Search This Blog

Monday 2 January 2012

யாத்திராகமம்

"வெளியேறுதல்" அல்லது "புறப்படுதல் என அர்த்தங்கொள்ளும் கிரேக்க வார்த்தைப்படி யாத்திராகமம் (யாத்திரை + ஆகமம்) என தலைப்பிடப்பட்டுள்ளது. "மீட்பின் புத்தகம்' என அழைக்கப்படுகிறது.

'துவக்கங்களின் புத்தகமான' ஆதியாகமத்தில் கர்த்தரின் நோக்கம் வெளிப்படுத்தப்பட்டது. "மீட்பின் புத்தகமான" யாத்திராகமத்தில் கர்த்தரின் செயல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் : மோசே என கருதப்படுகிறது.
காலம் : சுமார் கி.மு.1445-1405.
மொத்த அதிகாரங்கள் : 40
மொத்த வசனங்கள் : 1231
திறவுகோல் வசனம் : 3:7,10.

சிறப்புக்குறிப்புகள் : ஆதியாகமதிர்க்கும் யாத்திராகமத்திர்க்கும் இடையே 350 ஆண்டுகளுக்கான நிகழ்வுகள் உள்ளன எனலாம். இப்புத்தகத்தில் 146 ஆண்டு கால நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எபிரேய குழந்தையாய் பிறந்த மோசே, பார்வோனின் அரண்மனையில் இளவரசனாய் வாழ்ந்தார். பின்னர், வனாந்தரத்தில் பயத்துடன் திரிந்த மோசேயை கர்த்தர் சந்தித்தார் ( முட்புதர் அனுபவம் ). கர்த்தரின் எதிர்பார்ப்பை (இஸ்ரவேலரின் விடுதலை) நிறைவேற்ற கீழ்ப்படிந்தார் மோசே. வல்லரசரான பார்வோநிடமிருந்து கர்த்தரின் இரக்கத்தாலும் ஆற்றலாலும் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேற மோசேயை ஆண்டவர் பயன்படுத்தினார்.

பழைய ஏற்பாட்டிலேயே அதிகமான அளவில் அற்புதங்கள் இடம் பெற்ற புத்தகம். 10 வாதைகள் இதில் மிக முக்கியமானவை எனலாம். நம் கிறிஸ்தவ வாழ்விற்கு அடித்தளம் என உறுதியாக கூறலாம்.

முக்கிய கதாபத்திரங்கள் : மோசே, ஆரோன், மிரியம், பார்வோன் .

கர்த்தர் நம் மக்களின் மீது அக்கறை கொண்டவராக, நமக்குரியவைகளை தந்து வழி நடத்துகிறார். கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். எனவே, கர்த்தரின் பிள்ளைகளும் பரிசுத்த வாழ்வை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

பகுப்பு :
1:1-12:36 - எகிப்தில் இஸ்ரவேலர் - எகிப்தியரின் அடக்கு முறையும் அடிமைத்தனமும்
12:37-18:27 - பயணத்தில் இஸ்ரவேலர் - கர்த்தரின் ஆதரவும் விடுதலையும்
19:1-40:38 - சீனாய் மலையடிவாரத்தில் இஸ்ரவேலர் - உடன்படிக்கை ஆசரிப்புக் கூடாரம் உருவாக்கப்படுதல்.

எனக்குரிய செய்தி :
இப்புத்தகத்தில் வலியுறுத்தப்படும் முக்கிய செய்தி "மீட்பு" என்பதாகும். கர்த்தரை விசுவாசிப்போர் எவரையும் கர்த்தர் விடுவித்து, புது வாழ்வு தருகிறார் (யோவான் 1:12). மீட்கப்படும் மக்கள் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்போராக வாழ வேண்டும் என கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆரதிப்போர் கர்த்தரின் பிரதிநிதிகளாக சாட்சி பகர வேண்டும் என்பதே இறைவனின் திட்டம் ஆகும்.


இவ்வரிசையில் நான் எங்கு இருக்கிறேன்? மீட்பு, புது வாழ்வு, தொழுது கொள்வோர், சாட்சியாக வாழ்வோர் - இத்தகைய அனுபவமும், வளர்ச்சியும் என்னில் இடம் பெற வேண்டும். இத்தகைய விருப்பத்துடனும் தீர்மானத்துடனும் இயேசு கிறிஸ்துவிடம் வரும் எவரும் இம்மேலான அனுபவத்தை பெறுவார் என்பதில் ஐயமில்லை. என் வாழ்வில் இந்த அனுபவம் நிறைவேறியுள்ளதா ?

No comments:

Post a Comment