Search This Blog

Thursday 19 January 2012

சங்கீதம் விளக்கவுரை

சங்கீதப் புத்தகம் ஐந்து பாகங்கள் அல்லது பிரிவுகளாக காணப்படுகின்றது. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஸ்தோத்திர வாழ்த்தோடு ஆமென், ஆமென் என்ற வார்த்தைகள் வருவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு பிரிவிலுமுள்ள கடைசி சங்கீதத்தின் இரண்டு வசனங்களை எடுத்து படியுங்கள். இந்த 5 பாகங்களும் வேதாகமத்தின் முதல் 5 புத்தகங்களை போல காணப்படுகின்றன.

1 - 41 ( படைப்பு)
42 - 72 ( மீட்பு )
73 - 89 ( பரிசுத்தம்)
90 - 106 ( அலைந்து திரிதல்)
107 - 150 ( தேவனைப் போற்றுதல் )

சங்கீத புஸ்தகத்தை எபிரேய மொழியில் “தெஹில்லீம்”(Tehillim) என்று அழைப்பர். இதன் பொருள் “துதியின் பாடல்கள்” என்பதாகும். கிரேக்க மொழிப்பெயர்ப்பான செப்தஜ்வெந்தில் இதனை “ப்சால்மொய்”(Psalmoi) என்று அழைப்பர். இதன் பொருள் “ இசைக் கருவிகளுடன் பாடப்பட்ட பாடல்” என்பதாகும். இலத்தீன் மொழியில் இதன் தலைப்பு “லிபெர் ப் சால் மோரம்”(Liber Psalmorum) என்பதகும். இதன் பொருள் சங்கீதங்களின் புத்தகம் என்பதே.


சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.

சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.

தாவீது 73 சங்கீதங்களையும், மோசே 1-ம், சாலமோன் 2-ம், ஆகசாப் 12-ம், ஏமான் 1-ம், ஏத்தான் 1-ம், கோராகின் புத்திரர்கள் 10சங்கீதங்களையும் எழுதி உள்ளனர். மீதமுள்ள 50 சங்கீதங்களின் ஆசிரியர்கள் யாரென்று தெரியவில்லை.

தமிழ் வேதத்தில் 150 சங்கீதங்களும் அவைகளில் 2026 வசனங்களும் உள்ளன.

சங்கீதங்கள் ஏறக்குறைய கி.மி 1500 முதல் கி.மு 450 வரை உள்ள காலக்கட்டத்தில் இஸ்ரவேல், பாலஸ்தீனா மற்றும் பாபிலோனில் வைத்து எழுதப்பட்டதாகும்.

புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.

சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.

சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது – சங் 15,70,93,100,125.

சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.

“சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment