Search This Blog

Sunday 17 July 2016

யோசுவா அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. யுத்த ஜனங்கள் பேசாமலிருந்த நாட்கள் எத்தனை?
     ஆறு (6:10-16)
2.  சுற்றோ சுற்று, 6⃣ நாட்கள் ஒரு முறை, 7 - வது நாள் எத்தனை முறை? 
      ஏழு (6:3,4,14,15)
3. பட்டணம் கட்டினால், பிள்ளைகளுக்கு சாவு - எப்பட்டணம்?
     எரிகோ (6:26)
4. எரிகோவில் தப்புவிக்கப்பட்ட குடும்பம் யாருடையது?
      ராகாப் (6:17,25)
5. அடைக்கப்பட்ட எரிகோ பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழுவதற்கு இஸ்ரவேலர் எத்தனைநாள் , எத்தனை தடவை சுற்றிவந்தார்கள்?
ஏழுநாள், 13 தடவை
யோசுவா6:-3, 4, 14, 15
6. யோசுவா ஆசாரியரை  அழைத்து கர்த்தருடைய  உடன்படிக்கை  பெட்டிக்கு முன்பாக எத்தனை ஆசாரியர்களை  எத்தனை எக்காளங்களை பிடித்துக்கொண்டு போக சொன்னார்?
ஏழு ஆசாரியர்கள், ஏழு எக்காளங்கள்
யோசுவா6:-6,8,13
7. பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள் அதில் கர்த்தருக்கு  பரிசுத்தமானவைகளை  எங்கே சேர்த்தார்கள், அவை எவை?
கர்த்தரின் ஆலயப் பொக்கிஷத்தில், வெள்ளி, பொன், வெண்கலத்தினாலும்  இரும்பினாலும்  செய்த பாத்திரங்கள்
யோசுவா6:-24

No comments:

Post a Comment