Search This Blog

Thursday 5 January 2012

உபாகமம்

இது துவக்க வரலாற்றை நினைவுபடுத்தும் புத்தகம். கானான் பிரயாணத்தில் உருவான புதிய தலைமுறைக்கு எகிப்த்திலிருந்து நடந்த வரலாற்றை திரும்பக் கூறும் புத்தகம். உப + ஆகமம் என பிரித்தால் கூடுதலான புத்தகம் என அழைக்கலாம். ஏற்கனவே எழுதப்பட்டவைகளை மோசே திரும்பக் கூறி இஸ்ரவேலரை கானானுக்குள் செல்ல ஆயத்தப்படுத்தினர்.

ஆசிரியர் : மோசே
எழுதப்பட்ட காலம் : சுமார் கி.மு. 1450- 1410.
மொத்த அதிகாரங்கள் : 34.
மொத்த வசனங்கள் : 959.
திறவுகோல் வசனம் :10:12 -13.

எழுதப்பட்ட நோக்கம் : வாக்கு பண்ணப்பட்ட கானானை சுதந்தரிக்க பழையவைகளை மறவாமல் நினைத்து (4:32) இன்றைய நிலையில் கர்த்தரின் எதிர்பார்ப்பை புரிந்து செயல்படவும் (5:33) கீழ்படிதலில் அர்ப்பணிப்புடன் செயல்பட (28:1,2) வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

திறவுகோல் வார்த்தை : நினைவு கூறு.

சிறப்புக் குறிப்புகள்: " கேள்" என்ற வார்த்தை சுமார் 66 முறை பயன்படுத்தப்படுள்ளது. புதிய ஏற்பாட்டில் சுமார் 80 முறை உபாகமத்திலிருந்து மேற்கோள்கள் எடுத்து பயன்படுத்தப்படுள்ளன. புதிய ஏற்பாட்டின் புத்தகங்களில் 17 புத்தகங்கள் உபாகமத்தின் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. 'கட்டளை' என்ற சொல் சுமார் 70 முறை உள்ளது. செய், கடைப்பிடி என்ற சொற்கள் சுமார் 177 முறை வந்துள்ளது.

பகுப்பு:
அதி 1-4 : வரலாறு - கடந்த காலத்தில் கர்த்தரின் உண்மை
அதி 5:1-26:15 : போதனை - நிகழ்காலத்தில் கர்த்தரின் கட்டளைகள்
அதி 26:16-34:12 : உடன்படிக்கை - எதிர்காலத்திற்க்குரிய தீர்க்க தரிசன வாக்குறுதி.
அதி 1:1-4:43 முதலாம் அருளுரை - இஸ்ரவேலருக்கு கர்த்தர் செய்தவை.
அதி 4:44 - 26:68 இரண்டாம் அருளுரை - நியாயப்பிரமாணம் குறித்த விளக்கம்.
அதி 29:1 - 30:20 மூன்றாம் அருளுரை - மோசேயின் நிறைவு காலங்கள்.

எனக்குரிய செய்தி :
* துவக்க வரலாற்றை நினைவுபடுத்துங்கள்.
* வேதத்தை கற்போம்! வேதத்தை கற்பிப்போம்.
* வேதத்தை கற்றுக் கொள்வதற்கென சரியான துணை நூல்களை வாங்க திட்டமிடுவோம்.
* உடன்படிக்கையின் கர்த்தருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றி கர்த்தர் நமக்கு வாக்குப் பண்ணியவைகளை சுதந்தரிப்போமாக!

1 comment: