Search This Blog

Sunday 8 January 2012

ரூத்



ஆசிரியர்: சாமுவேல் எனக் கருதப்படுகிறது. ஆனால் இதை உறுதி செய்ய இயலாது.

காலம்: சுமார் கி.மு.1050 க்குப் பின். கி. மு. 1040 - 970 வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது .

அதிகாரங்கள்: 4

மொத்த வசனங்கள்: 85

திறவு கோல் வசனம்: 2:12

எழுதப்பட்ட நோக்கம்: 1. எக்கால சூழலிலும் கர்த்தரை சார்ந்து வாழும் நல்ல முன்னுதாரணங்கள் உண்டு என்பதை உறுதிப் படுத்தும்படி எழுதப்பட்டது.

2.தன்னை நம்பும் எவரையும் எத்தேசத்தாரையும் கர்த்தர் கைவிட மாட்டார் என்ற உண்மையை விளக்கும் வரலாற்று நூல்.

3.தன்னால் படைக்கப்பட்ட எவரையும் தன் மீட்பின் திட்டத்தில் இணைத்துக் கொள்கிறார் ( ரூத் ஒரு மோவாபிய பெண் ) என்பதை இப்புத்தகம் எடுத்துக் கூறுகிறது.

சிறப்புக் குறிப்புகள்: 1. யூத சமுதாயத்தில் பின்பற்றப்பட்ட திருமண ஒழுங்குகளை இப்புத்தகத்தின் வழியாக அறிய முடிகிறது.

2.ரூத் புத்தகம் சுமார் 12 ஆண்டுகளில் நடைபெற்ற வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.

3.ரூத் வாழ்ந்த காலத்திற்கு பின் சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் மேசியாவாக கிறிஸ்து பிறந்தார்.


முக்கிய நபர்கள்: போவாஸ் - தேவன் என் பெலன்
நகோமி - என் இனியவர் (அ) இன்பம்
ரூத் - தோழி (அ) நட்பு

சம்பவ சுருக்கம் :
மோவாபின் சேற்றிலிருந்து மலர்ந்த செந்தாமரை தான் ரூத் என்னும் பெண்.
சுமார் கி. மு. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பின் பகுதியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. இதன் நிகழ்வு நியாயாதிபதிகளின் இருண்ட காலம். நியாயாதிபதிகளின் காலத்தில் நடந்த ஒரு குடும்ப நிகழ்வே ரூத் என்னும் நூல். இந்நூல் தாவீதின் ஆட்சிக் காலத்திலும் சாலமோனுக்கு முன்பும் எழுதப்பட்டிருக்க வேண்டும். உறுதியற்ற விசுவாச வாழ்வை காண்பித்த காலங்களில் உறுதியான விசுவாச வாழ்வுக்குரிய எடுத்துக்காட்டாக ரூத்தின் புத்தகம் அமைந்துள்ளது. தேவ பக்தி இல்லாத காலங்களில் பக்தியாய் வாழ்ந்த பெண்ணின் கதை.

ரூத் என்னும் எபிரேய பதத்தின் அரத்தம் திருப்தி / நட்பு / நண்பி / தோழி.
ரூத்தின் நிகழ்வுகள் நடைபெற்ற காலம் இஸ்ரவேலர் கானானை அடைந்து சில ஆண்டுகளுக்குள்ளே நடந்ததாகும் எனலாம். ரூத் புத்தகம் சுமார் 12 ஆண்டுகளில் நடைபெற்ற வரலாற்றை எடுத்துக் கூறுகிறது. போவாசின் தந்தையான சல்மோன், எரிகோவின் வேசியான ராகாப்பை மணம் செய்தவர். (மத்தேயு 1:5).  சல்மோனுக்கும், ராகாபிற்கும் போவாஸ் பிறந்து 50 ஆண்டுகள் கூட ஆகியிருக்காது. நியாயாதிபதிகளின் நூலில் வரும் மோசேயின் பேரனான லேவியன் (நியாய 18:30), ஆரோனின் பேரனான பினெகாஸ் (நியா 20: 28)  ஆகியோர் வாழ்ந்திருந்த காலத்திலேயே ரூத் நிகழ்ச்சிகள் நடந்திருக்க வேண்டும். 

சுதந்திரம்/ சுதந்திரவாளி போன்ற வார்த்தைகள் சுமார் 15 முறை இடம் பெறுகிறது. ரூத் என்ற சொல் 12 தடவைகள் இடம் பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment