Search This Blog

Thursday 21 July 2016

யோசுவா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1.  5 ராஜாக்களை ஒரே நாளில் கொலை செய்தவன் யார்?
      யோசுவா (10:26)
2. யார் பேச்சை கேட்டு, சுற்றுபவை நின்றன?
      யோசுவா (10:12,13)
3. கிபியோன் குடிகளுக்கு, விரோதமாய் கூடின ராஜாக்கள் எத்தனை பேர்?
      ஐந்து (10:5,6)
4. பட்டயத்தை விட, எதினால் அழிந்தவர்கள் அநேகர்?
      கல்மழையினால் (10:11)
5. உதவி செய்ய போய், மாட்டிக் கொண்டவன் யார்?
      ஓராம் (10:33)
6. ராஜதானி பட்டணங்ககளில் ஒன்றைப்போலவும் ஆயியைப்பார்க்கிலும் பெரிய பட்டணம்  எது ? அந்த பட்டணத்து பலசாலிகளை  பார்த்து பயந்த ராஜா யார்?
கிபியோன், எருசலேமின்  ராஜாவாகிய அதோனிசேதேக்
யோசுவா10:-1,2
7. பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் அதிகமாக செத்தவர்கள் எதினால்? கொன்றது யார் ?
கல்மழையினால், கர்த்தர்
யோசுவா10:-11
8. ஒரு மனிதனுடைய சொல்கேட்டு சூரியனும் சந்திரனும் கீழ்ப்படிந்து எதுவரைக்கும் ? எங்கே நின்றது?
 ஒரு பகல் முழுதும், நடுவானத்தில்
 யோசுவா10:-13

No comments:

Post a Comment