Search This Blog

Saturday 7 January 2012

நியாயாதிபதிகள்

இஸ்ரவேலரின் வரலாற்றில் இப்புத்தகம் மிக முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. இதனை இருண்ட கால வரலாறு எனவும் கூறலாம். சுமார் கி.மு. 1380 முதல் 1050 வரை நடைபெற்ற நிகழ்வுகள் இப்புத்தகத்தில் உண்டு.


ராஜாக்களின் காலம் வரையிலான நிகழ்வுகள் இப்புத்தகத்தில் இடம் பெறுவதால் கானானின் குடியேற்றத்திற்கும் ராஜாக்களின் காலத்திற்கும் உள்ள தொடர்பு புத்தகமாக கருதலாம்.


ஆசிரியர் : சாமுவேல் எனக் கருதப்படுகிறது.


காலம் : சுமார் கி.மு. 1050 - 1000.


அதிகாரங்கள் : 21.


மொத்த வசனங்கள்: 618.


திறவுகோல் வசனம் : 21:25.


எழுதப்பட்ட நோக்கம்: கீழ்ப்படியாமையின் விளைவை யாராயினும் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் மனம் வருந்தி கர்த்தரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் உண்மையான கீழ்ப்படிதலை வெளிப்படுத்தும் எவரையும் கர்த்தர் மன்னிக்கிறார்.


கர்த்தரின் மாறாத மன்னிக்கும் தெய்வ பண்பையும் கீழ்ப்படியாமை எனும் பாவத்தின் விளைவையும் வரலாற்று அடிப்படையில் கற்றுக் கொள்வதற்காக எழுதப்பட்டது.


பகுப்பு:

அதிகாரம் 1,2 : இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமை

அதிகாரம் 3- 16 : இஸ்ரவேலருக்கு விடுதலை (அ) ஏழு பாவ சுழற்சிகள்

அதிகாரம் 17 - 21 : இஸ்ரவேலரின் வீழ்ச்சி .


சிறப்புக் குறிப்புகள்: கானான் நாட்டில் குடியேறிய இஸ்ரவேலர் கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றாததால் தம் மக்களை சீர்ப்படுத்த கர்த்தர் அனுமதித்த நிகழ்வுகள் எனக் கூறலாம்.


"கர்த்தரை நோக்கி" என்ற வார்த்தை 12 முறையும், "ஒப்புக்கொடுத்தார்" என்ற வார்த்தை 23 முறையும், "இரட்சிப்பு" என்ற வார்த்தை 7 முறையும் இப்புத்தகத்தில் உண்டு.


கர்த்தர் பயன்படுத்திய நியாயாதிபதிகள் மொத்தம் 13 பேர்:

ஒத்னியல் கி.மு.1353-1303 : நியா 3:7-11.

ஏகூத் கி.மு.1295-1215. : நியா 3:15-30.

சம்கார் கி.மு.- : நியா 3:51.

தெபோராள் & பாராக் கி.மு.1195-1155. : நியா 4:1-5:3.

கிதியோன் கி.மு.1148-1108. : நியா6:1-8:28.

அபிமலேக் கி.மு.1108-1105. : நியா 9:1-57.

யெப்தா கி.மு.1105-1099 : நியா 10:6-12:7 .

சிம்சோன் கி.மு.1085-1065. :நியா 13:1-16:30.


இவர்கள் தவிர தோலா , யாவீர், இப்சான், அப்தோன் ஆகியோரும் நியாயாதிபதிகள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.


இஸ்ரவேலரின் விடுதலைக்காக மிகச் சிறிய பொருட்களையும் கர்த்தரால் பயன்படுத்த முடியும் என இப்புத்தகத்தின் மூலம் அறியலாம்.


சம்கார் பயன்படுத்திய தாற்றுக்கோல் (கூர்மையான அம்பு) - 3:31.

யாகேல் பயன்படுத்திய கூடார ஆணி 4:21.

கிதியோனுடன் 300 பேர் எக்காளம், வெறும் பானை, தீவட்டி - 7:16.

சிம்சோன் பயன்படுத்திய கழுதையின் தாடை எலும்பு - 15:15.

(படிக்க 1 கொரிந்தியர் 1:27.28)


மேசொப்போத்தமியர் , மோவாபியர், பெலிஸ்தியர், எமோரியர், கானானியர், மீதியானியர், அம்மோனியர், கிழக்கத்தி புத்திரர் போன்ற மக்கள் இஸ்ரவேலரை கானான் தேசத்தில் ஒடுக்கினர்.


இப்புத்தகம் எனக்குக் கூறும் செய்தி என்ன?


கர்த்தர் எப்போதும் எவரையும் மன்னித்து ஏற்றுக் கொள்வார். ஆனால் மனத்திரும்புதல் மிக மிக அவசியம். கர்த்தர் தம் மக்களை சீர்ப்படுத்த எவரையும் எந்த பொருளையும் பயன்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.


கர்த்தரின் மன்னிப்பையும் கிருபையையும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. எனவே உண்மையான திரும்புதளையும், உறுதியான அர்ப்பணிப்பையும் கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

No comments:

Post a Comment