Search This Blog

Monday 9 June 2014

இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தினுடைய வீடுகள்

இஸ்ரேல் நாட்டின் நாசரேத் பகுதியில் இயேசு வாழ்ந்த காலத்தினுடையது என்று கூறப்படும் வீடுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லேமில் இயேசு கிறிஸ்து பிறந்ததாகவும், பின்னர் அவரது குடும்பம் இஸ்ரேலில் உள்ள நாசரேத் என்ற நகரில் குடியேறியதாகவும் கூறப்படுவதுண்டு.

இந்நிலையில், நாசரேத் அருகே இஸ்ரேல் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 50 வீடுகள் புதைந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.

சுண்ணாம்பு கற்கள் மற்றும் களிமண்ணால் கட்டப்பட்டிருந்த அந்த வீடுகள் இயேசு வாழ்ந்த காலத்து வீடுகளாக இருக்கலாம் என்று தாங்கள் கருதுவதாக, அங்கு ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை அதிகாரிகளில் ஒருவரான அலெக்சாண்டிரே தெரிவித்தார்.

இடிபாடுகளுடன் காணப்பட்ட அந்த வீடுகளில் உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை சேமித்து வைப்பதற்கான பாத்திரங்களும் இருந்ததாக அவர் கூறினார்.

கி.மு. 100 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அல்லது இடைப்பட்ட காலத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டிருக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் அலெக்சாண்டிரே மேலும் கூறினார்.

இந்த வீடுகள் இருந்த இடம் இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடன் வாழ்ந்தவர்களுக்கும் நன்கு அறிமுகமான இடமாக இருந்திருக்கலாம். மேலும் இந்த வீடுகளைச் சுற்றியுள்ள இடங்களில், இயேசு சிறு குழந்தையாக இருந்தபோது தனது நண்பர்கள் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் விளையாடி இருக்கவும் கூடும். இது ஒரு காரணகாரியத்துடனான மதிப்பீடுதான் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment