Search This Blog

Tuesday 13 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை எரித்த இடம் எது?
      கீதரோன் ஆற்று ஓரம்/வெளிகளில் (23:4-6)
2. தகப்பனை கொலை செய்தேன், மகனை கட்டி வைத்தேன் - நான் யார்?
       பார்வோன் நேகோ (23:29-33)
3. எருசலேமுக்கு எதிரான மலை பெயர் என்ன?
      நாசமலை (23:13)
4. அரசாட்சி செய்த யோசியாவின் குமாரர்கள் எத்தனை பேர்?
      3 (23:30,34, 24:17,18 )
5. சகோதரர்களான எங்கள் இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு - அவை என்ன?
      பெயர் மாற்றம், அரசாட்சி காலம் - 11 வருடம் (23:34-38, 24:17,18)
6. மூன்று மாத காலம் அரசாட்சி செய்தவர்கள் யார்?
      யோவாகாஸ், யோயாக்கீன் (23:31, 24:8)
7.  ஆலயத்தில் புஸ்தகம் கண்டெடுத்தது யார்?
      இல்க்கியா (22:8, 23:24)
8. பஸ்கா ஆசரித்த ராஜா யார்?
      யோசியா (23:21-23)
9. யோசியா எவைகளை தொடுவதற்கு அனுமதிக்கவில்லை? 
     தேவனுடைய மனுஷனின் எலும்புகளை (23:17,18)

No comments:

Post a Comment