Search This Blog

Monday 31 January 2011

விடுகதை 31

விடுகதை:
வேலை செய்தவன் வந்தான்
கூலி வாங்கி சென்றான்
பாவம் செய்தவன் வந்தான்
இதனை வாங்கி சென்றான் -எதனை?


விடை:
மரணம் – ரோம 6:23.



Sunday 30 January 2011

விடுகதை 30

விடுகதை:
காலமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா
பையை தினமும் நிறைப்பவர்
பத்திரமாய் காப்பவர்
உறங்கமாட்டார், தூங்கமாட்டார்
உன்னை தினமும் நடத்துவார் -அவர் யார்?


விடை:
இஸ்ரவேலைக் காக்கிறவர் – சங் 121:4.



Saturday 29 January 2011

விடுகதை 29

விடுகதை:
தவளை தன் வாயால் கெடும்
தன் வாயால் கெட்டவன்
தலை கவிழ்ந்து நடந்தான்
தலை மேல் பிரச்சனை போக
தலை தொங்கி செத்தான் -அவன் யார்?


விடை:
ஆமான் – எஸ்தர் 7:8-10.


Friday 28 January 2011

விடுகதை 28

விடுகதை:
இவன் சொன்னால் வருவார்கள்
இவன் சொன்னால் போவார்கள்
உயிரிடம் சொன்னால் நடக்குமா?
உறவுக்காக ஓடினான்
உயிரைத் தர வேண்டினான் -அவன் யார்?


விடை:
நூற்றுக்கதிபதி – மத் 8:5-10.


Thursday 27 January 2011

விடுகதை 27

விடுகதை:

எழுதியதைப் பார்த்தான்
எழுந்து நின்று திகைத்தான்
வாசிக்கத் தெரியாமல் முழித்தான்
வாசிக்கத் தெரிந்தவனை அழைத்தான்
அர்த்தமெல்லாம் அறிந்தான்
அந்தோ பாவம் அழிந்தான் -அவன் யார்?



விடை:
பெல்ஷாத்சார் – தானி 5:4-30.



Wednesday 26 January 2011

விடுகதை 26

விடுகதை:
கடைசி நேர நிமிடத்தில்
கள்ளன் ஒருவன் திருந்திட்டான்
கர்த்தரின் கரம் பிடித்திட்டான் -அவன் யார்?

விடை:
மனந்திரும்பிய கள்வன் – லூக் 23:39-43.



Tuesday 25 January 2011

விடுகதை 25

விடுகதை:
சிங்கம் போல் வந்து
சிந்தைக்குள் நுழைந்து
சிறை பிடிப்பானாம். - அவன் யார்?

விடை:
பிசாசு - 1 பேதுரு 5:8.


Monday 24 January 2011

விடுகதை 24

விடுகதை:
சூப்பரான டெய்லருங்க
சுறுசுறுப்பாக தச்சாருங்க
நல்ல காரியம் செஞ்சாருங்க
நல்ல பெண்ணாய் வாழ்ந்தாருங்க -அவள் யார்?


விடை:
தொற்காள் – அப் 9:36-40.


Sunday 23 January 2011

விடுகதை 23

விடுகதை:
உபவாசத் தலைப்பிலே
உண்மையை மறைத்தாள்
உயிர் ஒன்றை அழித்தாள்

-அவள் யார்?

விடை:
யேசபேல் – 1 இராஜா 21:9-15.


Saturday 22 January 2011

விடுகதை 22

விடுகதை:
எதிரும் புதிருமாய்
அணிகள் இரண்டு
எதிரில் தேவன்
புதிரில் யார்?


விடை:
பெருமையுள்ளவன் – 1 பேதுரு 5:5.



Friday 21 January 2011

விடுகதை 21

விடுகதை:
மணியடித்தால் சாப்பாடு
மறந்து போனால் கூப்பாடு
நண்பனின் பிள்ளையதால்
நாள்தோறும் சாப்பாடு -அது யாருக்கு?



விடை:
மேவிபோசேத் – 2 சாமு 9:1-13.


Thursday 20 January 2011

விடுகதை 20

விடுகதை:
குறையிருந்தால் கேட்கலாம்
நிறைவாக வாங்கலாம்
சம்பாதிக்க முடியாததை
சர்வல்லவர் தந்திடுவார் -அது என்ன?


விடை:
ஞானம். யாக் 1:5.



Wednesday 19 January 2011

விடுகதை 19

விடுகதை:

ஐயா உள்ளே வந்தாரு
கொண்டு வந்ததைக் கொடுத்தாரு
கொஞ்சம் மறைச்சு வைச்சாரு
பொய் ஒன்றுதான் சொன்னாரு
பொட்டென்று விழுந்தாரு
அம்மா உள்ளே வந்தாங்க
அதே மாதிரி சொன்னாங்க
அந்தோ பாவம் அழிந்தாங்க

-அவர்கள் யார்?

விடை:
அனனியா – சப்பீராள். அப் 5:1-10.


Tuesday 18 January 2011

விடுகதை 18

இவர்கள்
      இறைவனின்
      இறை அரசுக்குரியவர்கள்..
      இவர்களை
      இறைவனருகில் வர 
      இனி தடைசெய்யாதீர்
               -இவர்கள் யார்?

விடை:
  சிறு பிள்ளைகள் or குழந்தைகள் (யோவான் 18:15,16)


Monday 17 January 2011

விடுகதை 17

விடுகதை:
வெள்ளித்தட்டின் கீழே
தங்கப்பழங்கள் சிந்திக்கிடக்கின்றன
ஒன்றைத் தவிர -அது என்ன?

விடை:
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை. நீதி 25:11.


Sunday 16 January 2011

விடுகதை 16

விடுகதை:
வானம் பொழியுது
தண்ணீர் பெருகுது
ஆறெல்லாம் ஓடுது
கடலெல்லாம் நிறையுது
பூமி அதனைப் பார்க்குது
அதுவும் ஓர்நாள் நிறையப் போவது - அது என்ன?

விடை:
கர்த்தரை அறிகிற அறிவினால். ஏசா 11:9.



Saturday 15 January 2011

விடுகதை 15

விடுகதை:
நெறி தவறி நுழைந்ததால்
நெற்றியிலே பொட்டு 
- அது என்ன? யாருக்கு?


விடை:
குஷ்டரோகம். உசியா. 2 நாளா 26:19.


Friday 14 January 2011

விடுகதை 14

விடுகதை:
சந்தைக்கு போன அண்ணன்
ஐம்பது பழம் கேட்டான்
ஒன்பதுக்கு ஐந்தை பார்த்து
நால் பத்தை தொட்டான்
ஆரஞ்சை எடுத்து
நாலு ஐந்தாய் பிருத்தான்
பத்து விலை பேசி
கிடைக்காமல் திரும்பினான் -அவன் யார்?


விடை:
ஆபிரகாம். ஆதி 18:23-33.


Thursday 13 January 2011

விடுகதை 13

விடுகதை:
குடு குடு பாட்டி
குனிந்து விழுந்து சிரித்தாள்
நிமிர்ந்து மேலே பார்க்க
கையிலே ஓர் தங்கக் கட்டி -அவன் யார்?



விடை:
சாராள். ஆதி 18:11-14; 21:1-3.



Wednesday 12 January 2011

விடுகதை 12

விடுகதை:
ஊமை ஊரைக் கெடுக்கும்
பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்
இவனோ மிகுந்த நன்மையைக் கொடுப்பான் -அவன் யார்?


விடை:
பாவியான ஒருவன். பிர 9:18.



Tuesday 11 January 2011

விடுகதை 11

விடுகதை:
எண் கணித முறையில்
எண்ணற்ற பெயர்கள்
எப்படி மாற்றிப் பார்த்தாலும்
ஆண்டவர் பெயர் மாற்ற
புதிய பெயர் கிடைத்திடும் -அவை என்ன?


விடை:
எப்சிபா – பியூலா. ஏசா 62:2-4.



Monday 10 January 2011

விடுகதை 10

விடுகதை:
அர்த்த ராத்திரி நேரத்தில்
யாரும் இல்லா வேளையில்
ஐயனைத் தேடி வந்தானாம்
ஐயம் தீர்ந்து போனானாம் -அவன் யார்?


விடை:
நிக்கொதேமு. யோவா 3:1,21.


Sunday 9 January 2011

விடுகதை 9

விடுகதை:
பூமி தேவதை கண்திறக்க
பூலோக மனிதன்
கண்ணீரில் கரைந்தான்

-அது என்ன?



விடை:
ஜலப்பிரளயம் ஒருவன். ஆதி 7:11-24.



Saturday 8 January 2011

விடுகதை 8

விடுகதை:
பிடித்தால் ஆடுவான்
வாசித்தால் அடங்குவான்
பாடினால் முறைப்பான்
யிர்காத்த மருமகனின்
உயிரைப் பிடுங்க நினைத்தான் -அவன் யார்?


விடை:
சவுல் ராஜா. 1 சாமு 18:10,11.



Friday 7 January 2011

விடுகதை 7

விடுகதை:
டமார் டுமீர் இடி
வீட்டிற்குள் இடிக்க
சரசரவென மழை
கூரையில் பெய்ய
சொட்டு சொட்டாய் தண்ணீர்
ஓயாமல் ஒழுகியது -அது என்ன?

விடை:
மனைவியின் சண்டைகள். நீதி 19:13, 27:15.



Thursday 6 January 2011

விடுகதை 6

விடுகதை:
குறட்டைவிட்டு தூங்கிய மனிதர்
குதித்து எழுந்தனர் படுக்கையை விட்டு
குழப்பம் பல மண்டையில் கண்டு
குறிகாரரை நாடித் தேடிப் போயினர் -அவர்கள் யார்?

விடை:
பார்வோன். ஆதி 41:1-8, நேபுகாத்நேச்சார். தானி 2:1-3.



Wednesday 5 January 2011

விடுகதை 5

விடுகதை:
கர்த்தரின் சுதந்திரம்
கையினில் கிடைக்க
கண்ட மட்டும் கதறி அழுதாள்
தந்தால் உயிரோடு
இல்லையேல் மண்ணோடு
என சபதமிட்டாள் -அவள் யார்?

விடை:
ராகேல். ஆதி 30:1.




Tuesday 4 January 2011

விடுகதை 4

விடுகதை:
கடிப்பான் ஆனால் பல் இல்லை
பேசுவான் ஆனால் வாய் இல்லை
பார்ப்பான் ஆனால் கண்கள் இல்லை
இறங்குவான் ஆனால் கால்கள் இல்லை
மொத்தத்தில் சும்மா நச்சென இருப்பான்
ஆனால் வேதனையின் ஆரம்பம் -அது என்ன?


விடை:
மதுபானம். நீதி 23:31,32.


Monday 3 January 2011

விடுகதை 3

விடுகதை:
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நாலு பேரு ஓடி
நாலாபுறமும் செல்ல
நாசமெல்லாம் பறந்தது
நிம்மதியும் பிறந்தது -அது என்ன?


விடை:
சமாரியாவின் ஒலிமுக வாசல். 2 இராஜா 7:1-9.



Sunday 2 January 2011

விடுகதை 2

விடுகதை:
உண்ட வீட்டில் இரண்டகம்
உருவாக்கியவன் பிடிபட
எண்ணினான் கம்பிகளை
வருந்தினான் தவறுக்காய்
திருந்தினான் மீண்டும் -அவன் யார்?

விடை:
ஒநேசிமு. பிலே 10-19.



Saturday 1 January 2011

விடுகதை 1

ஒரே தட்டில் சாப்பிட்ட மச்சான்
ஒன்றாக சுற்றி திரிந்த மச்சான்
ஓங்கி உதைத்தான்
உருண்டைத் தலையில் -அவன் யார்?


விடை:
பிராண சிநேகிதன். சங் 41:9.