?
      அபீயேல் (9:1,2)
3. கீஸின் சகோதரன் யார்?
      நேர் (14:50,51,9:1)
4. கழுதையை எந்தெந்த நாடுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை?
     சலீஷா, சாலீம், பென்யமீன் (9:4)
5. சவுலின் வேலைக்காரன் தன் கையில் உள்ள  எதை தேவனுடைய மனுஷனுக்கு கொடுப்பேன் என்று சொன்னான்?
கால்சேக்கல் வெள்ளி      (1சாமுவேல் - 9:8)
6. ஞானதிருஷ்டிக்காரனிடமே வந்து,   ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே  என்று கேட்டது யார்?
சவுல்       (1சாமுவேல் -  9:18)

Friday 9 September 2016

I சாமுவேல் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. பொருளாசையினால், அநியாயமாய் நடந்த நியாயாதிபதிகள் யார்?
      யோவேல், அபியா (8:2-5)
2. சாமுவேலின் சொல்லை கேட்காமல், ஜனங்கள் கேட்ட காரியம் என்ன?
      ராஜாவை ஏற்ப்படுத்த (8:19)
     


Thursday 8 September 2016

I சாமுவேல் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் உபவாசம் பண்ணின இடம் எது?
      மிஸ்பா (7:5,6)
 2. சாமுவேல் நியாய விசாரணை செய்த இடங்கள் எவை?  
     பெத்தேல், கில்கால், மிஸ்பா (7:16)
3. சாமுவேல் கல்லுக்கு இட்ட பெயர் என்ன?
      எபெனேசர் (7:12)
4. வழி கேட்க போன இடத்தில், சிறப்பு விருந்தும், உயர் பதவியும் கிடைத்தது - நான் யார்?
      சவுல் (9:6,23,24, 7:1)

Wednesday 7 September 2016

I சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. வலமோ, இடமோ சாயாமல், நேராக சத்தமிட்டுக் கொண்டு நடந்தவை எவை?
      இரண்டு கறவைப்பசுக்கள் (6:10-12)
2. கர்த்தரின் பெட்டி -  வந்த வயல், வைக்கப்பட்ட வீடு யார் யாருடையது?
      யோசுவா, அபினதாப் (6:14, 7:1)
3. பெலிஸ்திய தேசத்தை கெடுத்தவை எவை?
      சுண்டெலிகள் (6:5)
4. உள்ளே எட்டி பார்த்ததினிமித்தம், அடி வாங்கியவர்கள் எத்தனை பேர்? 
      ஐம்பதினாயிரத்து எழுபது பேர்  (6:19)

Tuesday 6 September 2016

I சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரின் பெட்டியினிமித்தம், பெலிஸ்தரில் உண்டான   வியாதி என்ன?
      மூல வியாதி (5:6-12)
2. பெலிஸ்திய ஆசாரியர்கள் எதை மிதிப்பது இல்லை?
      அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை (5:5)

Monday 5 September 2016

I சாமுவேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. சீலோவிலிருந்து வந்ததாம், பெலிஸ்தர் பயரக் காரணமாயிருந்ததாம் - அது என்ன?
      கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி (4:4-7)
2. தாத்தா இறந்த நாளில், பிறந்த பேரன் யார்?
       இக்கபோத் (4:18-21)
3. குமாரர்கள் இறந்த செய்தியை⚰ தகப்பனுக்கு அறிவித்தவன், எக்கோத்திரத்தான்?
      பென்யமீன் (4:12-17)
4. சத்துருவின் கையினின்று இரட்சிக்க, இஸ்ரவேல் மூப்பர்கள் கொண்டுவர சொன்னது என்ன?
      கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டி (4:3)
5. பாளயத்தில் வந்த தேவனாக✝, பெலிஸ்தர் கேள்விப்பட்டது என்ன?
      கர்த்தரின் பெட்டி (4:6,7)
6. கர்த்தரின் பெட்டியினால், பெலிஸ்திய தேவனுக்கு உடைந்தவை எவை?
     தலை, இரண்டு கைகள் (5:2-4)
7.  தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையிலே இருந்தவர்கள் யார்?
ஓப்னி, பினெகாஸ்   1சாமுவேல் -4:4
8. "மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று" - எதினால்?
தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால்
    1சாமுவேல் - 4:22

Sunday 4 September 2016

I சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. "இதோ, இருக்கிறேன்" என சாமுவேல், ஏலியிடம் எத்தனை முறை கூறினான்?
      நான்கு (3:4,6,8,16)
2. சாமுவேலுக்கு, கர்த்தர்✝ அவரை எப்படி வெளிப்படுத்தினார்?
      வார்த்தையினால் (3:21)
3. பிள்ளைகளை கண்டியாமற் போனதினிமித்தம், சாபம் வாங்கிய குடும்பம் யாருடையது?
      ஏலி (3:13)
4. 'சாமுவேலே' என்று  எத்தனை முறை கர்த்தர் கூப்பிட்டார்?
நான்கு முறை     1சாமுவேல் - 3: 4,6,8,10
5. 'சாமுவேலே, என் மகனே' என்று சாமுவேலைக்  கூப்பிட்டது யார்?
ஏலி      1சாமுவேல் - 3:16

Saturday 3 September 2016

I சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்தில் வளர்ந்த குழந்தை, எந்த வஸ்திரம் உடுத்தி, கர்த்தருக்கு ஊழியம் செய்தான்? 
      சணல்நூல் ஏபோத் (2:18) 
2.எனக்கு 4 மகன்கள், 2 மகள்கள் - நான் யார்? 
      அன்னாள் (2:21)
3.நொறுக்கப்படுவது யார்? 
      கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் (2:10)
4) ஏலியின் குமாரர்கள், எப்படிப்பட்ட இறைச்சியை பலியிடுகிறவனிடத்தில் வாங்குவார்கள்?
      பச்சை (2:12-15)
5) "சந்ததியிலுள்ள அனைவருக்குமே வாலிப வயதில் சாவு" என சாபம் பெற்ற குடும்பம் யாருடையது? 
      ஏலி (2:27-33)
6. பூமியின்  அஸ்திபாரங்கள் யாருடையவைகள்?
கர்த்தருடையவைகள்            (1சாமுவேல் - : 2:8)
  
7. எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்தது யார்?
ஏலி      1சாமுவேல் - 2:20
8. மனுஷர் கர்த்தரின்........வெறுப்பாய் எண்ணினார்கள்?
 காணிக்கையை   (2:17)

Friday 2 September 2016

I சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கணவரிடமிருந்து, இரட்டை பங்கு பெற்ற மனைவி யார்?
      அன்னாள் (1:5)
2.சத்தமில்லாமல், மனதிலே பேசி ஜெபித்தது யார்?
      அன்னாள் (1:12,13)
3. பிள்ளையில்லா தன் மனைவியை அதிகம் நேசித்தது யார்?
      எல்க்கானா (1:1-5)
4. ஏலி எங்கு ஆசாரியனாயிருந்தார்?
      சீலோவில் (1:3)
5. எல்க்கானாவின் ஊர் எது? அது எந்த மலைத்தேசத்தில்  உள்ளது?
சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம், எப்பிராயீம் மலைத்தேசம்
 1சாமுவேல் - 1:1
6.  கர்த்தர் யாரை நினைந்தருளினார்?
அன்னாள்    ( 1சாமுவேல் - 1:19)