Search This Blog

Saturday 16 July 2016

யோசுவா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் எவற்றை சாப்பிட்ட அடுத்த நாளில், மன்னாவை காணவில்லை?
      தானியத்தாலாகிய புளிப்பில்லா அப்பங்கள், சுட்ட கதிர்கள் (5:11,12)
2. கர்த்தர் யோசுவாவிடம் உண்டுபண்ண சொன்னது என்ன?
      கருக்கான கத்திகள் (5:2)
3. பட்டயம் வைத்திருந்தவராய், யோசுவாவிடம் பேசியது யார்?
      கர்த்தருடைய சேனையின் அதிபதி (5:13-15)
4. யோசுவா இஸ்ரவேலரை விருத்தசேதனம் பண்ணின இடம் எது?
      ஆர்லோத் மேடு (5:3)
5. கர்த்தர்  தண்ணீரை வற்றிப்போகப் பண்ணினதை கேள்விப்பட்டபோது அவர்களுடைய இருதயம் கரைந்துபோயிற்று அவர்கள் யார்?
எரிகோவின் ஐனம் ராகாப், எமோரியரின் சகல ராஜாக்களும், கானானியரின் சகல ராஜாக்களும்
யோசுவா2:-1,11; யோசுவா5:-1
6. உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என யார், யாருக்கு சொன்னது?
 கர்த்தர் யோசுவாவுக்கு
யோசுவா5:-15

No comments:

Post a Comment